கேள்வி :
அய்யா எனக்கு யோகாதிபதி சுக்கிரன் திசை நடைபெறுவதாகவும், இந்த சுக்கிரன் திசை அனைத்து நன்மைகளையும் தரும் என்கின்றனர், சுக்கிரன் திசையில் நான் பெரும் யோகங்கள் மற்றும் நன்மைகளை பற்றி தெளிவுபடுத்தவும்.
பதில் :
தங்களின் ஜாதக நிலை
லக்கினம் : மகரம்
ராசி : விருச்சிகம்
நட்சத்திரம் : அனுஷம் 3ம் பாதம்
தங்களுக்கு தற்போழுது சுக்கிரன் திசை 08/03/2013 முதல் 08/03/2033 வரை நடைபெறுகின்றது, நடைபெறும் சுக்கிரன் திசை தங்களுக்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விளக்கமாக காண்போம் அன்பரே! அதற்க்கு முன் தங்களின் சுய ஜாதக பாவக வலிமையை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே!
சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம்.
1,7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம்.
சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :
3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம்.
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம்.
2,6,9,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம்.
தங்களது சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் உள்ளது, 2,6,8,9,12ம் வீடுகள் பாதிப்பையும், 3,5,11ம் வீடுகள் கடுமையான பாதிப்பையும் பெற்று இருக்கின்றது, மேலும் தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை 7ம் பாவகத்தில் அமர்ந்து, திடீர் இழப்பை தரும் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று, 8ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, சுய ஜாதகத்தில் 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது தங்களுக்கு நீண்ட ஆயுளை தரும், இருப்பினும் தேவையற்ற மருத்துவ செலவினங்கள், திடீர் விபத்து, எதிர்பாராத பொருள் இழப்பு, மற்றும் அவசரப்பட்டு செய்யும் காரியங்களில் இன்னல்கள், மன கவலைகள், வீண் சிரமங்கள், மற்றவர்களாலும் வாழ்க்கை துணையினாலும் இழப்புகள், விரையங்கள் என சற்று சிரமத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும், தங்களுக்கு நடைபெறும் சுக்கிரன் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாத காரணத்தால் பெரிய அளவில் யோக பலன்களை அனுபவிக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமே உண்மை.
சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது, சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் தரும், ஆனால் நடைபெறும் திசா புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே இது சாத்தியம், லக்கினாதிபதி மற்றும் யோகாதிபதி திசா புத்தி என்றாலும் சரி இது விதிவிலக்கல்ல, நடைபெறும் திசா புத்தி எதுவென்றாலும் சரி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து நன்மைகளும் யோகங்களும் நடைபெறும், மாறாக பாதிக்க பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து இன்னல்களும் துன்பங்களுமே நடைமுறைக்கு வரும், எனவே சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் வலிமை பெறுவது அவசியமாகிறது.
தங்களுக்கு தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை, யோகாதிபதி திசை என்ற போதிலும் அவர் ஏற்று நடத்தும் பாவக தொடர்பானது, 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நடைபெறுவது தங்களுக்கு நன்மையை தரும் அமைப்பல்ல, மேலும் ஆயுள் பாவகம் தங்களுக்கு காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஸ்திர நெருப்பு தத்துவ ராசியில் அமைவது தங்களின் அறிவு திறனை பாதிக்கும், மேலும் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் தங்களுக்கு எதிர்பாராத இன்னல்களை வழங்க கூடும், மேலும் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் பாவகமான சிம்மமும் பாதிக்கப்படுவதும், நடைபெறும் சுக்கிரன் திசை பாதிக்கப்பட்ட 8ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, தங்கள் தங்களது பூர்வீகத்தில் சிறப்பான ஜீவனத்தை தாராது, மேலும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியிலான யோகங்களையும் பெற இயலாத நிலையை தரும், குறிப்பாக ஜாதகரின் அறிவு திறனும், ஜீவன முன்னேற்றமும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று வாழ்க்கை நடத்துவது சகல யோகங்களையும் தரும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகங்களையும் பெற வழிவகுக்கும்.
மேலும் தங்களது சுய ஜாதகத்தில் நன்மையையும் யோகத்தையும் தரும் திசா புத்திகள் பற்றியும், தீமையையும் அவயோகத்தையும் தரும் திசாபுத்திகள் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
ஜெனன காலத்தில் அமைந்த சனி திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களையும்,
2வதாக நடைபெற்ற புதன் திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களையும்,
3வதாக நடைபெற்ற கேது திசை ( புத்தி ) தங்களுக்கு சுக ஸ்தானமான 4,10ம் பாவக பலனை ஏற்று நடத்தி யோக பலன்களையும்,
4வதாக தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ( புத்தி ) தங்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தந்துகொண்டு இருக்கின்றது.
5வதாக நடைபெற இருக்கின்ற சூரியன் திசையும் ( புத்தி ) தங்களுக்கு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.
6வதாக நடைபெற இருக்கின்ற சந்திரன் திசை ( புத்தி ) தங்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.
7வதாக நடைபெற இருக்கின்ற செவ்வாய் திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.
8வதாக நடைபெற இருக்கின்ற ராகு திசை ( புத்தி ) தங்களுக்கு விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.
9வதாக நடைபெற இருக்கின்ற குரு திசை ( புத்தி ) தங்களுக்கு பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தி அவயோக பலன்களை தர இருக்கின்றது.
பெரும்பாலான திசா புத்திகள் பாதிப்பான பலனை தருவதால் தங்கள் வாழ்க்கையை மிக சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் அல்லது வலிமை பெற்ற ஜாதகத்தை சார்ந்தவர்களின் நட்பு மற்றும் வலிமை மிக்க கூட்டாளிகள் தொடர்பை பெறுவது மிகுந்த நன்மையை தரும், மேலும் சுய ஜாதகத்தில் அனைத்து பாவகங்களும் வலிமை பெற்ற ஒருவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்வது சகல யோகங்களையும் தரும், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ( பூர்வீகத்தை விட்டு வெளியேறினால் ) வழியில் இருந்து யோகங்களை அனுபவிக்க இயலும் என்பதை கருத்தில் கொள்க, சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெறுவது தங்களின் வாழ்க்கையில் இன்னல்கள் வந்த போதிலும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை வழங்கும், 1ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் நிலை, சிறப்பான மன நிலை, 4ம் பாவக வழியில் இருந்து வசதிமிக்க வீடு வண்டி வாகனம், சொத்துசுக சேர்க்கை, 7ம் பாவக வழியில் இருந்து நல்ல வாழ்க்கை துணை, நல்ல நண்பர்கள், சிறப்பான கூட்டாளிகள், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த தொழில் முன்னேற்றம், செய்யும் தொழில் வழியில் இருந்து அபரிவிதமான பொருளாதார சேர்க்கை என தங்களின் வாழ்க்கையில் நன்மைகளுக்கு குறைவு இருக்காது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக