ஜாதகிக்கு விருச்சிக லக்கினம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம், ஜாதகியின் தாயார் திருமணத்திற்காக பொருத்தம் காண வந்தார், அவர் வைத்த வாதம் தனது மகளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதாகவும், எனவே செவ்வாய் தோஷம் உள்ள வரனையே தேடுவதாகவும், இதுவரை திருமணதிற்காக எடுக்கும் முயற்ச்சிகள் " செவ்வாய் தோஷம் " என்ற ஒரு காரணத்திற்க்காக தடைபட்டு கொண்டு இருக்கிறது என்றும், தனது பெண்ணின் ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள வரனை மட்டுமே சேர்க்க வேண்டு, இல்லையை எனில் ஜாதகி வாழ்க்கையில் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலையையும், மன வாழ்க்கையில் சந்தோசம் அற்ற சூழ்நிலையையும் தரும் என்று இதற்க்கு முன் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் கூறியதாக தெரிவித்தார், மேலும் எனது மகளுக்கு செவ்வாய் தோஷம் உள்ள வரனை மட்டும் பரிந்துரை செய்யுங்கள் என்பதாக அவரது கூற்று அமைந்திருதது.
மேற்கண்ட பெண்ணிற்கு இதுவரை 100க்கு மேற்ப்பட்ட ஜாதகங்களை பொருத்தம் பார்த்தும் திருமணம் நடக்கவில்லை என்றும் கூறினார், சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்ந்து இருக்கின்றது என்ற அடிப்படை விஷயம் அறியாத பொழுது இது போன்ற சுய ஜாதகத்திற்கு உண்மைக்கு புறம்பான கருத்துகள் வருவது இயற்கையே, ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை, நவகிரகங்கள் பாவகங்களில் அமர்ந்து இருக்கும் உண்மை நிலை, பாவகங்களுக்கு கிரகங்கள் தரும் வலிமை வலிமை அற்ற நிலையை கருத்தில் கொண்டு பலாபலன் சொல்வதே ஜோதிடரின் கடமையாகும்.
மேற்கண்ட ஜாதகிக்கு கடந்த நான்கு வருடங்களாக வரன் தேடுகின்றனர், இருப்பினும் திருமணம் கைகூடி வரவில்லை என்பதற்கு என்ன காரணம், சொவ்வாய் தோஷத்தின் உண்மை நிலை என்ன? திருமண தாமதத்திற்கு செவ்வாய் தோஷமே காரணமாக அமைகிறதா ? ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை வலிமை அற்ற தன்மைகள் என்ன? என்பதை இனி ஆய்வு செய்வோம் அன்பர்களே!
ஜாதககிக்கு விருச்சிக லக்கினம், லக்கினம் எனும் முதல் பாவகம் விருச்சிக ராசியில் 235:37:23 பாகையில் ஆரம்பித்து தனுசு ராசியில் 264:54:37 பாகையில் முடிகிறது, எனவே ஜாதகிக்கு லக்கினம் விருச்சிகம் என்ற போதிலும் விருச்சிக ராசியில் 04:23:37 பாகைகள் மட்டுமே பெற்று இருக்கின்றது, தனுசு ராசியில் 24:54:37 பாகைகள் வரை வியாபித்து இருக்கின்றது, ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் விருச்சிக ராசியிலும் சிறிதும், தனுசு ராசியில் அதிக அளவிலும் வியாபித்து இருக்கிறது என்பதே உண்மை நிலை ஆகும் .
ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ரிஷப ராசியில் 55:37:23 பாகையில் ஆரம்பித்து, மிதுன ராசியில் 84:54:37 பாகையில் முடிவடைகிறது. எனவே ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் ரிஷபம் என்ற போதிலும், ரிஷபராசியில் 04:23:37 பாகைகள் மட்டுமே பெற்று இருக்கின்றது, மிதுன ராசியில் 24:54:37 பாகைகள் வரை வியாபித்து இருக்கின்றது, ஜாதகிக்கு லக்கினம் எனும் முதல் பாவகம் ரிஷப ராசியிலும் சிறிதும், மிதுன ராசியில் அதிக அளவிலும் வியாபித்து இருக்கிறது என்பதே உண்மை நிலை ஆகும்.
இதில் செவ்வாய் பகவான் அமர்ந்து இருப்பது ரிஷப ராசியில் என்ற போதிலும் அவர் 40:26:38 பாகையில் அமர்ந்து இருப்பதால், செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கின்றது என்பது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது, ஏனெனில் ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் ஆரம்பிப்பதே ரிஷப ராசியில் 55:37:23 பாகையில்தான், எனவே செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் என்பதே முற்றிலும் உண்மை, இதை உணராமல் ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் என்று (7ல் செவ்வாய்) என்று நிர்ணயம் செய்வது ஜாதக கணிதம் தெரியாத அன்பர்கள் கூறும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.
மேலும் ஒரு தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, அதே தோஷம் உள்ள ஜாதகத்தை திருமண வாழ்க்கையில் இணைப்பது எப்படி நன்மையை தரும் ? வலிமை அற்றவன் ஒரு வலிமை பெற்றவருடன் சேரும் பொழுது அவரது வாழ்க்கையும் நலம் பெரும் என்பதே சத்தியம், மாறாக ஒரு கொடியவனுடன் சேரும் தீயவனுக்கு எப்படி வாழ்க்கை முன்னேற்றமும் யோகமும் பெரும்? அடிப்படையில் ஒரு ஜாதகத்தில் தோஷம் ( வலிமை அற்ற நிலை ) உள்ளதா? என்பதே தெரியாத பொழுது சம்பந்தபட்ட ஜாதகருக்கு எவ்வாறு நாம் வழிகாட்ட இயலும் என்ற கேள்வியை "ஜோதிடதீபம்" இந்த பதிவில் முன் வைக்கிறது.
மேற்கண்ட ஜாதகத்தின் உண்மை நிலையை பற்றி சிந்திப்போம் அன்பர்களே!
ஜாதகத்தில் வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :
1,6,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதிக்கு இலக்கின வழியில் கீர்த்தியும், நல்ல மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்த்தை வழங்கும், 6ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு அதிர்ஷ்டங்கள் ஜாதகிக்கு அடிக்கடி வந்து போகும், உடல் ஆரோக்கியத்தில் கவனத்தையும், வருமுன் காக்கும் விழிப்பு நிலையையும் தரும், 7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை அமைந்த பிறகே ஜாதகியின் முன்னேற்றங்கள் அதிகரிக்கும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும், பொதுமக்கள் ஆதரவும், நண்பர்கள் உதவியும் ஜாதகிக்கு தேடி வரும்.
2,8,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 2ம் பாவக வழியில் இருந்து தனக்கென்று ஒரு குடும்பம் அமைந்த பிறகே ஜாதகிக்கு யோகமும், அதிர்ஷ்டமும் உண்டாகும், இனிமையான பேச்சும், நல்ல வருமானமும் ஜாதகிக்கு இயற்கையாக கிடைக்கும், 8ம் பாவக வழியில் இருந்து தனது வாழ்க்கை துணை மூலம் திடீர் அதிர்ஷ்டங்களையும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து பெரும் யோகத்தை தரும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டத்தையும் முற்போக்கு சிந்தனையும், நேர்மறை எண்ணங்களால் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களை பெரும் யோகத்தையும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு வரும் தன்மையையும் தரும். ( ஜாதகியின் 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் ராசியாகவும், சர காற்று தத்துவத்திலும் அமைவது ஜாதகி தனது வாழ்க்கை துணை, நண்பர்கள், கூடாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து பெரும் 100% விகித யோகத்தை காட்டுகிறது.
5ம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, ஜாதகியின் அறிவு திறனையும், சமயோசித புத்திசாலிதனத்தையும் அதிகரிக்கும், எங்கு சென்றாலும் குல தெய்வத்தின் அருளாசி ஜாதகிக்கு பரிபூரணமாக கிடைக்கும், கல்வியில் சிறந்து விளங்கும் தன்மையையும், கற்ற கல்வி வழியில் இருந்து யோகத்தையும் வாரி வழங்கும்.
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகிக்கு கௌரவம் குறையாத தொழில் முன்னேற்றத்தையும், அரசு உதவி மற்றும் விருதுகளுக்கு தகுதி பெரும் யோகத்தையும், தன்னிறைவான தொழில் வாய்ப்புகளையும், செய்யும் தொழிலில் புகழ் பெரும் யோகத்தையும், கைராசியான தன்மையையும் ஜாதகிக்கு தரும், தனது தாய் வழியில் இருந்து நன்மைகளையும், நீடித்த உதவிகளை வாழ்நாள் முழுவதும் பெரும் யோகம் உண்டாகும், சுய தொழில் வெற்றி பெறும்.
ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள் :
4,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 4ம் பாவக வழியில் இருந்து தனது தந்தை வழியில் இருந்து உதவி அற்ற நிலையையும், தந்தையின் பிரிவையும், அவர் வழியில் இருந்து இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தனது பெயரில் உள்ள சொத்துகள், வண்டி வாகனங்கள் அனைத்தும் வீண் விறையத்தை தரும், சுக போக வாழ்க்கைக்கு அடிக்கடி இடைஞ்சல்கள் வரக்கூடும், ஜாதகியின் குணநலன்கள் வெகுவாக ஜாதகியின் மன நிம்மதியை கெடுக்கும், ஜாதகியின் குணத்தை எவராலும் புரிந்துகொள்ள இயலாது, நல்ல மனம் இருந்த போதிலும் தேவையில்லாத விஷயங்களில் தலையீடு செய்து பொருள் இழப்புக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், 12ம் பாவக வழியில் இருந்து அனைவராலும் தொல்லை, துன்பம், மருத்துவ செலவுகள், மன அழுத்தம் மன உளைச்சல் என ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், மனதை ஒருநிலை படுத்துவது ஜாதகியின் துன்பத்தை குறைக்கும்.
3,9ம் வீடுகள் பதாக ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது, 3ம் பாவக வழியில் இருந்து சகோதர ஆதரவு அற்ற நிலையையும், எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும், பயணங்களில் இன்னல்களையும், முயற்ச்சி இன்மையையும், தாழ்வு மனபான்மையையும், வீரியமற்ற செயல்களால் துன்பங்களையும் தரும், 9ம் பாவக வழியில் இருந்து பித்ரு கர்ம வினை பதிவை தாம் அனுபவிக்கும் தன்மையையும், பெரியவர்கள் ஆசி மற்றும் இறை அருளின் கருணையை பெற ஜாதகி அதிக அளவில் போராட வேண்டி வரும், ஜாதகிக்கு உதவி செய்ய எவரும் முன்வர மாட்டார்கள், தனித்து போராட வேண்டிய சூழ்நிலைகளை தரும், தனது தந்தை வகையறாவில் இருந்து அதிக அளவில் இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்.
ஆக இந்த ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் என்பது இல்லை, செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவமும் தர தேயில்லை, மேலும் வரனின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்று இருந்தால் போதும் திருமணம் செய்யலாம் என்பதே முற்றிலும் உண்மை.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் வெளிவருமா ?
பதிலளிநீக்கு