பின்தொடர...

Saturday, July 15, 2017

வேலைக்கு செல்வது முன்னேற்றத்தை தருமா ? சுய தொழில் செய்வது முன்னேற்றத்தை தருமா ?
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்."

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

என்ற திருக்குறளுக்கு ஏற்ப இதை இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆய்வு செய்ய சுய ஜாதகம் மிக துல்லியமாக கண்டறியும் என்பதனை எவராலும் மறுக்க இயலாது, சுய ஜாதகத்தில் ஓர் ஜாதகருக்கு பிறப்பிலேயே "இறை அருள்" அவருக்கு ஏற்ற ஜீவனத்தை வகுத்து வைத்து விடுகிறது, இதை உணர்ந்து செயல்படும் அன்பர்களுக்கு ஜீவன ரீதியான தோல்விகள் என்பது சிறிதும் இல்லை, இதற்க்கு காரணமாக சம்பந்தப்பட்ட ஜாதகரின் சுய ஜாதக பாவக வலிமை அடிப்படையாக அமைகிறது, குறிப்பாக சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் அவருக்கு உகந்த ஜீவனத்தை சரியான வயதில் அறிமுகம் செய்து, அதன் வழியிலான வெற்றிகளை தங்கு தடையின்றி வாரி வழங்க ஆரம்பித்து விடும், மேலும் ஜாதகர் தனக்கு உகந்த ஜீவனத்தை தேர்வு செய்த குறுகிய காலத்தில் அதில் தன்னிறைவான வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தங்கு தடையின்றி பெற ஆரம்பித்து விடுவார், மேலும் சுய ஜாதகத்தில் நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் வலிமை பெற்ற 1,4,7,10ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் தொழில் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஓர் விஷயமாக மாறிவிடும், ஜாதகருக்கு யாதொரு சிரமும் இன்றி ஜீவன வாழ்க்கை நல்ல முறையில் சுப யோகங்களை வாரி வழங்கும்.

பெரும்பாலும் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் வலிமை பெற்ற அன்பர்கள் எவரும் தனது ஜீவனம் மற்றும் தொழில் பற்றிய கவலைகள் இன்றி மிக தெளிவாக தமக்கு உகந்த தொழில் வாய்ப்புகளை பெற்று 100% விகித யோக வாழ்க்கையை பெறுகின்றனர், சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட அன்பர்கள் மட்டுமே தொழில் மற்றும் வேலை சார்ந்த இன்னல்களை கடுமையாக சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகின்றனர், தமக்கு உகந்த தொழில் மற்றும் வேலை வாய்ப்பினை அறிந்துகொள்ள இயலாமல், சற்றும் பொருந்தாத தொழில் மற்றும் வேலையினை தேர்வு செய்து நேரத்தையும், தமது உடல் மற்றும் அறிவு சார்ந்த உழைப்பையும் மாற்றுவர்களுக்கு அர்ப்பணம் செய்து ஜீவித்திருக்கும் சூழ்நிலையை பெறுகின்றனர், பெரும்பாலும் தமக்கு உகந்த ஜீவனத்தை தேர்வு செய்யாத ஒவ்வொருவரும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலையையே பரிசாக பெறுகின்றனர், சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் பாவகங்கள் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கும் மற்ற பாவக வழியில் சுதந்திரமாக ஜீவித்து இருக்க இறை அருள் ஓர் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கும் என்ற ஓர் விஷயத்தை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, அந்த ராகசியத்தை அறிந்த  அன்பர்கள் வாழ்க்கையிலும் ஜீவன ரீதியான யோக வாழ்க்கை வெற்றி மாலையுடன் காத்து இருக்கின்றது என்பது மறுக்க இயலாத விஷயமாகும்.

சுய ஜாதக பாவக வலிமையை தெளிவாக அறிந்து கொண்டு, அடிப்படையில் தமது ஜாதகம் சுய தொழில் செய்ய உகந்தததா ? அடிமை தொழில் செய்ய உகந்தததா ? அல்லது கூட்டு தொழில் மூலம் ஜீவன மேன்மை பெரும் யோகம் பெற்றதா ? என்பதில் தெளிவு பெறுவது அவசியாமாகிறது, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே ! 


லக்கினம் : கடகம் 
ராசி : கும்பம் 
நட்சத்திரம் : பூரட்டாதி 2ம் பாதம் 

ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக தொடர்புகள் :

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 6ம் வீடு பாக்கிய  ஸ்தானமான  9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 10ம் வீடு ஜீவன  ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்பு ஆகும், குறிப்பாக ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு வலிமை பெற்று  இருப்பது சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து முழு அளவிலான  நன்மைகளை வாரி  வழங்கும்.

ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக தொடர்புகள் :

1,3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை வாரி வழங்கும், 2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,12ம் பாவக வழியில்  இருந்து கடுமையான இன்னல்களை தரும், 8ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு தனது எதிரிகள் வழியில் இருந்து மிக பெரிய இழப்புகளை ஏற்படுத்தும்.


ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெற்று இருக்கிறது எனவே ஜாதகரை சுய தொழில் செய்ய பரிந்துரை செய்யலாமா ? என்ற கேள்விக்கு பதில் கூடாது  என்பதே என்று " ஜோதிடதீபம்" அறிவுறுத்துகிறது, ஏனெனில் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு உகந்த தொழில் தேர்வை சரியாக தேர்வு செய்யவும், தேர்வு செய்த தொழிலில் நல்ல ஞாணத்தையும் தரும், ஆனால் அதுமட்டுமே ஜாதாரை சிறந்த தொழில் அதிபராக மாற்றும் வல்லமை பெற்றது அல்ல,  மேலும்  தற்போழுது நடைபெறும் திசா புத்தி மற்றும் எதிர் வரும் திசா புத்தியும் வலிமை பெற்ற பாவக  பலனை ஏற்று நடத்தாமல், முறையே விரைய ஸ்தான பலனையும், பாதக ஸ்தான  பலனையும் ஏற்று நடத்துவது ஜாதகருக்கு சுய தொழில் வழியிலான நன்மைகளை  தாராமல் 200% விகித இன்னல்களை  வாரி வழங்கிவிடும்.

பொதுவாக சுய தொழில் செய்ய ஜாதகருக்கு லக்கினம் வலிமை பெறுவது  ஜாதகரின் திட்டமிடுதல்களையும், செயல்திறனையும் குறிக்கும் ( ஜாதகருக்கு லக்கினம் 200% விகிதம்  பாதிக்கப்பட்டுள்ளது ) சுக ஸ்தானமான 4ம் வீடு வலிமை பெறுவது சொத்துக்களை நிர்வகிக்கும் வல்லமையை தரும், எண்ணத்தின் வலிமையை பறைசாற்றும் ( ஜாதகருக்கு சுக ஸ்தானம் வலிமை பெற்று இருக்கிறது ) களத்திர ஸ்தானமான 7ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு பொதுமக்கள் செல்வாக்கு, வியாபார விருத்தி, உலக பிரபல்யம் மற்றும் தனது வியாபாரத்திற்க்கான தனிப்பட்ட குறியீட்டை பெரும் யோகத்தை தரும் ( ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் 200% விகிதம்  பாதிக்கப்பட்டுள்ளது ) ஜீவன ஸ்தானமான 10ம் வீடு வலிமை பெறுவது ஜாதகருக்கு தொழில் அறிவையும், அது சார்ந்த திட்டமிடுதல்களையும் குறிக்கும், மேலும் ஜீவன வழியிலான நன்மைகளை முழு அளவில் வாரி வழங்கும் ( ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருக்கிறது ).

மேற்கண்ட விஷயம் மட்டும் அல்ல மேலும் பல விஷயங்கள் உண்டு அதாவது குடும்ப  ஸ்தானமான 2ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சரளமான   வருமானத்தையும் இனிமையான பேச்சு திறனையும், வீர்ய ஸ்தானமான 3ம் பாவகம்  வலிமை பெறுவது ஜாதகரின் வீரியமிக்க செயல்பாடுகளையும் தைரியத்தையும், வெற்றியுடன்  கூடிய சகல  சௌபாக்கியத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சமயோசித புத்திசாலித்தனத்தையும், அறிவு  நுணுக்கத்துடன் கூடிய புதிய சிந்தனையையும், 6ம் பாவகம் வலிமை பெறுவது சத்ரு வெற்றியையும், 8 ம் பாவகம் வலிமை  பெறுவது திடீர் யோகத்தையும், 9ம் பாவகம் வலிமை பெறுவது செய்யும் தொழிலில்  நற்ப்பெயருடன் கூடிய நம்பிக்கையையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது நீடித்த அதிர்ஷ்டத்துடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் முற்போக்கு சிந்தனையையும், நெடுங்கால திட்டமிட்ட வளர்ச்சியையும், 12ம் பாவகம் வலிமை பெறுவது செய்த முதலீட்டிற்கு யாதொரு இழப்பும் ஏற்படாத பெரும் செல்வ  சேர்க்கையையும் வாரி வழங்கும்.

இத்துடன் தற்போழுது, எதிர்வரும் திசா  புத்திகள் வலிமை பெற்ற  பாவக பலனை ஏற்று நடத்துவது  ஜாதகரின் தொழில் சார்ந்த முன்னேற்றங்களை 100% விகிதம் வெற்றிகரமாக வாரி வழங்கும்.

ஆனால் மேற்கண்ட ஜாதகத்தில் 4,6,10ம் பாவகங்களை தவிர மற்ற பாவகங்கள் அனைத்தும் ஜாதகருக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன், தற்பொழுது மற்றும் எதிர்வரும் திசாபுத்திகளும் ஜாதகருக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தவில்லை என்பது, ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பினும் அதனால் யாதொரு பலனும் இல்லை என்பதே  உண்மை நிலை, மேலும் சுய ஜாதகத்தில் எத்தனை பாவகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், லக்கினம் வலிமை பெற்றால் மட்டுமே ஜாதகர் மற்ற பாவக வழியிலான நன்மைகளை பெற இயலும் என்பது கவனிக்கதகக் விஷயமாகும்.

" ஜோதிடதீபம் " ஜாதகருக்கு அடிமை தொழில் அமைப்பையே பரிந்துரை செய்கிறது ஏனெனில், ஜாதகருக்கு தனது துறை சார்ந்த ஆளுமை திறன் சிறப்பாக இருக்கும் என்பதால், ஓர் இடத்தில் வேலைக்கு செல்வதே ஜாதகருக்கு மிக சிறந்த பாதுகாப்புடன்  கூடிய  ஜீவன நன்மைகளை வாரி வழங்கும், மாறாக ஜாதகருக்கு தொழில் ஆளுமை திறன் உள்ளது என்பதை ஓர் சிறப்பு தகுதியாக எடுத்துகொண்டு, சுய தொழில் செய்ய முற்ப்பட்டால், சுவற்றில் அடித்த பந்து போன்று, ஆரம்பித்த இடத்திற்கே ஜாதகர் வெகு விரைவில்  வந்து சேர்ந்து விடுவார் என்பதுடன், இன்னல்களும் ஜாதகருக்கு அதிக அளவில் வந்து சேரும் என்பதுமட்டும் நிச்சியம் செய்யபட்ட பலாபலனாகும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment