வெள்ளி, 21 அக்டோபர், 2016

மறைவு ஸ்தானங்களில் அமர்ந்த கிரகங்கள் தனது திசா காலங்களில் இன்னல்களை தருமா ?


கேள்வி :

இயற்க்கை மற்றும் சுய ஜாதக அமைப்பிற்கு சுப கிரகங்கள் தனது திசைகளில் யோகங்களையும், அசுப கிரகங்கள் தனது திசைகளில் அவயோகங்களையும் தருமா? மறைவு ஸ்தானங்களில் அமர்ந்த கிரகங்கள் தனது திசா காலங்களில் இன்னல்களை தருமா ? 

பதில் :

பொதுவாக இயற்க்கை சுபகிரகங்களாக கருதப்படும், குரு,சுக்கிரன்,சந்திரன்,புதன் ஆகிய கிரகங்களின் திசாபுத்திகள் ஒருவருக்கு நன்மைகளையும், இயற்க்கை அசுபகிரகங்களாக கருதப்படும், சனி,செவ்வாய்,சூரியன்,ராகு,கேது ஆகிய கிரகங்களின் திசாபுத்திகள் ஒருவருக்கு இன்னல்களையும் தரும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தே அன்றி சிறிதும் உண்மை அல்ல, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு சுப கிரகங்கள் நன்மையையும், பாவ கிரகங்கள் தீமையும் செய்யும் என்று கருதுவதும், பாதக ஸ்தான அதிபதி முற்றிலும் இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவதும், சுய ஜாதக பலன்களுக்கு முரண்பட்டவையாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் இதை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே!

ஒருவரது ஜாதகத்தில் நவ கிரகங்களின் திசாபுத்திகள் அந்த நபருக்கு தனிப்பட்ட வித அமைப்பில் பலாபலன்களையும், யோகங்களையும் வழங்க வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையே தனது திசாபுத்திக்காலங்களில் ஏற்று நடத்த உரிமை பெற்றவை என்பதை அடிப்படையில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும், சுப கிரகத்தின் திசை நன்மைகளையும், அசுப கிரகத்தின் திசை இன்னல்களையும் தரும் என்பதில் சிறிதும் உண்மையில்லை அன்பர்களே, தங்களது ஜாதக வலிமை எப்படி அமைகிறதோ அதன் அடிப்படையிலேயே பலாபலன்கள், நவகிரகங்களின் திசாபுத்தி காலங்களில் நடைமுறைக்கு வரும், உதாரணமாக ஒருவருக்கு நடைமுறையில் குரு திசை இருப்பின் அந்த திசை ஜாதகருக்கு யோகங்களை நல்கும் என்று கருதுவதும், சனி திசை நடைமுறையில் இருப்பின் அந்த திசை ஜாதகருக்கு இன்னல்களை தரும் என்று கருதுவதும் முற்றிலும் சுய ஜாதக பாவக வலிமையை உணராமல் சொல்லப்படும் கருத்தாகவே கருத வேண்டியுள்ளது.

மேலும் நவ கிரகங்கள் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களில் திரிகோணம்,கேந்திரம் ஆகியவற்றில் அமர்ந்து இருப்பின் நன்மைகளையும், மறைவு ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பின் தனது திசாபுத்தி காலங்களில் இன்னல்களை தரும் என்று கருதுவதும், சுய ஜாதகத்தில் அமர்ந்த கிரகங்கள் ஆட்சி,உச்சம்,நட்பு மற்றும் சம நிலையில் இருப்பின் யோகத்தையும், நீசம்,பகை நிலையில் இருப்பின் அவயோகத்தையும் தனது திசாபுத்தி காலங்களில் தரும் என்று கருதுவதும் முற்றிலும் தவறான கருத்தே அன்றி, சுய ஜாதகத்தில் உள்ள பாவக வலிமையை கருத்தில் கொண்டு கூறப்பட்ட பலன்கள் அல்ல என்பதே உண்மை அன்பர்களே, இதை தெளிவுற தெரிந்துகொள்ள கீழ்கண்ட உதாரண ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.


லக்கினம் : கன்னி 
ராசி : மேஷம் 
நட்ஷத்திரம் : பரணி 1ம் பாதம் 

ஜாதகருக்கு எதிர்வரும் சந்திரன் திசை தரும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், ஜாதகருக்கு சந்திரன் 11ம் பாவகத்திற்கு அதிபதி, ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தில் மறைவு பெற்று அமர்ந்து இருக்கின்றார் ( பாரம்பரிய முறைப்படி ) எனவே தனது திசா புத்தி காலங்களில் ஜாதகருக்கு நன்மைகளை தர வாய்ப்பு இல்லை என்கின்ற பலனை ஜாதகருக்கு பரிந்துரை செய்து இருக்கின்றனர், இது உண்மையா என்பதை ஆய்வில் தெளிவு பெறுவோம் அன்பர்களே, மேற்கண்ட ஜாதகருக்கு சந்திரன் என்ன ஆதிபத்தியம் பெறுகிறார், எங்கு அமர்ந்து இருக்கின்றார், என்பது முக்கியம் அல்ல தனது திசைகளில் எவ்வித பலாபலன்களை தருகிறார், எந்த வீடுகளுடன் தொடர்பு பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்பதே முக்கியம், இதை அடிப்படையாக கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகருக்கு சந்திரன் 8ல் மறைவு பெற்று அமர்ந்து இருப்பினும், தனது திசாபுத்தி காலங்களில் 9ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், 6,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் மிகுந்த யோக பலன்களையே நடைமுறைப்படுத்துவது, ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும்.

இதனால் ஜாதகர் சந்திரன் தசை காலங்களில் பாக்கிய ஸ்தான அமைப்பில் இருந்து எடுக்கும் காரியங்களில் வெற்றிகளையும், எதிர்பாராத முன்னேற்றங்களையும், சிறந்த அறிவு திறன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகத்தையும், உயர்கல்வி அல்லது ஆராய்சசி கல்வி மூலம் தமது சுய முன்னேற்றத்தை நிர்ணயம் செய்யும் சக்தியாகவும் திகழ்வார், ஜாதகரின் அறிவு திறன் சிறப்பான பொருளாதார முன்னேற்றத்தையும், தடையில்லாத வெற்றிகளையும் வாரி வழங்கும், அடுத்து 6ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு குறுகிய கால வெற்றிகளை வாரி வழங்கும், உடல் நலம் மேம்படும், போட்டி பந்தயங்களில் வெற்றியும், எதிரிகளால் நன்மையையும் முன்னேற்றமும் உண்டாகும், ஜாதகருக்கு வரும் எதிர்ப்புகள் அனைத்தும் சிறப்பான ஜீவன முன்னேற்றத்தை வாரி வழங்கும், ஜாதகரை வெற்றி பெற எவராலும் இயலாது என்பது கவனிக்க தக்கது, 10ம் பாவக வழியில் இருந்து சுய தொழில் செய்யும் யோகம் அல்லது நல்ல வேலை வாய்ப்பு தன்னிறைவான பண வசதி, சுய மரியாதை, கவுரவம் மற்றும் அந்தஸ்து  தேடி வரும் யோகம், தீர்க்கமான வாத திறமை, செய்யும் தொழிலில் சிறப்பான நன்மைகளையும், வெற்றிகளையும் வாரி வழங்கும், எனவே சந்திரன் 8ல் மறைந்தாலும், தனது திசாபுத்தி காலங்களில் வலிமை பெற்ற பாவக பலனையே ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு யோக பலன்களே நடைமுறைக்கு வரும் என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொண்டு ஜாதகர் தமது வாழ்க்கை முன்னேற்றங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

ஆனால் தற்போழுது நடைபெறும் சூரியன் திசை ஜாதகருக்கு 12ல் மறைவு பெற்று பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவது வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கும் என்பதால் சூரியன் திசை ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளை வழங்க வாய்ப்பு சிறிதும் இல்லை என்பதே உண்மை, இந்த ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இரண்டு கிரகங்களும் முறையே 12,8ம் பாவகங்களில் மறைவு பெற்று இருப்பினும், சூரியன் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தி இன்னல்களையும், சந்திரன் வீரியம் மற்றும் ஜீவன ஸ்தான பலன்களை ஏற்று நடத்தி நன்மைகளையும் வழங்குவது கவனிக்க தக்கது, எனவே நவ கிரகங்கள் தனது திசாபுத்தி காலங்களில் சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவு பெற்றால் மட்டுமே, அவர்கள் தரும் பலன்கள் பற்றி தெளிவு பெற இயலும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக