Friday, February 6, 2015

சனி பெயர்ச்சி, விருச்சிக ராசிக்கு செல்லும் சனிபகவான் லக்கின வாரியாக தரும் பலன்கள் - மீனம்


சனி பகவான்  திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 02-11-2014 ஞாயிறு கிழமை அன்று இரவு 08-54 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். விருச்சிக ராசியில் சனி சுமார் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார், இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு லக்கினத்தை சார்ந்தவர்களுக்கும் சனி பகவான் வழங்கும் யோக அவயோக பலன்களை பற்றி நாம் இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!   


ஜோதிடதீபம் ராசியை அடிப்படையாக வைத்து சனி பெயர்ச்சி பலன்களை வழங்காமல், ஏன் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் சொல்லுகிறது என்ற சந்தேகம் சிலருக்கு வரக்கூடும், லக்கினம் என்பதே ஜாதகத்திற்கு அடிப்படையானது, இந்த லக்கினம் எனும் முதல் பாவகத்தை வைத்தே ஒருவருக்கு சரியான ஜாதக பலன்களை சொல்ல இயலும், ராசியை வைத்து சொல்வது என்பது, பொது பலன்களாகவே இருக்குமே தவிர ஒரு ஜாதகருக்கு தெளிவான பதிலையும், பலன்களையும் தர வாய்ப்பில்லை என்பதால் ஒவ்வொரு லக்கினத்தருக்கும், இந்த சனி பெயர்ச்சி எவ்வித பலன்களை தருகிறது என்று தெளிவாக இனி வரும் பதிவுகளில் காண்போம்.

அடிப்படையில் ஒரு விஷயத்தில் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் அன்பர்களே! சனி பகவான் தற்பொழுது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார், இனி வரும் 30 மாதங்கள் சனி பகவான் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்கிறார், விருச்சிகத்தில் அமர்ந்து  6ம் பார்வையாக மேஷ ராசியையும், 7ம் பார்வையாக ரிஷப ராசியையும், 10ம் பார்வையாக சிம்ம ராசியையும் பார்ப்பதால் இந்த ராசிகளுக்கு திருஷ்டி பலன் என்ற அமைப்பில் பலன் தருகிறார்.

இலக்கின ரீதியாக பலன்கான முனையும் அன்பர்கள் அனைவரது ஜாதகத்திலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை ஏற்று நடத்தும் பாவகம் கிழ்கண்ட ராசிகளில் அமைந்தால் மட்டுமே ( அதாவது விருச்சிகம்,மேஷம்,ரிஷபம் மற்றும் சிம்மம் ஆகிய ராசிகள் எந்த எந்த பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலனை தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் ஆகியவை தொடர்பு பெறுதல் ) ஜாதகருக்கு தற்பொழுது பெயர்ச்சி பெற்று இருக்கும் சனிபகவான் நன்மையையோ, தீமையையோ செய்வார் என்பதை கருத்தில் கொள்க, எனவே தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட ராசிகளுடன் தொடர்பு பெருகின்றத என்பதை கவனிப்பது மிக முக்கியமானதாக ஜோதிடதீபம் அறிவுறுத்துகிறது . 


மீன லக்கினம் :

மீன லக்கினத்தை சார்ந்த அன்பர்களே ! தங்களுக்கு 9ல் அமர்ந்த சனி பகவான் 9ம் பாவகத்திர்க்கு அவ்வளவு நன்மையை தருவதாக தெரியவில்லை, தாங்கள் 9ம் பாவக வழியில் இருந்து உயர்கல்வி  மற்றும் சீரிய முயற்ச்சிகள் சில நேரங்களில் தோல்வியை  தரக்கூடும், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கமால் சில நேரங்களில் அவதியுற நேரலாம், ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள் சில தடைகளை சந்திக்கும் தன்மையை தரும், தன்னை விட வயதில் அதிகமுள்ள பெரிய மனிதர்ர்களின் ஆலோசனை படி நடந்துகொள்வது சாலசிறந்தது, இல்லை எனில் தேவையில்லாத அவ பெயர் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது, வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை, எதிர்பாராத விபத்துகள் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், திடீர் மருத்துவ செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் தவிர்க்க இயலாது என்பதை கவனிப்பது நலம், ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வது தங்களுக்கு சிறந்த உடல் நலனை பெற்று தரும், அதிக முதலீடு மற்றும் மற்றவரை நம்பி செய்யும் காரியங்கள் பெரிய பின்னடைவை சந்திக்கும், அதிக எச்சரிக்கை தேவை இனிவரும் காலங்களில்.

6ம் பார்வையாக மேஷத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களுக்கு, வாக்கு மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை தந்த போதிலும், அளவுக்கு அதிகமான முறையற்ற செல்வத்தை வாரி வழங்க கூடும், எதிர்பாராத பணவரவுகள் தங்களை ஒரு நிமிடம் செயல் இழக்க செய்யும், இந்த நேரங்களில் அதிக சிந்தனையும், சரியான செயல்பாடுகளும் தங்களது வாழ்க்கையில் நன்மைகளை ஏற்ப்படுத்தும், ஒருநாள் இடைவெளியில் பொருள் வரவு தாரளமாக வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உண்டு, அதே சமயம், இதற்க்கு நிகரான குடும்ப பிரச்சனைகளும் தலைதூக்கும், சமாளிப்பது தங்களின் திறமை, முன்னுக்கு புறநான வார்த்தைகள் தங்களை வெகுவாக பதம் பார்க்கும், இதனாலும் பொருள் வரவு உண்டாகும், எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் வாக்கு கொடுப்பது தங்களை நிலை குலைய செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், தங்களின் பொருளாதார வெற்றி இனிவரும் காலங்களில் அபரிவிதமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி, குடும்பத்தில் அதிக அனுசரிப்பும் விட்டுகொடுத்து செல்லும் மனப்பக்குவமும் மிகப்பெரிய எதிர்காலத்தை உருவாக்கும்.

7ம் பார்வையாக வீர்ய ஸ்தானத்தை வசீகரிக்கும் சனிபகவான் தங்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்குகிறார், இதுவரை நிலுவையில் நின்ற பணம் யாவும் வந்து சேரும், சமுதாய அந்தஸ்த்து அதிகரிக்கும், ஏஜென்சி துறையில் உள்ளவர்களுக்கு அபரிவிதமான லாபங்கள் வந்து குவியும் யோக காலமாக இதை கருதலாம், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும், மருத்துவ துறையில் உள்ள அன்பர்களுக்கு லாபம் கொழிக்கும் , ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் உள்ள அன்பர்களுக்கு மிக சிறப்பான வெற்றிகள் உண்டாகும், விளையாட்டு துறையில் பல சாதனைகளை செய்யும் வாய்ப்பு உண்டாகும், தொழில் துறையில் உள்ள அன்பர்களும், தொழிலாளர்களும் அபரிவிதமான லாபங்களை பெறுவார்கள், வட்டி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத வருமானங்கள் வந்து குவியும், கட்டிடம் மற்றும் கட்டுமான துறைகள் சரிவை  சந்தித்து மிகப்பெரிய வளர்ச்சியை பெரும் என்பதால், இந்த துறையில் உள்ள அன்பர்கள் மிகுந்த லாபத்தை நிச்சயம் பெறுவார்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் அதிகரிக்கும், மீன இலக்கின அன்பர்களுக்கு இந்த சனியின் 7ம் பார்வை சகல நலன்களையும் தருகிறது.

10ம் பார்வையாக ரண ருண ஸ்தானத்தை பார்வை செய்யும் சனிபகவான் தங்களுக்கு, வயிறு சார்ந்த தொந்தரவுகளை கடுமையாக கொடுக்க கூடும் , கடன் வாங்குவது கொடுப்பது, பெரிய பின்னடைவை சந்திக்கும், வீண் மருத்துவ செலவுகளும் உடல் நல சீர்கேடுகளும் தங்களை வெகுவாக பாதிக்கும், தன்னபிக்கை வெகுவாக குறையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக சிரமங்களை  எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரக்கூடும், மனோ ரீதியான தொந்தரவுகளும், எதிரிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும், எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆய்வு செய்து செயல்படுவது நலம் தரும், நெடுந்தொலைவு பயணங்களில் அதிக பாதுகாப்பு தேவை, சிந்தனை திறன் குறையும் என்பதால் தாங்கள் அனைவரும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்து வருவது சால சிறந்த நன்மைகளை வாரி வழங்கும், எதிரிகளின் சூழ்ச்சியே தங்களுக்கு சாதகமாக மாற அதிக வாய்ப்பு உண்டு, பெண்கள் தங்களது உடல் நலனில் அதிக அக்கறை கொள்வது நல்லது குறிப்பாக வயிறு மற்றும் முதுகு எலும்பு சார்ந்த தொந்தரவுகள் வெகுவாக பாதிக்கும், யாரிடமும் பகைமை பாராட்டாமல் நன்மைகளை மட்டும் செய்வது தங்களின் பூர்வ புண்ணிய பலன்களை அதிகரிக்கும்.

மீன இலக்கின அன்பர்களே ! தங்களுக்கு தற்ப்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட 9,2,3,6ம் பாவக பலன்களை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு கோட்சார சனிபகவானின் கோட்சார யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்திகள் மேற்கண்ட 9,2,3,6ம் பாவக பலனை ஏற்று நடத்த வில்லை எனில், எவ்வித நன்மை தீமையும் தங்களுக்கு நடைமுறையில் வர வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்வது நல்லது வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696  

No comments:

Post a Comment