வெள்ளி, 2 செப்டம்பர், 2016

குரு திசையில் திருமண தடைகள் ஏற்ப்பட காரணம் என்ன? திருமணம் எப்பொழுது நடைபெறும் ?


திருமணம் நடைபெறாமல் தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கும் ஒவ்வொரு ஜாதகருக்கும் ( ஆண் பெண் ) சுய ஜாதக வலிமை இன்மையே காரணமாக அமையும் என்றால் அது மிகையில், திருமண தடைக்கு காரணமாக அமையும் சில ஜாதக ரீதியான காரணங்களை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே ! 

திருமண தடைக்கு ஜாதக ரீதியான காரணங்கள் :

1) சுய ஜாதகத்தில் இல்லற வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் உயிர் உடலாகிய லக்கினம் எனும் முதல் பாவகம், குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம், களத்திர ஸ்தானமான 7ம் பாவகம், அயனசயன ஸ்தானமான 12ம் பாவகம், திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் வலிமை அற்று காணப்பட்டால், நிச்சயம் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

2) சுய ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம், 7ம் வீடான துலாம், 12ம் வீடான மீனம் ஆகியவைகள் கடுமையாக பாதிக்கப்படுமாயின், சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

3)  திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் உள்ள திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம், பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினாலோ, பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலோ, சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

4) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் ஜாதகத்தில் தற்போழுது நடைமுறையில் கோட்சார கிரகங்களினால், 1,2,7,12ம் பாவகங்கள் பாதிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

5) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் சுய ஜாதகத்தில் மேற்கண்ட விஷயங்கள் யாவும் இல்லாத பொழுது, ஜாதகரே தனது சுய ஜாதகத்தை யோக பங்கத்திற்கு காரணமாக இருந்தால் ( சகவாச தோஷம் ) சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

6) திருமண வயதில் உள்ள வது அல்லது வரன் தமக்கு வரும் யோக பலன்களை வேண்டாம் என்று உதறும் தன்மை ( பல காரணங்களால் ) கொண்டு  இருப்பாரெனில் சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகளையும் தாமதங்களையும் வழங்க வாய்ப்புள்ளது.

இதை பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : துலாம் 
ராசி : மகரம் 
நட்சத்திரம் : அவிட்டம் 1ம் பாதம் 

மேற்கண்ட ஜாதகிக்கு வயது 28 நடந்துகொண்டு இருக்கின்றது, திருமணத்திற்க்காக எடுத்த முயற்ச்சிகள் யாவும் தோல்வியில் முடிவடைந்து விட்டது, மேலோட்டமாக ஜாதகத்தை பார்க்கும் பொழுது எவ்வித தோஷமும் அற்ற ஜாதகமாக தெரிந்தாலும், சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களில் குடும்பம் மற்றும் ஜீவன ஸ்தானத்தை தவிர மற்ற அணைத்தது பாவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதும், 1,5,7 மற்றும் 11ம் வீடுகள் 200% விகித இன்னல்களை தரும்  பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது கவலைக்கு உரிய விஷயமாகும், மேலும் கடந்த ராகு திசை ஜாதகிக்கு பாதிக்கப்பட்ட விரைய ஸ்தான (3,9ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் ) பலனை ஏற்று நடத்தியது ஜாதகியின் வாழ்க்கையில் திருமண முயற்ச்சிகளில் மிகப்பெரிய பின்னடைவை தந்தது, இருப்பினும் தற்போழுது நடைபெறும் குரு திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வரவேற்க தக்கது ( 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் ) மேலும் தற்போழுது நடைபெறும் குரு திசையில் சனி புத்தி ஆயுள் பாவகமான 8ம் பாவக பலனை ( 4,8ம் வீடுகள் திடீர் இழப்பை தரும் 8ம் பாவகத்துடன் சம்பந்தம் )  ஏற்று நடத்துவது இன்னல்களை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகிக்கு திருமண தாமதம் ஆக காரணங்கள் கீழ்வருமாறு வகை படுத்தலாம்.

1) சுய ஜாதகத்தில் 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் , குறிப்பாக களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பதும் ஜாதகிக்கு திருமண தடைகளை வழங்குவதற்கு முழு முதற் காரணமாக அமைகிறது, ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மேஷ ராசியில் அமைவது, தெளிவான முடிவுகளை ஜாதகி மேற்கொள்ள இயலாத சூழ்நிலையை உருவாக்கும், ஜாதகியின் சுய முடிவுகள் தாமதங்களையும் இன்னல்களையும் வழங்கும்.

2) கடந்த ராகு திசை ( விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனை ஏற்று நடத்தி ) ஜாதகிக்கு திருமண வாய்ப்புகளை வெகுவாக தடை செய்தது, தற்போழுது நடைபெறும் குரு திசை ஜீவன ஸ்தான வழியில் மட்டும் நன்மைகளை தருகிறது, குரு திசையில் தற்போழுது நடைபெறும் சனி புத்தியும் ஜாதகிக்கு சாதகமான அமைப்பில் இல்லை என்பது வருந்தத்தக்கது.

3) நடைபெறும் குரு திசை நன்மையை வழங்கி, சனி புத்தி இன்னல்களை தருவது திருமண முயற்ச்சிகளை தடை செய்கிறது, மேலும் கேட்சார கிரக நிலையும் ஜாதகிக்கு சாதகமாக இல்லை.

4) அடிப்படையில் சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் வலிமை இழந்து காணப்படுவதும், களத்திர ஸ்தானம் பாதிக்கப்படுவதும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம், 7ம் வீடான துலாம், 12ம் வீடான மீனம் ஆகியவைகள் கடுமையாக பாதிக்கப்படுவதும், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கை அமைவதில் அதிக தடைகளையும் தாமதங்களையும் வழங்குகிறது, 

ஜாதகிக்கு திருமணம் கைகூடும் கால நேரம் :

தற்போழுது நடைபெறும் குரு திசை, சனி புத்தியில் எதிர்வரும் செவ்வாய் அந்தரத்தில் ( 26/01/2017 முதல் 21/03/2017 வரை ) திருமண வாய்ப்புகள் கைகூடி வரும், கூடி வரும் நல்ல வாய்ப்பினை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டு ஜாதகிக்கு நல்ல இல்லற வாழ்க்கையை அமைத்து தருவது அவசியமாகிறது, இதை தவிர்த்தால் குரு திசை சனி புத்தியில் வரும் குரு அந்தரத்திலோ, அதற்க்கு அடுத்து வரும் புதன் திசை புதன் புத்தியிலோ ஜாதகிக்கு திருமணம் கைகூடி வரும் வாய்ப்பு உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்வது நலம் தரும்.

குறிப்பு :

ஜாதகிக்கு சுய ஜாதகம் சற்று வலிமை குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, தமக்கு வரும் வரன் ஜாதகத்தை வலிமை மிக்கதாக தேர்வு செய்வது, தம்பதியரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும், மாறாக வலு குறைவான வரன் ஜாதகத்தை தேர்வு செய்தால், தாம்பத்திய வாழ்க்கையில் பல இன்னல்களை ஜாதகி எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதை ஜாதகியும், ஜாதகியின் பெற்றோரும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக