ஒருவரது சுய ஜாதகத்தில் தொழில் முன்னேற்றத்தை நிர்ணயம் செய்வதில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவக வலிமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகரின் வாழ்க்கையில் ஜீவனத்திற்கு யாதொரு சிக்கல்களும் இல்லமால் சரியான தொழில் அமைப்பை தந்துவிடும், ஜாதகருக்கு உகந்த தொழில் எதுவோ? அதில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்ப்படுத்தி ஜாதகருக்கு தொழில் ரீதியான நன்மைகளை சிறப்பாக வாரி வழங்கிவிடும், இதில் மாற்று கருத்து இல்லை, சிலரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் மிகவும் வலிமை அற்றோ? பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் தமக்கு உகந்த தொழிலிலை தேர்வு செய்வதென்பதே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து நிற்கும், ஜாதகரின் எண்ணமும் செயல்பாடும் தவறான தொழில் தேர்வுகளை செய்து அதன் வழியிலான இன்னல்களையும் நஷ்டங்களையும் சந்திக்கும் நிலைக்கு ஆளாகும், குறிப்பாக ஜாதகர் தேர்வு செய்து செய்யும் தொழில்கள் யாவும் ஜாதகருக்கு சிறிதும் பொருத்தமற்று காணப்படும், இதனால் ஜாதகரின் ஜீவன முன்னேற்றம் என்பது கிணற்றில் இட்ட கல் போன்று யாதொரு அசைவும் இன்றி கிடக்கும்.
மேலும் சிலரது வாழ்க்கையில் தொழில் ரீதியான நன்மைகளை பெறுவதற்கு பல வருடங்கள் காத்திருக்கும் சூழ்நிலையை தரும், அல்லது ஜாதகரின் உழைப்பின் பயனை மற்றவர்களுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு, நிர்கதியாக நிற்கும் சூழ்நிலையை தரும், வேறு சிலருக்கு எதிர்ப்புகளின் மூலம் ஜாதகரின் உழைப்பும் வருமானமும் வெகுவாக பாதிக்கப்படும், செய்யும் தொழிலை சூழ்நிலை காரணமாக கைவிடும் சூழ்நிலைக்கு ஜாதகர் தள்ளபடுவார், மேலும் ஜீவன ரீதியான போராட்டங்கள் ஜாதகரை மிகுந்த சோர்வுக்கு ஆளாக்கும், சுய கௌரவம் மற்றும் அந்தஸ்து குறையும், உகந்த தொழிலை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்ப்படும், தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் கடுமையான பின் விளைவை தரும், ஆழம் தெரியாமல் தொழிலில் இறங்கி கடுமையான இன்னல்களை சந்திக்கும் நிலையை தரும், உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை தரும், எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை நிலையை தெளிவாக உணர்ந்து, செயல்படுவது ஜாதகரின் தொழில் வெற்றிகளை சிறப்பாக அமைத்து தரும்.
பொதுவாக சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தால் போதும் ஜாதகருக்கு நல்லதொரு ஜீவனமும் சிறப்பான தொழில் முன்னேற்றமும் அமைந்துவிடும் என்று கருதுவது சரியான கருத்து அல்ல, நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான வழியில் இருந்து முழு அளவிலான நன்மைகளை பெறுவார், ஒருவேளை நடைமுறையில் அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருந்தாலும் அதனால் ஜாதகருக்கு யாதொரு நன்மையையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்வது நலம் தரும், குறிப்பாக ஜாதகரின் உழைப்பு அனைத்தும் வீணாகும், என்பதனை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது.
உதாரணமாக கிழ்கண்ட ஜாதகத்தை சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்
லக்கினம் : கும்பம் '
ராசி : கடகம்
நடசத்திரம் : ஆயில்யம் 2ம் பாதம்
மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு ஜீவன ரீதியாக கடுமையான இன்னல்களை தரும் அமைப்பாகும், ஜாதகர் சுயமாக தொழில் செய்து வெற்றி பெறுவது என்பது இயலாத காரியமாக அமையும், குறிப்பாக ஜாதகர் மண் தத்துவம் சார்ந்த தொழில் செய்யும் பொழுது ஜாதகருக்கு கடுமையான நஷ்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், ஜாதகர் கடந்த 12 வருடங்களாக மண் தத்துவம் சார்ந்த தொழில் மட்டுமே செய்து வருகிறார், இதானால் ஜாதகரின் வாழ்க்கையில் யாதொரு நன்மையையும் முன்னேற்றம் இன்றியே காணப்படுகிறது, இதற்க்கு அடிப்படை காரணமாக தற்போழுது ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை ( 09/09/2002 முதல் 09/09/2022 வரை ) ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் விரைய ஸ்தான பலனையே ஏற்று நடத்திடுவது ஜாதகரின் ஜீவன வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது, சுய ஜாதகத்திலும் ஜீவன ஸ்தானம் பாதிக்கப்பட்டு, நடைபெறும் திசா புத்தியும் ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட ஜீவன ஸ்தான பலனை தருவது ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றியை சிறிதும் தாராமல், ஜாதகருக்கு தொழில் ரீதியான மனநிம்மதி இழப்பை மட்டுமே வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பது வருத்தத்திற்க்கு உரிய விஷயமாகும்.
மேலும் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் வருமானத்தை குறிக்கும் 2ம் வீடு திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் சம்பாதிக்கும் அனைத்தையும் வீண் விரையம் அல்லது திடீர் என இழக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள், தேவையற்ற செலவுகள் என ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை வாரி வழங்கும், மேலும் இதனால் ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியில் இருந்து கடுமையான மனஉளைச்சல்களையும், எதிர்ப்புகளையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார், மேலேயும் உழைப்பிற்க்கு உண்டான வருமானம் இன்றி தவிக்கும் நிலையும், ஏமாற்றும் மனிதர்களால் வஞ்சிக்கும் நிலைக்கு ஆளாகி, சுய கவுரவம் மற்றும் மரியாதையை இழக்கும் நிலை உருவாகிறது, எனவே சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமை இழப்பு ஜாதகரின் சுய கவுரவத்தையும் கடுமையாக பாதிக்கும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு விஷயமாகும்.
பொதுவாக சுக்கிரன் திசை நடைபெற்றால் ஜாதகருக்கு சகல யோகத்தையும் தரும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும், சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை சுக்கிரன் திசை ஏற்று நடத்துகிறது என்ற உண்மை அறியாமல் கூறப்படும் வாய் வார்த்தையே அன்றி சிறிதும் உண்மையில்லை, மேற்கண்ட ஜாதகத்தில் சுக்கிரன் தனது திசையில் 4,10ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தனது திசை முழுவதும் விரைய ஸ்தான பலனையே 4 மற்றும் 10ம் பாவக வழியில் இருந்து தருவது ஜாதகருக்கு சுக்கிரன் திசை அவயோக பலனையே தருகின்றது என்பது உறுதிபட தெளிவாக தெரிகிறது.
நடைபெறும் திசை எதிர் வரும் திசை, சுப கிரகத்தின் திசை அசுப கிரகத்தின் என்பதை வைத்து ஜாதக பலாபலன் நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் தவறான ஜாதக கணித முறை, சுய ஜாதகத்தில ஏற்று நடத்தும் பாவக வலிமை பற்றி தெளிவாக உணர்ந்து பலன் காண்பதே மிக துல்லியமாக அமையும்.
குறிப்பு :
மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகம் பாதிக்கப்பட்டு இருப்பினும் மாற்று வழி ஜீவனத்தை குறிக்கும் 3,7,11ம் பாவகங்கள் மிக மிக வலிமையுடன் இருப்பது ஜாதகருக்கு கிடைத்திருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும், மேற்கண்ட பாவக வழியிலான ஜீவனத்தை ஜாதகர் தேடினால் அதில் 100% விகித வெற்றியை ஜாதகர் பெறாலாம் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக