சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான சிம்ம ராசியில் "ராகு" பகவானும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானமான கும்பராசியில் "கேது" பகவானும் சஞ்சாரம் செய்து, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் ராசியான, கன்னி ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 12ல் ராகு பகவானும், 6ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!
கன்னி இலக்கின சிறப்பு இயல்புகள் :
கன்னி ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு லக்கினம் வலிமை பெரும் பொழுது, தமது தனிப்பட்ட செயல்பாடுகளில் யாரும் தலையீடு செய்வதை சிறிதும் விரும்பாதவர்கள், ஒரு முடிவு செய்யும் முன் நிறையவே சிந்தனை செய்து செயல்படுவார்கள், இயற்கையாகவே அதித தன்னம்பிக்கையும் மன உறுதியும் பெற்றவர்கள், முற்போக்கு சிந்தனையும் சுதந்திர சிந்தனையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள், தாம் எடுக்கும் செயல்களில் எந்த விதத்திலாவது வெற்றியை பெற்றுவிடுவார்கள், புதிய வாய்ப்புகளையும் மற்றவர்களின் தனி திறமைகளையும் தனக்காக சிறப்பாக பயன்படுத்திகொள்ளும் வல்லமை பெற்றவர்கள், தனது கொள்கைகளிலும், லட்சியங்களிலும் சிறிதும் பிறளாது வெற்றியை பெற இறுதிவரை போராடும் குணம் கொண்டவர்கள், குறுகிய கால லாபங்களை அடிகடி பெரும் யோகம் பெற்றவர்கள், மக்கள் சக்தியை சரியான பாதையில் பரிணமிக்க செய்யும் யோகம் பெற்றவர்கள், வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை சந்திக்கும் தன்மையை தரும்.
தங்களுக்கு இதுவரை லக்கினத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவானும், 7ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த கேது பகவானும், இலக்கின வழியில் இருந்து யோக பலன்களையும், களத்திர பாவக வழியில் இருந்து அவயோக பலன்களையும் தந்திருக்க கூடும், ஆனால் இனி வரும் 18 மாதங்களும் சாய கிரகங்களான ராகுகேதுவினால் 12ம் பாவக வழியில் இருந்தும், 6ம் பாவக வழியில் இருந்தும் யோக பலன்களை தாங்கள் தங்கு தடையின்றி அனுபவிக்கலாம், "அனைத்து ஜோதிடர்களும் 12,6ம் வீடுகள் துர் ஸ்தானங்கள் ஆயிற்றே தீமையை தானே தரும், மேலும் 12ம் பாவகத்திற்கு வரும் ராகு விரையத்தையும், 6ம் பாவகத்திர்க்கு வரும் கேது ஆரோக்கிய குறை மற்றும் கடன் சுமையை அல்லவே அதிகாரிக்கு என்ற கேள்வி தங்களுக்கு வரக்கூடும், இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதே.
சுய ஜாதகத்தில் 12ம் பாவகம் மற்றும் 6ம் பாவக வலிமை பெரும் பொழுது ஒரு ஜாதகர் அனுபவிக்கும் யோக பலன்கள் என்னவென்பதை இனி காண்போம் அன்பர்களே !
தங்களுக்கு 12ல் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், பெரிய முதலீடுகளில் ஈடுபடும் யோகத்தை தருவார், நல்ல அயன சயன சுகத்தையும், நிம்மதியான மன நிலையையும், திருப்தியான மன சந்தோஷத்தையும் வாரி வழங்குவார், தாங்கள் செய்யும் காரியங்களில் இறை நிலையின் அருளாசி பரிபூர்ணமாக காணப்படும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் என்பது திடீரென ஏற்ப்படும், எதிர்பாராத வெளிநாடு வாய்ப்புகளும், வருமானங்களும் வந்து சேரும், தங்களது தொழில் சிறப்பான வருமான வாய்ப்புகளையும், திடீர் முன்னேற்றங்களையும் பெரும், ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் யோகம் மிகுந்த காலம் எனலாம், தங்களது ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை சந்திக்கும் யோகம் உண்டாகும், இறை நிலையுடன் ஜீவசங்கமம் பெரும் யோகம் உண்டாகும், இறை அருளின் பரிபூர்ணதுவம் தங்களுக்கு புது வாழ்க்கையை வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக்கு சென்று வரும் யோகம் உண்டாகும்.
தங்களுக்கு 6ல் சஞ்சாரம் செய்யும் கேது பகவான், குறுகிய கால அதிர்ஷ்டங்களையும், தங்களது சத்ரு வழியில் இருந்து யோக வாழ்க்கையை வாரி வழங்குவார், கேட்க்கும் இடத்தில் இருந்து பண உதவிகள் வந்துசேரும், தொழில் லாபங்கள் குறுகிய கால இடைவெளியில் வந்தவண்ணமே இருக்கும், உடல் நலம் மேம்படும், நீண்ட நாள் ஆரோக்கிய குறைகள் விரைவாக நிவர்த்தி பெரும், புதிய நபர்கள் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவி செய்வார்கள், நல்ல வேலையாட்கள் அமைவார்கள், பொருளாதார உதவிகளும், வங்கி கடன்களும் உடனடியாக கிடைக்க பெறுவீர்கள், வாராகடன்கள் வசூல் ஆகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும், தங்களுக்கு வரும் எதிர்ப்புகளே தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் உதவி புரியும், பயணங்களில் "ராஜயோக விருந்து" மற்றும் உணவு உபசரிப்பை போகும் இடங்களில் எல்லாம் அனுபவிக்கும் யோகம் உண்டாகும், நேர்மறையான எண்ணங்களால் தங்களின் வாழ்க்கையின் லட்சியங்களை குறுகிய காலங்களில் தங்குதடையின்றி அடைவீர்கள்.
மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி கன்னி இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "திடீர் விபரீத ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, கன்னி இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் இரண்டாம் இடம் வகிக்கின்றனர் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.
குறிப்பு :
மேற்கண்ட பலாபலன்கள் கன்னி இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12 மற்றும் 6ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே கன்னி இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 12,6ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக