சனி, 28 பிப்ரவரி, 2015

களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகரின் நிலை என்ன ?

 

சுய ஜாதகத்தில் எந்த ஒரு பாவகமும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து மிகுந்த துன்பத்தை தரும், மேலும் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் களத்திர பாவகம் ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது களத்திர பாவக வழியில் இருந்து மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாக்கும், உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

ஒருவரது ஜாதகத்தில் கேந்திர பாவகங்கள் என்று அழைக்கப்படும் 1,4,7,10ம் வீடுகள் ( நமது ஜோதிடத்தில் 1ம் பாவகம் சம வீடாக எடுத்துகொள்வோம் ) மிக வலிமையுடன் இருப்பது அவசியம், ஒரு நாற்காலிக்கு எப்படி நான்கு கால்களும் முக்கியமோ அதை போன்றதே கேந்திர பாவகங்கலான 1,4,7,10ம் வீடுகள், ஒருவரது ஜாதகத்தில் 1ம் வீடான லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் தனது உடல்,மனம்,ஆயுள்,புகழ்,கீர்த்தி,ஒழுக்கம்,செயல்திறனில் காணும் வெற்றி என்ற வகையில் யோக பலன்களையும், 4ம் வீடான சுக ஸ்தானம் வலிமை பெரும் பொழுது சொத்து,சுகம், வண்டி வாகன யோகம், நல்லகுணம், சிறந்த வசதி மிக்க வீடு, நிலபுலன்கள் என்ற வகையில் யோக பலன்களையும், 7ம் வீடான களத்திர ஸ்தானம் வலிமை பெரும் பொழுது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் ஆதரவு, சிறந்த இல்லற வாழ்க்கை, நல்ல நண்பர்கள் சேர்க்கை, வெளியில் இருந்து வரும் ஆதரவு, பொதுமக்கள் செல்வாக்கு, நண்பர்களின் ஒத்துழைப்பு, கூட்டாளிகளின் எதிர்பாராத ஆதரவு என்ற வகையில் யோக பலன்களையும், 10ம் வீடான ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது, சிறந்த தொழில் மற்றும் வேலை வாய்ப்பு, சமுதாயத்தில் கிடைக்கும் மரியாதை சுய கௌரவம், அந்தஸ்து மதிப்பு மிக்க பதவிகள், பொருளாதார ரீதியான வெற்றிகள், எங்கு சென்றாலும் கிடைக்கும் வெகுமதிகள், பாராட்டுகள் பொதுவாழ்க்கையில் கிடைக்கும் அங்கீகாரம் என்ற வகையில் யோக பலன்களையும் வாரி வழங்கும்.

மேற்கண்ட நன்மைகளை சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் பாவக தொடர்புகள் அமைப்பில் வலிமை பெரும் பொழுது ஜாதகருக்கு தங்குதடையின்றி வாரி வழங்கும், எந்த காரணத்தை கொண்டும் மேற்கண்ட வீடுகள் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெறுவது அதிக இன்னல்களையும், பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது 200% விகித இன்னல்களையும் வாரி வழங்கும், ஒருவேளை மேற்கண்ட வீடுகள் 6,8,12ம் வீடுகளுடன் தொடர்பு பெற்றோ, அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ தற்பொழுது நடைபெறும் திசையும், தொடர்பு பெற்ற 6,8,12 மற்றும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும், பாரம்பரிய ஜோதிடர்கள் இந்த வகை இன்னல்களுக்கு சனி பகவான் மீதும், ராகுகேது மற்றும் பாவ கிரகங்களின் மீது குற்றம் சாற்றுவது இயற்கையான விஷயமாகவே அமைந்து விடுகிறது.

கிழ்கண்ட ஜாதக அமைப்பில் இருந்து சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவோம் அன்பர்களே !


இலக்கினம் : தனுசு 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

இந்த ஜாதகிக்கு கேந்திர பாவகங்கள் எனும் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு, 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு திடீர் இழப்பை தரும் 8ம் வீடான விருச்சிக ராசியாக அமைந்தது பெரிய பின்னடைவு, மேலும் 12ம் வீடு ஸ்திர நீர் ராசியாக அமைவது ஜாதகியின் மனதை வெகுவாக ஆளுமை செய்து மன போராட்டம், மனக்கவலை, தீர்வு காண இயலாத வண்ணம் மனக்குழப்பம் ஆகியவற்றை ஸ்திரமாக தொடர்ந்து தீய பலன்களை வாரி வழங்கி கொண்டே இருக்கும்.

ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசை நன்றாக வாழவேண்டிய வயதில் வந்து 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று ( 05/07/2003 முதல் 05/07/2021 வரை ) 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது மிகுந்த கவலைக்கு உள்ளாக்குவதாகவே இருக்கின்றது, பொதுவாக ஜோதிடதீபம் இதற்க்கு முன் பதிவு செய்த கட்டுரைகளில் 8ம் வீடு என்பது ஒரு ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோக வாழ்க்கையை குறிப்பதாக விளக்கம் தந்து இருப்போம், இந்த ஜாதகிக்கு கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடான விருச்சிகம் 12ம் பாவகமாக அமைந்து, நடைபெறும் ராகு திசை இந்த விருச்சிகத்தில் அமைந்த 12ம் பாவக பலனை ஸ்திரமாக ஏற்று நடத்தியதின் விளைவும், சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றதின் விளைவும், ஜாதகியை திருமண வாழ்க்கையில் அளவில்லா இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவிக்க வைத்தது, லக்கினம் எனும் முதல் பாவகமும் பாதக ஸ்தானதுடன் தொடர்பு பெற்றதால் ஜாதகி சரியான தீர்வுகளையும், நல்ல வழிகளையும் பின்பற்ற இயலாத சூழ்நிலையை தந்து பல இன்னல்களுக்கு தானும் காரணமாகவே அமைந்துவிட்டார் என்பது கண்கூடான உண்மை.

இதற்க்கு தீர்வு என்ன ? என்ற கேள்விக்கு ஜோதிடதீபம் பரிந்துரை செய்யும் விஷயம் 1) ஜாதகி முதலில் தனது ஜாதக வலிமையின் உண்மை நிலையை உணர்வது அவசியம், 2) தனது ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை அற்ற நிலையின் காரணமாகவே தனக்கு பல இன்னல்கள் வருகின்றது என்ற அடிப்படை உண்மையை புரிந்துகொள்ள முயற்ச்சி செய்வது அவசியம் ( ஜாதகிக்கு இது சற்று சிரமம்தான் ஏனெனில் லக்கினமும் பாதக ஸ்தானத்துடன் அல்லவா தொடர்பு பெற்றுள்ளது ) 3) தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்றுகொள்வது நல்லது சிறிது காலம் சிரமமாக இருந்த போதிலும், வினைபதிவின் தன்மை வெகுவாக குறையும், 4) நண்பர்கள் வெளிவட்டார பழக்க வழக்கங்களை எச்சரிக்கையாக கையாள்வது சிறந்த நன்மையை தரும். 5) சிறந்த ஆன்மீக குருவிடம் தீட்சை பெறுவது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை தரும், 6) திருவெண்காடு திருத்தலம் சென்று முக்குண நீராடி நலம் பெறுவது ஜாதகிக்கு சகல நிலைகளில் இருந்தும் யோக வாழ்க்கையை வாரி வழங்கும்.

ஜாதகிக்கு அடுத்து வரும் குரு திசை 3,9ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக பலனை ஏற்று நடத்துவதால் வாழ்க்கையில் சிறந்த நன்மைகள் நடைபெற யோகம் உண்டாகும், ராகு திசையின் விரைய ஸ்தான பலன்களின் பிடியில் இருந்து மீண்டு, குரு திசையில் ஜீவன ஸ்தான வழியில் இருந்து யோக பலன்களை அனுபவிப்பர் என்பது நிதர்சனமான உண்மை ராகு திசையை மிக கவனமாக எதிர்கொள்ளுங்கள், வாழ்த்துகள். 

குறிப்பு :

" பூராடம் நூலாடாது " என்ற பழமொழிக்கும் இந்த ஜாதகதிர்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அன்பர்களே! சுய ஜாதகத்தில் பாவக வலிமை இல்லாத காரணத்தினாலேயே ஜாதகிக்கு திருமண வாழ்க்கை சிறப்பில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியம், 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக