Friday, January 8, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - துலா லக்கினம் சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியான துலாம் ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 11ல் ராகு பகவானும், 5ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

துலா இலக்கின சிறப்பு இயல்புகள் :

துலா ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகள் மிகவும் நேர்த்தியான தன்மையில் காணப்படும், அபரிவிதமான மக்கள் செல்வாக்கினையும், முகமதிப்பையும் பெரும் யோகம் உண்டாகும், மக்கள் தொடர்பு மூலம் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை பெரும் அன்பர்களின் ஜாதகத்தில் துலாம் வலிமை பெற்று இருப்பது கவனிக்க தக்கது, இயல்பாக மிதமிஞ்சிய அறிவு திறனையும், சமயோசித புத்தியையும் குறைவின்றி தரும், மற்றவர் வழியை பின்பற்றாமல் தனிப்பட்ட வழிமுறையை கையாளும் யோகம் பெற்றவர்கள், எந்த ஒரு சூழ்நிலையையும் தனது அறிவு திறன் கொண்டு மிக எளிதாக கையாண்டு சரியான தீர்வுகளை தரும் யோகம் பெற்றவர்கள், புதுமை விரும்பிகள், மனதிற்கு எட்டாத விஷயங்களில் தேர்ச்சி பெற்றவர்கள், தன்னம்பிக்கையும் மன உறுதியையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், ஆராய்ச்சி மூலம் பல அறிய புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரர்கள், எந்த ஒரு விஷயத்திலும் சத்தியத்தின் தன்மையை கடைபிடிக்கும் உத்தமர்கள், அறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் கைதேர்ந்தவர்கள், புதிய கருவிகளை கையாளும் வல்லமையும், அதன் செயல்பாடுகளையும் விரைவாக உணர்ந்துகொள்ளும் மதிநுட்பமும் கொண்டவர்கள், நஷ்டத்தில் இயங்கும் எந்த ஒரு தொழிலிலும் சிறந்த நிர்வாக திறமையின் மூலம் மிகப்பெரிய  முன்னேற்றத்தை தரும் வல்லமை பெற்றவர்கள், "புத்தியே துணை" என்பது துலா இலக்கின அன்பர்களுக்கு மிக சரியாக பொருந்தும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு, 12ல் ராகுவும், 6ல் கேதுவும் மிகுந்த இன்னலகளை வழங்கி இருக்க கூடும், 12ம் பாவக வழியில் இருந்து அதிக வீண் விரையங்களையும், மன உளைச்சல்களையும், உடல்  நல பாதிப்புகளையும் தந்திருக்க கூடும், மேலும் மன நிம்மதி இழப்பு, கடன் சுமை, எதிரிகள் தொந்தரவு என வெகுவான பாதிப்புகள் தங்களை பாதித்து இருக்க வாய்ப்புண்டு, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, 11ம் பாவக வழியில் இருந்து ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகுந்த ஸ்திர  தன்மையான லாபங்களை வாரி வழங்கும், எதிர்பாராத அதிர்ஷ்டங்களும், முன்னேற்றங்களும் தங்களுக்கு அபரிவிதமாக அமையும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், திட்டமிடுதல்கள் யாவும் செயல்முறை காணும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது ஸ்திர தன்மையில் லாபகரமாக அமையும், பொது வாழ்க்கையில் பெயரும் புகழும் உண்டாகும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்,  வெளிநாடுகளில் இருந்து நல்ல செல்வாக்கு உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்கள் இல்லம் தேடி வரும், திருமண தடைகள் நீங்கி மணவாழ்க்கை சிறப்பாக அமையும், மனதிற்கு இசைந்த வாழ்க்கை துணை அமையும், தங்களின் மனதில் உள்ள ஆசைகள்  அனைத்தும் நிறைவேறும் யோக காலமாக இனிவரும் 18 மாதங்கள்  அமையும், தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டு யோக பலன்களை பெற "ஜோதிடதீபம்" வாழ்த்துகிறது.

5ல் சஞ்சாரம் செய்யும் கேதுபகவான் தங்களுக்கு 5ம் பாவக வழியில் இருந்து எதிர்பார்த்த நன்மைகளை தங்களுக்கு வழங்கும் என்பது கேள்விக்குறியே, எனவே தங்களது முயற்ச்சிகள் யாவும் பூர்வீகத்திற்கு அப்பார்ப்பட்டு அமைவது உசிதமானத "ஜோதிடதீபம்" கருதுகிறது, தங்களது வாரிசுகளுடன் மிதமான கருத்து பரிமாற்றத்துடன், அறிவுரைகளையும் வழங்குவது அவர்களின் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும், எந்த ஒரு காரியத்திலும் தங்களின் செயல்பாடுகள் ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு அமைவதே தங்களுக்கு நன்மையை தரும், நிறைய கேட்பதும் நிறைய சிந்திப்பதும், குறைவாக பேசுவதும் தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், தமக்கு வரும் நல்ல வாய்ப்புகளை மிக கவனமாக பயன்படுத்தி கொண்டு முன்னேற்றம் பெறுவது அவசியமானதாகும், தங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும், அதிசயத்தக்க மாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தர கேதுபகவான் தயார் நிலையில் இருப்பது மட்டும் கண்கூடான உண்மை, இனிவரும் காலங்களில் தங்களின் குல தெய்வத்தின் அருளாசி தங்களுக்கு வெகுவாக தேவை படும் என்பதால், குல தேவதை வழிபாட்டினை சிறந்த முறையில் மேற்கொள்வது தங்களின் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி துலா இலக்கின அன்பர்களுக்கு 50% விகித "அதிர்ஷ்ட யோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, துலா இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் சிம்ம ராகுவின் மூலம் அதிர்ஷ்டத்தையும், கும்ப கேதுவின் மூலம் நல்ல ஞானத்தையும் பெறுவது கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் துலா இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11 மற்றும் 5ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே துலா இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 11,5ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment