Tuesday, February 17, 2015

பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் வழங்கும் அறிவுத்திறன் !
பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் ஒருவரின் சுய ஜாதகத்தில் வலிமை பெறுவதால் ஜாதகர் பெரும் அறிவு திறனின் செயல்பாடுகள் பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே ! சுய ஜாதக அமைப்பில் புத்திர பாக்கியம்,குல தெய்வத்தின் அருளாசி மற்றும் ஜாதகரின் சமயோசித புத்திசாலித்தனம் மற்றும் ஜாதகர் தனது பூர்வீக அமைப்பில் இருந்து பெரும் யோக வாழ்க்கை அனைத்தையும், ஒன்று சேர வழங்குவது 5ம் பாவகமான பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றால் அது மிகையில்லை,.

 பொதுவாக ஜாதகம் காணும் பல ஜோதிடர்கள் 5ம் பாவகத்தை பற்றி சிறப்பித்து கூறுவது உண்டு, ஏனெனில் ஜாதகரின் அறிவுத்திறனை நிர்ணயம் செய்யும் பாவகம் என்பதால் 5ம் பாவகத்திர்க்கு இந்த பெருமை நிச்சயம் உண்டு, ஜாதகத்தில் மற்ற பாவகங்களின் வலிமை ஒவ்வொரு விதத்தில் யோக பலனை தந்த போதிலும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வழங்கும் பலன் என்பது ஜாதகரை சிறப்பு தகுதிகளுடன் பரிணமிக்க செய்யும் என்பது கவனிக்க தக்கது, ஜாதகரை அமர்ந்த இடத்தில் இருந்து உலக பிரசித்தி பெற வைக்கும் வல்லமை இந்த 5ம் பாவகத்திற்கு உண்டு, பரம்பரை பரம்பரையாக முன்னோர்களின் வழியில் இருந்து ஜாதகருக்கு கிடைக்கும் அறிவாற்றலின் தனி தன்மையை பிரகாசிக்க செய்யும் வல்லமை 5ம் பாவகத்திற்கு உண்டு என்றால் அது மிகை அல்ல அன்பர்களே !

இந்திய மண்ணில் பாரம்பரியம் மிக்க பல விஷயங்களை வியப்புடன் மற்ற நாட்டினர் பார்ப்பதற்கு இந்த 5ம் பாவகம் காரணமாக அமைகிறது, என்ற உண்மை இந்திய மண்ணில் பிறந்த நமக்கே இன்னும் தெரியவில்லை என்பது ஒருபக்கம் இருந்த போதிலும், நமது முன்னோர்களின் அறிவு திறனின் செயல்பாட்டிற்கு ஒரு எல்லையே இல்லை என்பதே வியப்புக்கு உரிய ஒன்றாகவே கருதலாம், வணிக மேலாண்மை, வானியல் கண்டுபிடிப்புகள், கால கணிதம், கிரக,நட்சத்திர சூட்சம ஆய்வு, வருமுன் உணரும் முற்போக்கு சிந்தனை, விவசாய நெறிமுறைகள், ஆரோக்கியமான வாழ்விற்கான உணவு பழக்க வழக்கம், மருத்துவத்தில் நோய் தீர்க்கும் முறைகள், இறை வழிபாட்டில் சிறப்பு, மனிதர்களையும் விலங்குகளையும் அரவணைத்து செல்லும் பாங்கு, தனி மனித முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் என அனைத்து விஷயங்களிலும் சிறப்பான வெற்றிகளை காண்பதற்கு உண்டான விதிகளை வகுத்து வைத்தது அதன் வழியில் சிறப்பான மனித குல தோன்றுதலுக்கு ஆதாரமாக விளங்கியது நமது முன்னோர்களின் அறிவுத்திறன் என்றால் அது மிகையில்லை, அதற்க்கு காரணமாக அமைந்தது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகமே என்றால் இதை மறுக்கவும் இயலாது.

5ம் பாவகம் மற்றும் குல தெய்வம் என்ற ஒரு விஷயத்துடன் இணைத்தது, பாரம்பரியமாக தனது முன்னோர்கள் தனது வாரிசுகளுக்கு சொல்ல வேண்டிய சரியான அதே சமயம் உண்மையான விஷயங்களை குல தெய்வ வழிபாட்டின் மூலம் நாம் தெளிவாக உணராலாம், பாரம்பரியமாக தனது முன்னோர்களின் அறிவு  மற்றும் செயல்பாடுகளின் தன்மையை அவர்களின் வாரிசுகள் தெளிவாக புரிந்துகொள்ள இந்த குல தெய்வம் வழிவகுத்தது, அதன் வழியில் அவர்களின் வாரிசுகள் சிறப்பான வெற்றிகளையும், சரியான திட்டமிட்ட செயல்பாடுகளின் வழியில் முன்னேற்றங்களை மிக எளிதாக பெறுவதற்கு உண்டான வாய்ப்பை, இந்த குல தெய்வ வழிபாடு தருகிறது  என்பது நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க தக்க விஷயமாக உள்ளது, பொதுவாக 5ம் பாவகம் வலிமை பெறுவதால் ஜாதகர் யாருடைய உதவியும் இன்றி தன்னிச்சையாக தனது செயல்களிலும், முயற்ச்சிகளிலும் வெற்றி காண இயலும் என்பது கண்கூடான விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.

இதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றனர் என்பது கடந்த சில வருடங்களில், இந்தியர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையில் இருந்து தெரியவரலாம் ( ஒரு வகையில் அவர்களின் தேடுதல்களுக்கு உண்டான அறிவு திறன் நம்மிடம் இருப்பதாக கொண்டாலும் கூட ) இந்தியர்கள் இல்லாத நாடே இல்லை எனலாம், இந்தியர்கள் சாதிக்கத விஷயங்களே இல்லை எனலாம், இந்த விஷயங்கள் சாத்திய பட்டது எப்படி என்றால்? அவர்களது ஜாதகத்தில் உள்ள 5ம் பாவகத்தின் வலிமையே அன்றி வேறு எதுவும் இல்லை, புதுமையான சிந்தனை, புதிய யுக்திகள் அனைத்தும் நமது வசம் இருந்த போதிலும் இதன் பயன்பாடுகள் என்பது மற்றவர்களுக்கே போய் சேருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

கல்வியில், புதிய கண்டுபிடிப்புகளில், ஆராய்ச்சியில், கணித துறையில், வணிக துறையில், நிதி நிர்வாகத்தில், மருத்துவத்தில் மேலும் பல துறைகளில் ஒரு ஜாதகரை பிரகாசிக்க வைப்பதில் 5ம் பாவகத்தின் பங்கு மிக அளப்பறியாத ஒன்றாகவே காணப்படுகிறது, நூதன தேடுதலுக்கு உண்டான விளக்கங்களையும், சரியான பதில்களையும் இந்த 5ம் பாவகமே வாரி வழங்குகிறது, மனிதகுலம் செழித்து ஓங்குவதற்கு உண்டான விஷயங்களையும், கருத்துகளையும் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமை இந்த 5ம் பாவகத்திற்கே உள்ளது, விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருங்கே வெற்றிபெற 5ம் பாவகத்தின் வலிமை மிக மிக அவசியம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

5ம் பாவக வலிமையை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒருவரின் அறிவு திறன், சிந்தனை ஆற்றல், சமயோசித புத்திசாலித்தனம் என்று சொல்லாம், குல தேவதையின் அருளாசியுடன் 5ம் பாவக வலிமையின் தன்மைக்கு ஏற்ப சுய ஜாதக வெற்றிகள் அமையும் என்பதால், ஒரு  ஜாதகர் தனது பாரம்பரியம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையில் பின்பற்றிய ரகசிய யுக்திகளை உணர்ந்து, நமது படைப்பின் சாராம்சம் அறிந்து, தமது வாழ்க்கையில் தேடுதல்களின் பூரணத்துவ நிலையை  5ம் பாவக வழியில் இருந்து தனது அறிவு திறனாலும் புத்திசாலிதனத்தாலும் நிச்சயம் பெறுவார், இதற்க்கு இறை நிலையின் அருள் துணைபுரியும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment