சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிக ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 10ல் ராகு பகவானும், 4ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!
விருச்சிக இலக்கின சிறப்பு இயல்புகள் :
விருச்சிக ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் இயக்கம் உணர்ச்சிபூர்வமானதாக அமையும், மனதின் எண்ணங்களும் சிந்தனையும் ஸ்திர தன்மையான வேகத்துடன் இயங்கிக்கொண்டே இருக்கும். அறிவுக்கு எட்டாத, புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியை தன்னகத்தே கொண்டவர்களாக காணப்படுவார்கள், வருமுன் காக்கும் சக்தி பெற்றவர்கள், இவர்களின் கணிப்பு பெரும்பாலும் தவறுவதில்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மையையும், ஒழுக்கம் நிறைந்த கட்டுபாட்டினையும் கட்டிக்காக்கும் யோகம் பெற்றவர்கள், தமக்கு வரும் நன்மை தீமையை தாமே ஏற்றுகொள்ளும் மனபக்குவம் நிறைந்தவர்கள், தீவிர சிந்தனை விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு சொந்தகாரர்களாக மாற்றும் வல்லமையை தரும், எதிர்பாராத புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை, தனது அறிவு திறன் மூலம் பெரும் யோகம் பெற்றவர்கள், குடும்ப வாழ்க்கையில் இன்னல்கள் வந்த போதிலும், பொது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், பதவிகளும் தேடிவரும், தனது மனநிலையை ஒருநிலை படுத்துவது செயற்கரிய காரியங்களை மிக எளிதாக சாதிக்கக் வைக்கும் என்பது விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு இறையருள் வழங்கிய "வரம்" எனலாம்.
கடந்த ராகு கேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 11ல் ராகுவும், 5ல் கேதுவும் யோக பலன்களை வழங்கிய போதிலும், பெருவாரியான நன்மைகளை பெற இயலவில்லை, ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு புதிய சொத்துகள், புதிய வீடு, வண்டி வாகன யோகம், சுகபோகமான வாழ்க்கை, என மிகுந்த நன்மைகளை தர காத்திருக்கிறார், தங்களின் மேலான எண்ணங்கள் யாவும் வெற்றி பெரும், புதிய சொத்துகள் மூலம் லாபம் உண்டாகும், பெற்றோர் வழியில் இருந்து மிதமிஞ்சிய நன்மைகள் உண்டாகும், மகிழ்ச்சி பொங்கும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும், சொந்த பந்தம், உறவுகள் வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும், குல தெய்வ அனுகிரகம் உண்டாகும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும், இதுவரை வாகன வசதி இல்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும், வீடு கட்ட அல்லது வாங்க முயற்ச்சித்த நடவடிக்கைகள் உடனடியாக வெற்றி பெரும், அனுபவம் மிக்க பெரியோர்களின் வழிகாட்டுதல் தங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை தங்கு தடையின்றி வழங்கும், மனதிற்கு இனி நிகழ்வுகள் தங்களுக்கு சிறப்பான நல்ல மாற்றங்களை வாரி வழங்கும்.
10ல் ராகு பகவான் தங்களுக்கு தொழில் ரீதியான அபிவிருத்திகளை தன்னிறைவாக வாரி வழங்கும், ஸ்திரமான லாபங்கள் தங்களுக்கு சீறிய இடைவெளியில் வந்துகொண்டே இருக்கும், தங்களின் அதிதீவிரமான அறிவு திறன் காரணமாக செய்யும் தொழிலில் நிர்வாக திறைமை மேலோங்கும், செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்ப்பும், லாபமும் கிடைக்க பெறுவீர்கள், ஏற்றுமதி இறக்குமதி வணிகம் புரியும் அன்பர்களுக்கு இந்த ராகுகேது பெயர்ச்சி அளவில்லா தனலாபத்தை வாரி வழங்கும், புதிய தொழில் வாய்ப்புகள் தங்களை தேடிவரும், கூட்டு முயற்ச்சி தங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும், தங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்க பெறுவீர்கள், வலிமை பெற்ற ராகு பகவான் தங்களின் ஜீவன ஸ்தானத்திற்கு பரிபூர்ணா நன்மைகளை வழங்குவதால், தொழில் ரீதியான கௌரவம் மற்றும் அந்தஸ்து மற்றும் லாபங்கள் திடீரென அதிகரிக்கும், இதுவரை முன்னேற்றம் இல்லாமல் தத்தளித்துக்கொண்டு இருந்த தொழில்கள் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை பெரும், அரசு உதவிகள் மற்றும் அரசு கௌரவங்கள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு, மேலும் இதுவைரை வேலை வாய்ப்பற்ற அன்பர்களுக்கு சிறப்பான வேலையும், பதவி உயர்வும் கிடைக்க பெறுவீர்கள், ஜீவன ஸ்தானத்தில் ராகுவின் சஞ்சாரம் தங்களுக்கு மிகப்பெரிய தொழில் முன்னேற்றங்களை வாரி வழங்கும்.
மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு 100% விகித "அதிர்ஷ்ட ராஜயோக" பலன்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, விருச்சிக இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை பெறுவதில் மூன்றாம் இடம் வகிக்கின்றனர் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.
குறிப்பு :
மேற்கண்ட பலாபலன்கள் விருச்சிக இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04 மற்றும் 10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் 100% சதவிகிதம் நடைபெறும், எனவே விருச்சிக இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 04,10ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
அன்பு அய்யா, சில சந்தேகங்கள். நேரம் கிடைப்பின் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்கு1. ஒருவர் தனது பிறந்த நேரத்தை கொடுத்தால், அது சரியான நேரம் தான் என எப்படி உறுதி செய்து கொள்வது? பிறந்த நேரத்தை சரி செய்து தான் தாங்கள் சாதகம் கணிக்கவே துவங்குவீர்களா?
2. தங்களது இரட்டையர் சாதக பதிவை படித்துக்கொண்டு இருந்தேன். சில வினாடிகள் மாறுவதற்கே பாவ தொடர்புகள், பாதகாதிபதி தொடர்புகள் எல்லாம் மாறி விட்டன. எனது சந்தேகம் என்னவெனில், அது தான் சரியான பிறந்த நேரம் என எவ்வாறு தேர்வு செய்தீர்கள்? இன்னும் சில விநாடிகளை மாற்றி இருந்தால் கணினி வேறு விதமான பாவ தொடர்புகளை தந்திருக்கலாம் அல்லவா?
3. கேபி (kp) பத்ததியை பற்றி படித்துக் கொண்டு இருந்தேன். தாங்கள் கூறும் முறை கேபி போலவும் இருக்கிறது, இல்லாதது போலவும் இருக்கிறது. உமது முறையின் அடிப்படை என்ன? எங்கு அதை கற்று கொள்வது.
நன்றி அய்யா.
இலக்கின அதிபதி மற்றும் சந்திரன் அமர்ந்த தச,புத்தி மற்றும் அந்தர அதிபதியின் அடிப்படையில் பிறந்த நேரத்தை சரி பார்த்து ஜாதகம் கணிதம் செய்யலாம், பிறந்த நேரத்தை துல்லியமாக அறிந்துகொள்ள சிறப்பான வழிமுறைகள் உண்டு.
நீக்குஇருவரின் பிறந்த நேரத்தை மருத்துவர் தெளிவாக குறித்து தந்திருப்பதை உறுதி செய்த பின்னே ஜாதக கணிதம் செய்யப்பட்டது, மேலும் அதுதான் பிறந்த நேரம் என்பதை சம்பந்த பட்ட ஜாதகரின் அங்க அடையாளங்கள் கொண்டு உறுதி செய்யபட்டது.
kp முறையை விட 100மடங்கு உயர்ந்த கணித முறை இது, இறை அருளின் கருணையும், தேடுதலும் இருப்பின் கற்றுகொள்ள இறை அருள் துணை புரியும்.
வாழ்த்துகள்