ஒருவரது சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை முழுமையாக ஆளுமை செய்வதில் தனித்துவம் மற்றும் வல்லமை பெற்ற கிரகங்கள் ராகுகேது என்றால் அது மிகையில்லை, தான் அமர்ந்த பாவகத்தை முழுவதும் தமது கட்டுப்பாட்டிலும், தன்னுடன் சேர்ந்த கிரகங்களின் வலிமையையும் தனதாக்கிக்கொண்டு பலாபலன்களை தனது பலனாக தருவதில் சாயா கிரகங்களுக்கு நிகர் வேறு எதுவுமில்லை என்று மிக தெளிவாக கூறிவிடலாம், ராகு கேதுவுடன் சேர்ந்த கிரகங்களும் ( ஒரே பாவகத்தில் சேர்க்கை பெறுதல் ) தனது வலிமையை சாயா கிரகங்களே சுவீகரித்து கொள்ளும் தன்மையை பெற்று இருப்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
ராகு கேது தான் அமரும் பாவகத்தை வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகு கேது அமர்ந்த பாவக வழியிலான நன்மைகளை முழு அளவில் பரிபூர்ணமாக பெறுவார், ஒருவேளை தான் அமர்ந்த பவகத்தை வலிமை அற்ற நிலைக்கு ராகு கேது ஆளாக்கினால், சம்பந்தப்பட்ட ஜாதகர் ராகு கேது அமர்ந்த பாவக வழியிலான இன்னல்களை நிச்சயம் தவிர்க்க இயலாது, உதாரணமாக சுய ஜாதகத்தில் ஒருவருக்கு குடும்பம் மற்றும் ஆயுள் பாவகத்தில் ராகு கேது அமர்ந்து வலிமை பெற்று இருப்பின் ஜாதகருக்கு, குடும்ப ஸ்தான வழியில் இருந்து நல்ல பேச்சு திறனும், நிறைவான வருமானம், நல்ல குடும்ப வாழ்க்கை, தன சேர்க்கை, பொருளாதார தன்னிறைவு, வாழ்க்கை துணையின் ஆதரவு, இனிமையான இல்லற வாழ்க்கை, போதுமான நிதி வசதி, தெளிந்த பேச்சு, கவரும் வார்த்தை பிரயோகம், மக்களை தனது வாக்கிற்கு கட்டுப்பட்டு நடக்கும் படியான வல்லமை, வாக்கு வன்மை, வாக்கு பலிதம், தெய்வீக பேச்சு திறன், வாக்கை தொழிலாக கொண்டு ஜீவிக்கும் யோகம், ஆன்மீக அனுபவம் என ஜாதகர் குடும்ப ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோக பலன்களை அனுபவிக்கும் அமைப்பை தரும்.
ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுள், வாழ்க்கை துணையின் வருமானம் மற்றும் சொத்துக்கள் கிடைத்தல், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவந்தன் ஆகும் யோகம், புதையல் யோகம் அல்லது அதற்க்கு நிகரான சொத்து சுக சேர்க்கை, மறைபொருள் வழியில் இருந்து வரும் ஜீவனம், ஆயுள் காப்பீடு, ஊக்க தொகை, மருத்துவ உபகரணம் மற்றும் ஆயுள் காக்கும் மருந்துகள் வழியிலான தன சேர்க்கை, மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் கனிம பொருட்கள் வழியிலான தன சேர்க்கை, புலனுக்கு அப்பாற்பட்ட அறிவு திறன் மூலம் பெரும் சுப யோகங்கள், தனது உயிர் அமைப்பின் பரிபூர்ணதுவத்தை உணரும் யோகம், பஞ்சபூதங்களின் ஆசியை பெரும் யோகம், தன்னிலை உணர்வு, உயிரின் ஓட்டத்தை கையாளும் வல்லமை என ஆயுள் பாவகத்தில் அமரும் சாயா கிரகங்கள் வலிமை பெற்ற நிலையில் இருந்து யோகங்களை வாரி வழங்கும்.
சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் ஆயுள் பாவகத்தில் அமரும் ராகுகேது தாம் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கவில்லை எனில், ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் ஆகிவிடும், குறிப்பாக குடும்ப ஸ்தான வழியில் இருந்து திருமண தடை, நல்ல குடும்ப வாழ்க்கை அற்ற நிலை, வருமானம் அற்ற நிலை, சம்பாத்தியம் அனைத்தும் வீண் செலவு செய்யும் நிலை, வாக்கு வலிமை அற்ற நிலை, பேச்சிற்கு மதிப்பு அற்ற நிலை, பொருளாதார ரீதியான கடுமையான இன்னல்கள், எதிர்ப்புகள் மூலம் வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை சந்திக்கும் சூழ்நிலை, அனைத்தும் எதிராக மாறும் நிலை, உதாசீனம் செய்யும் மனநிலை, பொறுப்பற்ற தன்மை, கடுமையான வார்த்தைகள், மற்றவர்களை நிந்தித்தல், பொறாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி ஆற்றாமையால் மற்றவருக்கு இன்னல்களை ஏற்படும் தன்மை என ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும்.
ஆயுள் ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு திடீர் இழப்புகள், விபத்து, மருத்துவ செலவினங்கள், அடிகடி விபத்துகளை சந்தித்தால், எலும்பு முறிவு, உடல் ரீதியான பிரச்சனைகள், தெளிவில்லாத முடிவுகளால் வரும் திடீர் இழப்புகள், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை, மற்றவர்களின் ஆளுமைக்கு கிழ் வாழ்க்கையை வாழும் அமைப்பு, சுய மரியாதை இழக்கும் சூழ்நிலை, வாழ்க்கை துணை வழியில் இருந்து வரும் திடீர் இழப்புகள், தெய்வீக சிந்தனை அற்ற தன்மை, எதிர்ப்புகள் வழியில் இருந்து வரும் இழப்புகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் ஜாதகர் பெரும் இழப்புகள் என ஜாதகரை கடுமையான பாதிப்பிற்கு ஆளாக்கும்.
அடிப்படையில் சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி சம்பந்தப்பட்ட பவகத்தை வலிமை பெற செய்கிறதா ? வலிமை இழக்க செய்கிறதா ? என்பதில் தெளிவு பெற்ற பிறகே ராகு கேது தரும் பலாபலன்களை நிர்ணயம் செய்வது சால சிறந்தது, தான் அமர்ந்த பாவகத்திற்கு ராகு கேது தரும் பலாபலன்களை பற்றிய தெளிவு இல்லாமல் தோஷம் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகு முறையே, சுய ஜாதகத்தில் 1,2,5,6,7,8,12ம் பாவகங்களில் சாயா கிரகமான ராகு கேது அமர்வது தோஷத்தை தரும் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறான அணுகுமுறை, ராகு கேது மேற்கண்ட பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும், சம்பந்தப்பட்ட பாவகத்திற்கு வலிமையை தரும் அமைப்பில் இருப்பின், ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து 100% விகித யோக பலன்களை அனுபவிப்பார்கள் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக