சனி, 25 ஜூன், 2016

திருமண தடையை தரும் ராகுகேது ! சர்ப்ப தோஷம் உள்ள ஜாதக அமைப்பு !




சாயா கிரகங்களான ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் சுவீகரிக்கும் தன்மை கொண்டது என்பதை, நாம் இதற்கு முன் பதிவு செய்த கட்டுரைகளில் இருந்து அறிந்திருப்போம், இயற்கையில் ஒரு பாவகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை பெற்ற சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு நன்மையை தரும் அமைப்பில் வலிமை பெற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளையும் யோகத்தையும் பெறுவதில் எவ்வித குறையும் இருக்காது, மாறாக சாயா கிரகங்கள் தாம் அமர்ந்த பாவகத்திற்கு தீமையை தரும் அமைப்பில் வலிமை அற்று இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க இயலாது, சாயா கிரகங்கள் தரும் அவயோகங்களை அனுபவித்தே ஆகவேண்டிய சூழ்நிலையை ஜாதகருக்கு நிச்சயமாக தரும், மேலும் நடைபெறும் திசா புத்திகள் சாயா கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகருக்கு சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்கள் உறுதியாக வரும், அதன் தாக்கத்தை ஜாதகர் அனுபவிக்கும் தன்மையை தரும். 

கீழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு விளக்க பெறுவோம் 


லக்கினம்  : ரிஷபம் 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம் 

ஜாதகிக்கு ரிஷப லக்கினம், சாயா கிரகங்களான ராகுகேது பாவக அமைப்பில், ஆயுள் ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் கேதுவும், அமர்ந்திருக்கின்றது, தாம் அமர்ந்த பாவக அமைப்பிற்கு இருவரும் வலிமை அற்று தீமையை செய்யும் நிலையில் உள்ளனர், ஜாதகிக்கு வயது 25 திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் யாவும் மிகப்பெரிய தோல்வியையே சந்தித்து கொண்டு இருக்கின்றது, குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் வலிமை அற்று ஆளுமை செய்யும் கேதுபகவானே இதற்கு காரணகர்த்தாவாக விளங்குகிறார், ஒருவரது சுய ஜாதகத்தில் 2ம் வீடான குடும்ப ஸ்தானமோ, 7ம் வீடான களத்திர ஸ்தானமோ வலிமை குறைவாகவோ, பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை தாமதப்படும் என்பது விதி, இந்த ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகத்தில் அமர்ந்துள்ள கேது பகவான் தனது கட்டுப்பாட்டில் 2ம் பாவகத்தை முழுவதும் சுவீகரித்து, கடுமையான பாதிப்பையும், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், ஜாதகிக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றார், மேலும் ஜாதகத்தை பார்க்கும் அனைத்து ஜோதிடர்களும் ராகுகேது தோஷம் என்றும், சர்ப்பதோஷ ஜாதகம் என்றும், இதனால் திருமணம் தாமத படுவதாகவும், இதை போன்றே ராகுகேது, சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றும் பரிந்துரை செய்கின்றனர்.

மேற்கண்ட ஜோதிடர்களின் கருத்திற்கு "ஜோதிடதீபம்" மாற்று கருத்தையே முன்மொழிகிறது, ஏனெனில் ஒருவரது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படும் பொழுது சம்பந்த பட்ட ஜாதகருக்கு, திருமண தடை, குடும்ப  வாழ்க்கையில் சிக்கல்கள், போதிய வருமானம் இன்மை, எந்த விஷயத்திலும் வாக்குவாதம், குடும்பத்தில் நிம்மதி இன்மை, பேசும் பேச்சல் வம்பு வழக்கு, வீண் தகராறு,  இடம் பொருள் ஏவல் தெரியாமல் செயல்படும் தன்மை, வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம், போன்ற இன்னல்களுக்கு ஆளாக்கும், மேலும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் இருப்பின் ஜாதகரின் இல்லற வாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பையும், மன வாழ்க்கையில் பிரிவையும் நிச்சயம் தரும், எனவே சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமோ களத்திர ஸ்தானமோ வலிமை அற்று இருப்பின், அவருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்பஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, அப்படி வலிமையுடன் அமைந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து நன்மை நடைபெறும்.

 தனது வாழ்க்கை துணையின் வலிமை பெற்ற குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தான பாவக வழியில் இருந்து வரும் யோக பலன்களை சுவீகரிக்க இயலும், இதுவே 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஜாதகருக்கு இல்லற வாழ்க்கைக்கு உகந்தது, இல்லறவாழ்க்கையில் நிறைவான மகிழ்ச்சியையும், பிரிவற்ற நிலையையும் தரும், மாறாக ஜாதகருக்கு ராகுகேது தோஷம், சர்ப்பதோஷம் உள்ளது எனவே இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் இந்த தோஷம் இருக்க வேண்டும் என்று குத்துமதிப்பாக முடிவு செய்து, வாழ்க்கை துணையின் ஜாதகத்திலும் 2,7ம் வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள ஜாதகத்தை தேர்வு செய்து திருமணம் செய்து வைத்தல், இல்லறவாழ்க்கை குறுகிய காலத்தில் மனக்கசப்பை தந்து, பிரிவை நோக்கி வெகு வேகமாக அழைத்துச்செல்லும், மேலும் திருமணம் செய்த பிறகு நம்மால் ஏதும் செய்ய இயலாது, இதனால் பெற்றோருக்கும் மன உளைச்சல், திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு மன உளைச்சல், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலையோ அந்தோ பரிதாபம், இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலர் அமைப்பில் இருந்தும் சுதந்திரம் மிக்க தனிப்பட்ட சுய நல போக்கே அதிகம் உள்ளது, இதற்கு சுய ஜாதகத்தில் 2,7ம் பாவக வலிமை அற்ற நிலை காரணமாக உள்ளது, எனவே வாழ்க்கை துணையின் கருத்துக்கும், அவர்களது விருப்பத்திற்கும் மதிப்பளிக்கும் ஒரு பொருத்தமான வரனோ அல்லது வதுவோ அமைய வேண்டும் எனில், தமது ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தமக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, மேலும் இல்லற வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு சிறந்த பரிகாரமாகவும் அது அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

மேற்கண்ட ஜாதகிக்கு 2ல் வலிமை அற்று அமர்ந்த கேது பகவான், வீண் வாக்குவாதத்தையும், குடும்ப வாழ்க்கையில் இன்னல்களையும், போதிய வருமானம் அற்ற சூழ்நிலையையும் வழங்குகின்றார், மேலும் தனது பேச்சில் அறிவு பூர்வமான விஷயங்கள் அற்ற தன்மையையும், பேச்சின் மூலம் முயற்ச்சியை தடுக்கும் பிற்போக்கு வாதங்களையும் கையாள்கிறார், இது இவருக்கு வரும் வாழ்க்கை துணையின் முயற்ச்சிகளுக்கும், முன்னேற்றத்திற்கும் மிகப்பெரிய தடைகளை வாரி வழங்கும், மேலும் வாழ்க்கை துணையின் நிம்மதியை கேள்விக்குறியாக்கும், வரும் வருமானத்தை கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்தும் வல்லமையும் ஜாதகிக்கு இல்லை, வீண் செலவுகளால் தமது வாழ்க்கை  துணைக்கு கடும்  நிதி நெருக்கடியை தருவார், இல்லையெனில் வாழ்க்கை துணையை தனது வீண் வாக்குவாதத்தால் செயல் இழக்க செய்வார், ஜாதகியின் குடும்ப ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீரிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பேச்சு குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடிகளை தரும், குறிப்பாக தனக்கு வரும் வாழ்க்கை துணை மேற்கண்ட இன்னல்களை எதிர்கொள்ளும் அமைப்பை தரும், இதனால் ஜாதகிக்கு கடுமையான இன்னல்கள் வந்து சேரும், எனவே தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருந்தால் மட்டுமே  அவரால் ஜாதகியை அனுசரித்து செல்ல இயலும் என்பதை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும், கருத்தில் கொள்வது நன்மை தரும்.

ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான் ஆயுள் பாவகத்தை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்குகிறார், ஆயுள் பாவகம் என்பது ஜாதகியின் ஆயுள், தனக்கு வரும் திடீர் விபத்து , திடீர் இழப்பு, வீண் மருத்துவ செலவுகள், ரண சிகிசிச்சை, உடல் நல கோளாறு, தனது உடல் ஆரோக்கியத்தை தாமே பாதிக்க செய்யும் நிலை, என்ற வகையில் இன்னல்களை தரும், குறிப்பாக தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் பொருள் மற்றும் வருமானம் ஆகியவற்றை நிர்ணயம் செய்வது ஆயுள் பாவகமே, எனவே ஜாதகிக்கு வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருள் மற்றும் வருமான இழப்பை தவிர்க்க இயலாது என்பது உறுதியாகிறது, மேலும் கணவன் வழியில் இருந்து ஜாதகி பெரிய அளவினாலான நன்மைகளையும், திடீர் அதிர்ஷ்டங்களை பெற இயலாது என்பதும் உறுதியாகிறது, சுய ஜாதகத்தில் ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை, சுலப பொருள் வரவையும் குறிக்கும், இந்த ஜாதகத்தில் 8ம் பாவகத்தில் வலிமையின்றி அமர்ந்த ராகு பகவான் தனது வாழ்க்கை துணையின் வழியில் இருந்து, வீண் பேச்சு, அவமானம், திடீர் இழப்பு, மனம் மற்றும் உடல் வழியில் இருந்து இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலையை தருவார், மேலும் ஜாதகியின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பாக்கிய ஸ்தானமாக அமைவது, ஜாதகியின் பித்ருக்கள் செய்த வினை பதிவையும், தான் செய்த கர்ம வினை பதிவையும் ஏக காலத்தில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து அனுபவிக்கும் நிலையை தரும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

 மேற்கண்ட ஜாதகமே ராகுகேது பாதிப்பிற்கு உதாரணமாக விளங்குகிறது, ஜாதகிக்கு 2ல் அமர்ந்த கேதுவும், 8ல் அமர்ந்த ராகுவும் முழு வீச்சில் இன்னல்களை வாரி வழங்குகின்றனர், நல்ல வேலை தற்போழுது நடைபெறும் சுக்கிரன் திசை ராகு கேதுவால் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தவில்லை, 3,5,9,11,12ம் வீடுகள் களத்திர ஸ்தான பலனை ஏற்று நடத்தியது, 3ம் பாவக வழியில் இருந்து சுய முயற்ச்சியில் வெற்றியையும், 5ம் பாவக வழியில் இருந்து கல்வியில் நல்ல முன்னேற்றத்தையும், 9ம் பாவக வழியில் உயர்கல்வி மாற்றும் ஆராய்ச்சி படிப்பில் சிறப்பான இடத்தையும், வெளியில் சென்று பணியாற்றுவதால் நல்ல வருமானத்தையும், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து இன்னல்களையும் தந்து கொண்டு இருக்கிறது, திருமண தாமதத்திற்கு இதுவும் காரணமாக அமைகின்றது.

ஆனால் அடுத்து வரும் சூரியன், சந்திரன் திசை இரண்டும் ராகு பகவானால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆயுள் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு, ஜாதகிக்கு அமையும் திருமண வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கைக்கும் உகந்தது அல்ல, எனவே திருமணம் செய்து கொள்ளும் முன், மிகுந்த எச்சரிக்கையுடன் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஒரு வரனை தேர்வு செய்து மணம்முடிப்பது ஜாதகிக்கு நன்மையை தரும், இதில் ஏதாவது குளறுபடி நடந்தால் ஜாதகியின் இல்லற வாழ்க்கையை, சூரியன் திசையிலேயே ஆயுள் பாவகத்தில் வலிமை அற்று அமர்ந்திருக்கும் ராகு பகவான் எவ்வித தயக்கமும் பிரிவை தந்து, இல்லற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்.

குறிப்பு :

ராகு கேது சுய ஜாதகத்தில் நல்ல வலிமையுடன் அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித நன்மைகளை அனுபவிக்கும் நிலையை தரும், ராகு கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்து இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் நிச்சயம் 100% விகித தீமைகளை அனுபவிக்கும் நிலையை தரும், சுய ஜாதகத்தில் ராகுகேது கிரகங்களால் பாதிக்கப்பட்ட பாவக பலனை, நடைபெறும் திசாபுத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில் ராகுகேது பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களால் ஜாதகருக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன்வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக