வெள்ளி, 24 ஜூன், 2016

ராகு கேது தோஷம் மற்றும் திருமண தோஷம் எனது ஜாதகத்தில் உள்ளதாக கூறுகின்றனர் இது உண்மைய ? எனக்கு திருமணம் நடக்குமா? எந்த வருடத்தில் திருமணம்?


கேள்வி :

ராகு கேது தோஷம் மற்றும் திருமண தோஷம் எனது ஜாதகத்தில் உள்ளதாக  கூறுகின்றனர் இது உண்மைய ? 
எனக்கு திருமணம் நடக்குமா? 
எந்த வருடத்தில் திருமணம்?


சாயாகிரகங்களான ராகு கேது சுய ஜாதகத்தில் யோகத்தை தரும் நிலையை பற்றியும், அவயோகத்தை தரும் நிலையை பற்றியும் இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே! மேலும் மேற்கண்ட கேள்விகளுக்கு உண்டான உண்மையான பதில் பற்றி ஆய்வு செய்வோம்.


லக்கினம் : மகரம் 
ராசி : சிம்மம் 
நட்சத்திரம் : பூரம்2ம் பாதம்

ஜாதகத்தில் 2,8ல் ராகு கேது இருப்பது சர்ப்ப தோஷமாக கருதப்படுகிறது, உண்மையில் கீழ்கண்ட ஜாதகத்தில் 2,8ல் அமர்ந்த ராகு கேது மிகவும் வலிமையுடன் இருப்பதும், தாம் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வதும் தோஷத்தை தர வாய்ப்பில்லை, தாம் அமர்ந்த பாவகத்தை தமது  கட்டுப்பாட்டில் முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் வல்லமை பெற்ற கிரகங்களான ராகுகேது இந்த ஜாதகத்திலும் தனது பணியை சிறப்பாகவே செய்துகொண்டு இருப்பது கவனிக்க தக்கது, மகர லக்கினத்திற்கு 2ல் அமர்ந்த ராகு, ஸ்திர காற்று தத்துவ ராசியான கும்பத்தை மிகுந்த வலிமை பெற செய்கிறார், மேலும் கும்ப ராசி என்பது கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் குடும்ப வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டத்தின் தன்மையை காட்டுகிறது, ஜாதகரின் அறிவு திறனும், அதிர்ஷ்டமும் ஒன்று இணைந்து  ராகு பகவான் தரும் வலிமையால் யோகங்களை வாரி வழங்குவது கவனிக்கத்தக்க அம்சமாகும், மேலும் ஜாதகரின் வருமானம் என்பது ஸ்திர தன்மையுடன், ஜாதகரின் அறிவு திறன் கொண்டும், பேச்சு திறன்கொண்டும் ஈட்டப்படுவதாக அமையும், இதற்கு குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவானின் ஆளுமையே காரணமாக அமைகிறது.

சிம்மத்தில் அமர்ந்த கேது ஸ்திர நெருப்பு தத்துவ ராசியினை ஆயுள் பாவகமாக கொண்ட மகர லக்கின அன்பருக்கு, நீண்ட ஆயுளை வாரி வழங்கி உள்ளதும், ஆயுள் பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் கவனிக்க தக்கது, மேலும் தாம் அமர்ந்த பாவகத்தை 100% விகிதம் வலிமை பெற செய்வது ஜாதகரின், வாழ்க்கையில் திறம்பட செயல்படும் நிர்வாக திறமையின் காரணமாக புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வழங்கும் என்பது வரவேற்க தக்கது, மேலும் ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் அறிவு திறனையும், சுறு சுறுப்பு மிக்க  செயல்பாடுகளையும் கட்டியம் கூறும், ஜாதகர் மருத்துவம் சார்ந்த விஷயங்கள், காப்பீடு சார்ந்த விஷயங்கள் மூலம், மிகப்பெரிய  பொருளாதார சேர்க்கையை பெறுவதற்கு உண்டான ஞானத்தை வழங்குவார் என்பது தெளிவாகிறது, இன்ஷுரன்ஸ் துறையில் கொடிகட்டி பறக்கும் யோகத்தையும் வாய்ப்பையும்  கேது பகவானே வழங்குகிறார் என்றால் அது மிகையில்லை, ஆயுள் பாவகம் ஜாதகரின் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் புலனுக்கு அப்பாற்பட்ட நுண்ணறிவை வழங்கும் என்பதால், புவியில் மற்றவர்கள் மனதில் உள்ள எண்ணத்தை அறியும் யோகத்தை தரும், மேலும் முக்காலங்களையும் கண்டு உணர்ந்து செயலாற்றும் யோகத்தை தரும். பிரபஞ்ச ரகசியங்களை உள்ளுணர்வாக சுவீகரிக்கும் ஆற்றலும், எண்ணிய எண்ணத்தை செயல்வடிவமாக காணும் பேராற்றலையும் வாரி வழங்கும், முன்னில் கும்பத்தில் அமர்ந்த ராகு ஜாதகருக்கு சகல அதிகாரம் சுகபோகத்துடன்  கூடிய அதிர்ஷ்டத்தை வழங்குகின்றார், சிம்மத்தில் அமர்ந்த கேது அறிவு திறன் மற்றும் சுய கட்டுப்பாட்டுடன் கூடிய ஞானத்தை வாரி வழங்குகிறார், எனவே ஜாதகர் தனது பிறவி பயனை முழுவதும் தங்குதடையின்றி பெறுவதற்கு சாயா கிரகங்கள் 100% விகித யோகங்களை வாரி வழங்குகின்றது என்பதால் இந்த ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மையாகிறது 

எனவே மேற்கண்ட ஜாதகம் சாயாகிரகங்கள் வலிமை பெற்ற யோக ஜாதகமாக கருதுவதே உண்மையாகிறது, மேலும் 2,8ல் சாயா கிரகங்கள் பெற்ற வலிமையை கருத்தில் கொண்டே, ஜாதக பலன் காண முற்படுவது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சரியான பலாபலன் காண உதவி புரியும்.

திருமணம் நடக்குமா என்ற கேள்விக்கு, ஜாதகருக்கு "ஜோதிடதீபம்"  வழங்கும் பதில் 100% விகிதம் நடைபெறும் என்பதை, சுய ஜாதக பாவக வலிமை கொண்டு வழங்குகிறது.

திருமணம் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்விக்கு, ஜாதகருக்கு         "ஜோதிடதீபம்" நடைபெறும் திசாபுத்திகள் வழங்கும் பலன்கள் அடிப்படையில் நடைபெறும் "செவ்வாய் திசையில்" எதிர்வரும் "சனி புத்தியில்" நடைபெறும் என்று தெளிவு படுத்துகிறது.

மேலும் மேற்கண்ட ஜாதகம் எப்படி சாயாகிரகங்களின் வலிமையை பறைசாற்றுகின்றதோ, அதேபோல் சாயா கிரகங்கள் வலிமை அற்ற நிலையில் சுய ஜாதகத்தில் அமரும் பொழுது ஜாதகர் பெரும் இன்னல்கள் பற்றியும் துன்பங்கள் பற்றியும் விளக்கம் "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது, சாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற நிலையில் உள்ள ஜாதகத்தை பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக