பின்தொடர...

Saturday, July 22, 2017

அற்புத வாழ்வை வாரி வழங்கும் ஆடி அமாவாசை வழிபாடு !

 

இயற்கையாகவே அமாவாசை தினங்களில் மனிதனுக்கு பிரபஞ்சத்துடனான தொடர்பு மிக நெருக்கமாக அமையும், மனதில் எழும் எண்ணத்தின் வலிமைதனை அதிகரிக்கும் அதன்காரணமாக இறை அருளின் கருணையையும், பித்ரு தேவதைகளின் ஆசியையும் மிக எளிதாக பெரும் வண்ணம் ஜீவதொடர்பை ஓவ்வொருவரும் பெறுவது இயற்கையாக நடைபெறும், குறிப்பாக ஆடி,புரட்டாசி,தை அமாவாசை தினங்களில் இதன் தாக்கம் சற்று அதிக அளவில் அமையும் என்பதனால் குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான லாப ஸ்தானமான 11ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண அறிவு திறனும், சமயோசித புத்திசாலித்தனமும் அதிகரிக்கும், லாப ஸ்தான வழியில் இருந்து தன்னம்பிக்கையும், அதிர்ஷ்டத்துடன் கூடிய வெற்றிகளை வாரி வழங்கும்.

 பித்ரு வழிபாடு செய்வதன் மூலம் சுய ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9ம் பாவகம் மிகவும் வலிமை பெரும் அதன் நேரெதிர் பாவகமான வீர்ய ஸ்தானம் எனும் 3ம் பாவகமும் வலிமை பெரும் இதன் மூலம் ஜாதகருக்கு பாக்கிய ஸ்தான வழியில் இருந்து நல்ல ஞானத்துடன் கூடிய நல்லோர் சேர்க்கை உண்டாகும், பித்ருக்கள் ஆசிர்வாதம் ஜாதகரின் வாழ்க்கையில் வியக்க தக்க மாற்றங்களை வாரி வழங்கும், மேலும் வீர்ய ஸ்தான வழியில் இருந்து ஜாதகருக்கு தைரியமும் தன்னம்பிக்கையுடன் கூடிய வெற்றிகளும் உண்டாகும், இதனால் சகல சௌபாக்கியமும் ஜாதகரின் வாழ்க்கையில் வந்து சேரும், மேற்கண்ட விஷயங்கள் அவரவர் சுய ஜாதக வலிமைக்கு ஏற்றார் போல் பலாபலன்களை தரக்கூடும் என்ற போதிலும் சுப பலன்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும்.

மேலும் ஆடி அமாவாசை வழிபாடு என்பது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பணிரெண்டு பாவகங்களுக்கும் வலிமை சேர்க்கும் வல்லமை பெற்றது, என்பதனால் அனைவரும் முறையாக அவரவர் குல வழக்கபடி குல தெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு செய்து சகல நலன்களையும் பெருக.

குறிப்பு :

 ஆடி அமாவாசை வழிபாடு செய்வதின் மூலம் நமது வாழ்க்கையில், குலம் விருத்தி அடையும், அண்டிய பிணி அகலும், நீண்ட ஆயுள் அமையும், பேரிழப்புகள் தவிர்க்கப்படும், தொழில் விருத்தி உண்டாகும், முன் ஜென்ம விணை, சாபங்கள் தீரும், பிரம்மஹஷ்தி தோஷம் நீங்கும், தீயோர் சேர்க்கை விலகும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும், தெய்வீக அனுபவமும், வருமுன் உணரும் பேராற்றலும் அதிகரிக்கும், சுய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் ( பாவக வலிமை இன்மை ) விலகி, சுப யோகங்கள் நடைமுறைக்கு வரும், கடன் சார்ந்த  இன்னல்கள் நீங்கி பொருளாதார தன்னிறைவு உண்டாகும், புதுவித ஜீவன முன்னேற்றமும், ஏற்றமிகு எதிர்காலமும் நம் அனைவருக்கும் உண்டாகும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment