பின்தொடர...

Monday, July 17, 2017

திருமண பொருத்தம் காண்பதில் பாவக வலிமையின் முக்கியத்துவம் !


" மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " என்ற வார்த்தை முற்றிலும் உண்மையே, ஓர் ஆண் மகனின் வெற்றிக்கும் தோல்விக்கும் அவர் தேர்வு செய்யும் வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையும் அவசியமாகிறது, எவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிமை பெற்ற ஜாதகம் என்ற போதிலும், தனது வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை பெற்றால் மட்டுமே சம்பந்த பட்ட ஜாதகர், தனது வாழ்க்கையில் வெற்றிகளையும் சுப யோகங்களையும் அனுபவிக்க முடியும், ஒருவேளை தனது ஜாதகம் வலிமை அற்று இருந்தால் கூட, தமது மனைவியின் ஜாதக வலிமை ஜாதகருக்கு சுபயோகங்களை நல்கும், இந்த அமைப்பு கணவன் மனைவி உறவுக்கு மட்டும் மிக சிறப்பாக பொருந்தும் ( ஈருடல் ஓருயிர் ) என்ற தாத்பரியத்தின் மூலம் இதன் தாக்கம் மிக சிறப்பாக கணவனுக்கு சுப யோகங்களை வாரி வழங்கும்.

மேற்கண்ட அமைப்பின்படியே மனைவியின் ஜாதகம் யோகம் அற்று இருப்பின், அதனால் கணவனுக்கும் அவயோக நிகழ்வுகள் நடைமுறைக்கு வரும் இதில் விதிவிலக்கு கிடையாது, குறிப்பாக மனைவியின் ( துணைவி ) ஜாதகம் வலிமை அற்று காணப்பட்டால், ஜாதகரின் கதி அதோகதிதான், சுய ஜாதகத்தில் பாரிஜாத யோகங்கள் காணப்படினும், அனைத்தும் யோக பங்கம் என்ற நிலைக்கு ஆளாகி, ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், எனவே வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் முன், அவரது சுய ஜாதக வலிமையை பற்றி தெளிவாக தெரிந்திருப்பது ஓவ்வொரு ஆண் மகனின் வெற்றிகரமான யோக வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

எனவே இல்லற வாழ்க்கையில் இணையும் முன்பே, வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையையும், நடைபெறும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் வலிமையை பற்றியும் அறிந்திருப்பது, இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், பெரும்பாலும் தமக்கு உகந்த வழக்கை துணையை தேர்வு செய்யாமல் அதன் பிறகு அதற்கான தீர்வுகளை தேடி அலைவது இல்லற வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை ஏற்ப்படுத்தும், திருமண பொருத்தம் காணும் பொழுதே தமக்கு உகந்த, பொருத்தமான ஜாதக வலிமை கொண்ட வாழ்க்கை துணையை தேர்வு செய்வதே சாலசிறந்தது, இல்லற வாழ்க்கையில் இன்பங்களையும் சுப யோகங்களையும் வாரி வழங்கும். 

கீழ்கண்ட ஜாதகியை தமது வாழ்க்கை துணையாக ( காதல் திருமணம் ) ஏற்றுகொள்ளலாமா ? என்ற கேள்விக்கும் "ஜோதிடதீபம்" வழங்கும் ஆலோசணை :


லக்கினம் : கன்னி 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்

மேற்கண்ட கன்னி இலக்கின ஜாதகியை, ஜாதகர் விருப்பமணம் செய்துகொள்ளலாமா? என்ற கேள்வியை வினவி இருக்கிறார், இது அவரது வாழ்க்கை பிரச்னை என்பதால், அவருக்கு சில அறிவுரைகளை வழங்க "ஜோதிடதீபம்" விரும்புகிறது, தமது மனைவியாக வரும் பெண்ணின் ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்கள் பற்றி ஓர் சிறு அறிமுகம், லக்கினம் வலிமை பெறுவது ஜாதகியின் குணாதிசியம், ஆரோக்கியம் மற்றும் மன வலிமையை குறிப்பிடும், குடும்ப ஸ்தானமான 2ம் வீடு வலிமை பெறுவது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, இனிமையான பேச்சு, நிறைவான வருமானம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை குறிப்பிடும், பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வலிமை பெறுவது சிறந்த புத்திசாலித்தனத்தையும், சமயோசித அறிவுத்திறன் மற்றும் நல்ல புத்திர பாக்கியத்தை நல்கும், களத்திர ஸ்தானமான 7ம் வீடு வலிமை  பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வாழ்க்கை துணை உடனான புரிதல்களையும் தரும், இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியை நல்கும், ஆயுள் ஸ்தானமான 8ம் வீடு வலிமை பெறுவது வாழ்க்கை துணைக்கு தமது வழியில் இருந்து வருமானம், யோகம், தீர்காயுள், திடீர் செல்வத்தை தரும், மோட்ச ஸ்தானமான 12ம் வீடு வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், பொருளாதார தன்னிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நல்கும்.

மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெற்று, தற்பொழுது நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகியின் இல்லற வாழ்க்கையில் அளவில்லா சந்தோஷங்களை வாரி வழங்கும், மேற்கூறிய விஷயங்களை பெற்ற ஜாதகியை திருமணம் செய்வது, சம்பந்தப்பட்ட ஆண் மகனுக்கு யோக வாழ்க்கையை நல்கும் இதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் தாங்கள் பொருத்தம் காண பணித்த ஜாதகத்தில், இதை போன்ற அமைப்புகள் இல்லை, அதற்க்கு நேர்மாறாக உள்ளது, லக்கினம் மட்டும் பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று  மிக வலிமையாக உள்ளது, 2,8,12ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறது, 5,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது, தமது கணவருக்கு 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசையும், புதன் புத்தியும் ஏக காலத்தில் 11ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை வாரி வழங்குவது, ஜாதகியின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், எனவே சிறுதும் பொருத்தமற்ற வாழ்க்கை துணையை தேர்வு செய்து அதன் பிறகு மிகுந்த துன்பத்திற்கு ஆளாக வேண்டாம், 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெறுவது என்பது, ஜாதகியின் கணவனுக்கு தாங்க இயலாத இன்னல்களை தரும் அமைப்பாகும், மேலும் தங்களின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது என்பதுடன், மற்ற பாவகங்களும் வலிமையுடன் இருப்பது இல்லற வாழ்க்கையில் சகல சௌபாக்கியத்தையும் தரும்.

ஒருவேளை தாங்கள் மேற்கண்ட பெண்ணையே திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்தால், அதன் விளைவு மிக கடுமையாக இருக்கும், உதாரணமாக கல்லை கட்டிக்கொண்டு நீச்சல் பயிலுவதற்கு சமமான இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், எனவே தங்களுக்கு உகந்த பொருத்தமான வேறு வழக்கை துணையை தேர்வு செய்து நலம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment