இயற்கையில் சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனி சிறப்பு இயல்புகள் அதிகம் உண்டு, அவையாவன :
1) தான் அமர்ந்த இடத்தின் பலனை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை,
2) தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் சக்தியை தாமே வீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை.
3) தான் அமர்ந்த பாவகங்களை பார்வை செய்யும் கிரகங்களின் சக்தியை தானே சுவீகரித்துகொண்டு அவர்கள் தரும் பலாபலனையும் தமது பலனாக தானே ஏற்று நடத்தும் வல்லமை.
4) தன்னுடன் சேர்ந்த, பார்த்த கிரகங்களின் வலிமையை முழுவதும் தமது கட்டுப்பாட்டில் எடுத்துகொள்ளும் வல்லமை.
5) தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு நன்மை தரும் அமைப்பை பெற்றால் 100% சதவிகித நன்மைகளையும், தாம் அமர்ந்த பாவகத்திர்க்கு தீமை தரும் அமைப்பை பெற்றால் 100% சதவிகித தீமையையும், தங்குதடையின்றி ஜாதகருக்கு வழங்கும் வல்லமை.
6) தாம் தரும் நன்மை தீமை பலாபலன்களை எந்த ஒரு கிரகத்தின் பார்வையும், சேர்க்கையும் குறுக்கீடு செய்ய இயலாத வல்லமையும், சாயா கிரகங்களான ராகு கேதுவிற்கு உண்டான சிறப்பு இயல்புகள் ஆகும்.
சுய ஜாதகங்களில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12) பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று முடிவு செய்வது ஜோதிட சாஸ்திர உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஏனெனில் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு சாயா கிரகங்கள் நன்மையை தருகின்றனரா ? தீமையை தருகின்றனரா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, பெரும்பாலும் சுய ஜாதகங்களில் ஒருவருக்கு 1,3,11ம் பாவகங்களில் அமரும் ராகு அல்லது கேது 100% விகித நன்மையே தருகின்றனர் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
லக்கினத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சிறப்பான வளரும் சூழ்நிலை, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, புலனுக்கு அப்பாற்ப்பட்ட அறிவு திறன், மிதமிஞ்சிய உடல் மற்றும் மனோ சக்தி, எந்த சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, நினைத்ததை சாதிக்கும் யோகம், மற்றவர்களை தமது ஆளுமைக்கு கீழ் கொண்டுவரும் சிறப்பு தகுதி, அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டு அனைத்தையும் சாதிக்கும் யோகம், அபார சக்திகளை கையாளும் வல்லமை, புதிய சிந்தனைகள், புதிய கண்டுபிடிப்புகள், உலகத்தை தன்பக்கம் கவர்ந்து இழுக்கும் சக்தி, குறுகிய காலத்தில் பிரபலம் அடையும் வழிமுறைகள், எதிர்பாலின கவர்ச்சி, தமது லட்சியங்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாமல் வெற்றியை பெரும் யோகம், பின்னல் வருவதை முன்னால் உணரும் சக்தி, முக்காலங்களையும் உணர்ந்து செயல்படும் யோகம், மற்றவர்களின் மன ஓட்டம், இயக்கங்களை தெளிவாக உணரும் தன்மை, சாஸ்திர ஞானம், கலைகளில் தேர்ச்சி, தமது எண்ணங்களை மற்றவர்கள் மீது பிரகாசிக்க செய்யும் வல்லமை, கர்ம வினை பதிவில் இருந்து தாமும் மீண்டு, மற்றவர்களையும் மீட்டு எடுக்கும் யோகம், சிறந்த ஞானத்தை அனைவருக்கும் பாரபட்சம் இன்றி போதிக்கும் வல்லமை என லக்கினத்தில் அமரும் ராகு அல்லது கேது ஜாதகருக்கு 100% விகித யோகங்கலையே வாரி வழங்கும்.
வீரிய ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் வெற்றிகளை வாரி குவிக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், வியாபாரிகள், வெகு ஜன அபிமானிகள், திரை நட்சத்திரங்கள், மக்கள் செல்வாக்குள்ள அரசியல்வாதிகள், சிறந்த நிர்வாகிகள், மற்றும் வியப்பில் ஆழ்த்தும் வெற்றியாளர்கள் சுய ஜாதகங்களில் 3ம் பாவக ராகு கேதுவின் பங்களிப்பு மிக அபரிவிதமானதாக அமைந்திருக்கும், திடீர் செல்வவளம், திடீர் பதவி உயர்வு, அரசு அங்கீகாரம், திடீர் ராஜ உபச்சாரம் என ஜாதகரை திக்குமுக்காட வைப்பதில் அதிக பங்குவகிப்பது 3ம் பாவக சாயா கிரகங்களின் பங்களிப்பே என்றால் அது மிகையில்லை, வீரியமிக்க செயல்திறன்களையும் தனிப்பட்ட தகுதி மற்றும் சிறப்பு மிக்க மாற்றங்களை வழங்கும் யோகம் பெற்றவர்களாக திகழ செய்வதில் சாயாகிரகங்களின் பங்களிப்பு வியப்பை தரும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
லாப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு கேது ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களை வாரி வழங்குவதில் எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை, திடீர் அதிர்ஷ்டசாலிகள், நல்ல குணம், நினைத்ததை அடையும் வல்லமை, திறன்மிக்க செயல்பாடுகள், தன்னம்பிக்கை முற்போக்கு சிந்தனை மூலம் யோக வாழ்க்கையை தங்குதடையின்றி அனுபவிக்கும் தன்மையை தரும், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஜாதகருக்கு நிறைவேற்றி வைப்பதில் சாயாகிரகங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்பதே உண்மை, லாப ஸ்தானத்தில் சாயா கிரகங்களின் செயல்பாடுகள் மிகவும் அபரிவிதமாக இருக்கும், ஜாதகரின் மன எண்ணங்களையும், திட்டமிடுதல்களையும் எவ்வித தடையும் இல்லாமல் நிறைவேற்றி வைக்கும், தனது முன்னோர்கள் மற்றும் பெற்றோரின் லட்சியங்கள் அனைத்தையும் ஜாதகரே பரிபூரணமாக அனுபவிப்பார் என்பதில் மாற்று கருத்து இல்லை, இவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பது மற்றவர்களுக்கு புரியாத புதிராகவே இறுதிவரை இருக்கும், ஜாதகரின் முன்னேற்றம் குறுகிய கால வெற்றிகளாக அமைந்திருக்கும், அனைத்து விஷயங்களிலும் லாபங்களை பெறுவதில் லாப ஸ்தான சாயாகிரகங்களின் பங்களிப்பு என்பது ஜாதகருக்கு தொடர்ந்து கொடுத்தவண்ணம் இருக்கும் என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமரும் சாயகிரகங்கள் ஒரு ஜாதகத்தில் தனது பங்களிப்பையும் தான் அமர்ந்த பாவகத்திர்க்கு வழங்கும் பலாபலன்களையும் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே !
லக்கினம் : கடகம்
நட்சத்திரம் : பூராடம் 4ம் பாதம்
ராசி : தனுசு
ஜாதகிக்கு லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்துள்ளனர், தாம் அமர்ந்த பாவகங்கள் முறையே நன்மையான பலனை 100% வீதம் வலிமை பெற்று வழங்குகின்றனர், லக்கினத்தில் அமர்ந்த கேது ஜாதகிக்கு கல்வி கேள்விகளில் நல்ல ஞானத்தை வாரி வழங்குகிறார் என்பதால் ஜாதகி பட்டைய படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார், வளரும் சூழ்நிலையும் ஜாதகிக்கு மிக சிறப்பாக அமைந்திருக்கின்றது, நல்ல உடல் ஆரோக்கியம், பரந்த விசாலமான மனம், அனைவருக்கும் நன்மையை நினைக்கும் நல்ல குணம், சுகபோகமான யோக வாழ்க்கை ( கடகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானம் என்பதால் ஜாதகிக்கு அடிப்படையில் இருந்தே சுகபோகங்களுக்கு குறைவில்லை ) மேலும் லக்கினத்தில் அமர்ந்த குரு பகவானின் வலிமையையும் கேது பகவானே ஏற்று நடத்துவதால் ஜாதகிக்கு கற்ற கல்வியில் நல்ல ஞானத்தையும், சிறப்பு மிக்க தேர்ச்சியையும், சிறந்த நிர்வாக திறமையும் ஒருங்கே அமையபெற்று இருப்பது கவனிக்க தக்கது, ஜாதகிக்கு சிறு வயது முதலே கேட்பது கிடைத்தது, நினைத்தது நடந்தது, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுபகவான் மிகவும் வலிமையாக அமர்ந்தது, என்றால் அது மிகையில்லை .
களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்தது களத்திர ஸ்தானம் வலிமை பெற்றது, ஜாதகியின் நண்பர்கள் வட்டாரத்தை மிகசிறப்பாக அமைத்து தந்தது, பிரியமான நேசமிக்க நல்ல நண்பர்கள் மற்றும் தோழிகள் ஜாதகிக்கு அமைந்தனர், சிறந்த புகழ் மிக்க மேல்நாட்டு நிறுவனத்தில் கை நிறைவான வருமானத்தில் நல்ல வேலை கிடைத்தது, ( ஜாதகியின் களத்திர பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமாக அமைந்ததும், களத்திர ஸ்தானம் 100% விகிதம் வலிமை பெற்றதும், வெளிநாட்டு நிறுவனத்தில் நல்ல வேலை வாய்ப்பை நல்கியது ) பதவி உயர்வும் குறுகிய காலத்தில் அமைந்தது, உடன் பணிபுரியும் அன்பர்களுடன் நல்ல இணக்கத்தையும், சிறந்த நிர்வாக திறமையையும் வாரி வழங்கியது, பணிநிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகள் சென்றுவரும் யோகத்தை வாரி வழங்கியது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத காரணத்தால் ஜாதகி அடிமை தொழில் செய்யும் சூழ்நிலையை தந்தது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறாத நிலையில் சம்பந்தப்பட்ட ஜாதகர் அடிமை தொழிலை மேற்கொள்வதே சால சிறந்தது, இந்த ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை இழந்த போதிலும், ராகுவின் தயவாலும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தான வலிமையின் தயவாலும் நல்ல தொழில் அமைந்து, அதில் ராஜ யோகங்களை அனுபவிக்கும் நிலையை தந்துகொண்டு இருக்கின்றது, என்பதை காணும் பொழுது சுய ஜாதகத்தில் சாயகிரகங்களின் வலிமை பற்றியும், அதனால் ஜாதகர் பெரும் யோகங்கள் பற்றியும் நாம் தெளிவு பெற இயலும்.
இருப்பினும் ஜாதகிக்கு 26 வயது கடந்த போதிலும் திருமணம் நடைபெறவில்லை, இதற்க்கு காரணமாக சுய ஜாதகத்தில் லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்ததே காரணம் என்றும், ஜாதகிக்கு களத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளது என்றும் மற்ற ஜோதிடர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர், இதன் உண்மை தன்மை பற்றியும் நாம் இந்த பதிவில் ஆய்வு செய்வோம் அன்பர்களே!
ஜாதகிக்கு லக்கினத்தில் அமர்ந்த கேதுவும் நன்மையை செய்கின்றார், களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த ராகுவும் நன்மையை செய்கின்றார், பிறகு ஏன் திருமணம் தாமதமாகிறது ? மற்றவர்கள் சொல்வது போல் ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் உண்டோ என்ற சந்தேகம் வருவது இயற்கையானதே, இதற்க்கு சரியான விளக்கம் தர "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, ஒருவருக்கு எவ்வித தடையும் இல்லாமல் திருமணம் நடைபெற வேண்டும் எனில் சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும், இந்த ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் ராகு பகவானால் 100% சதவிகிதம் வலிமை பெற்று அமைந்த போதிலும், குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம், விரைய ஸ்தான தொடர்பை பெற்று மிகவும் வலிமை இழக்கின்றது, எனவே இந்த ஜாதகிக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்க படுவதே அன்றி, சாயா கிரகங்களான ராகு கேது அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது.
மேற்கண்ட ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலையே 100% விகிதம் காரணமாக அமைகிறது, லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த சாயா கிரகங்கள் அல்ல என்பதும், ஜாதகிக்கு சர்ப்ப தோஷம் இல்லை என்பதனையும் இந்த பதிவில் "ஜோதிடதீபம்" மிக துல்லியமாக தெளிவுபடுத்துகிறது, மேலும் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் ராகு திசையும் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவக பலனை ஏற்று நடத்துவது சிறப்பான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது, ராகு தசை ராகு புத்தியிலே ஜாதகிக்கு நல்ல வாழ்க்கை துணை நிச்சயம் அமையும், அதற்க்கு களத்திர ஸ்தானத்தில் வலிமை பெற்ற ராகு பகவான் காரணமாக அமைவார் என்பது மறுக்க இயலாத உண்மை, சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு நல்ல சிறப்பான வாழ்க்கை துணையை அமைத்து தரும், இந்த ஜாதகிக்கு 2ம் பாவக வலிமை அற்ற நிலை திருமணத்தை தாமதம் செய்த போதிலும் ( 27 வயதுக்கு மேல் ) 7ம் பாவக வலிமை சிறப்பான வாழ்க்கை துணையை நிச்சயம் அமைத்து தரும்.
குறிப்பு :
சுய ஜாதகத்தில் ராகு கேது (1,7) (2,8) (5,11) (6,12) பாவகங்களில் அமர்ந்தால் ஜாதகருக்கு ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம், புத்திர தோஷம் என்று தவறாக முடிவு செய்வதை விட்டுவிட்டு, திருமண தாமதம் மற்றும் தடைகளுக்கு உண்மையான காரணம் என்னவென்பதை சம்பந்தப்பட்ட ஜாதகத்தில் பாவக வழியில் ஆய்வு செய்து, சரியான தீர்வை காண்பதே ஜோதிடர்களை தேடிவரும் அன்பர்களுக்கு நன்மைபயப்பதாக அமையும், உண்மைக்கு புறம்பான பாலாபலன்களை ஜாதகர்களுக்கு சொல்லும்பொழுது, இதனால் உண்டான வினைபதிவு ஜோதிடர்களையே நிச்சயம் சென்றடையும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
Punitha velliyanru chithirai natchathirathil an(male) piranthal avarudaia appaukku appathu varuma
பதிலளிநீக்கு