Saturday, January 30, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - தனுசு லக்கினம் சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 9ம் ராசியான தனுசு ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 9ல் ராகு பகவானும், 3ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

தனுசு இலக்கின சிறப்பு இயல்புகள் :

தனுசு ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது,  ஜாதகரின் அறிவு திறனும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், அறிவுபூர்வமான செயல்களில் ஆர்வத்தையும், புதிய சிந்தனைகள் மூலம் வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்துகொள்ளும் வல்லமையை தரும், பிடிவாதம் மிகும் இலகுவான வழிமுறைகளை கையாண்டு வெற்றிகளை பெரும் யோகம் உண்டாகும், சிறந்த நிர்வாக திறமையும், திட்டமிடுதல்களுடன் செயல்களை செய்து தொடர் வெற்றிகளை பெரும் தன்மையை தரும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு உபயோகம் மற்றும் நன்மையை தரும் விதத்தில் அமையும், உடல் ரீதியான உழைப்பைவிட அறிவு ரீதியான உழைப்பை அதிகம் விரும்பும் அன்பர்கள், பாரம்பரியம் ரகசியம் உணர்தல், புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், வரைமுறைக்கு உற்பட்ட சுய கட்டுபாடு, தன்னம்பிக்கை குறையாத மன நிலை, ஆரோக்கியமான உடல் நிலை, முற்ப்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்க்கொள்ளும் தன்மை என ஜாதகரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜாதகரே காரணமாக அமைவார், ஜன வசீகரம் எப்பொழுதும் உண்டு.

கடந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் சஞ்சாரம் செய்து ஜீவன ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு நன்மைகளையும், சுக ஸ்தான அமைப்பில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி மேல் வெற்றியை ஈட்டி தரும், சுய அறிவு திறன் சிறப்பாக செயல்படும், கமிஷன் மற்றும் தரகு தொழில் செய்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வந்து குவிந்த வண்ணமே இருக்கும், சகோதர ஆதரவு பயணங்களில் லாபம், வியாபாரத்தில் விருத்தி, ஏஜென்சி துறையில் தன்னிறைவான வருமானம், புதிய வேலை வாய்ப்புகள், தனது திறமைக்கு உரிய மரியாதை அரசு கௌரவம் கிடைத்தல், தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் காணுதல், காரியங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும் யோகம், திருமண முயற்ச்சிகள் பெரியவர்கள் மூலம் நிறைவேறுதல்,  உயர் கல்வியில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும், இடம் மாறுதல் மற்றும் புதிய சூழ்நிலைகளில் பணியாற்றும் யோகம் உண்டாகும், எங்கு சென்றாலும் தங்களுக்கு வெற்றி கிடைக்கும், மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் இதனால் அதிர்ஷ்டமும் யோகமும் அதிகரிக்கும்.

9ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களுக்கு அதிக அளவில் இன்னல்களே வரக்கூடும் என்பதால், தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது, தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவது மிகப்பெரிய அவமானங்களையும், அவபெயரையும் தரும், சரியான  நேரத்தில் அறிவு திறன் செயல்படாது, ஆன்மீக பெரியோர்களின் ஆசியையும் தீட்சையையும் பெறுவது தங்களின் வாழ்க்கையில் சகல யோகங்களையும் வாரி வழங்கும், சிறப்பு வாய்ந்த ஆன்மீக திருத்தலங்களுக்கு அடிகடி சென்று வருவது தங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும், புத்துணர்வையும் தரும், கல்வி காலங்களில் உள்ள மாணவர்கள் அதிக அளவில் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது, உடல் ரீதியான வரும் சிறு சிறு தொந்தரவுகளையும் உடனடியாக மருத்துவம் செய்துகொள்வது நல்லது, எந்த காரணத்தை கொண்டு மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவது நல்லதல்ல, அதிக அளவில் அலைச்சல் தரும் என்பதால் சரியான திட்டமிடுதல்களுடன் செயல்படுவது தங்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் தரும், பொது வாழ்க்கையில் உள்ள  அன்பர்களுக்கு இனிவரும் காலம் அவ்வளவு சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் அதிக கவனமுடன் செயல்படுவது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் நன்மையை தரும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி தனுசு இலக்கின அன்பர்களுக்கு 50% விகிதம் முயற்ச்சிக்கு உண்டான வெற்றிகளை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, தனுசு இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் வீரிய ஸ்தான வழியில் இருந்து நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் தனுசு இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03 மற்றும் 09ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே தனுசு இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 03,09ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

4 comments:

 1. vanakam sir ungaludaya oru oru edtion num jothidathin oru pudhiya parinamamum ungalidam vandhaal vaalkaiku oru nala vazhi kitdaikum sir......

  ReplyDelete
 2. vanakkam sir,I have paid for my jadhagam(Rs.2000)at beginning of january(jan 4).you have send me the jadhaga kattam n few questions on jan 6.you said you will send the bhavaga details and pariharams ,but until now i didn't receive anything.I personally mailed you but no reply.Pls send the readings as soon as possible.
  Thank you ,
  Regards,
  viruthalakshmi

  ReplyDelete