சனி, 19 மே, 2018

7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா ? இல்லற வாழ்க்கை அமையாதா ?


கேள்வி :

  7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல்  இருப்பது நல்லது என்று என்னை பயமுறுத்திவிட்டார், திருமணம் எனக்கு நடக்குமா ? தங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர் பார்க்கிறேன். எனது எதிர் காலம்,  குடும்ப வாழ்க்கை பற்றி பயம் கொள்ளும் விதமாக  ஏதும் சொல்லாமல், நல்ல வழிகாட்டுதல்களை கூறவும், இலங்கையில் எனது ஜாதகத்தை பார்த்த அனைவரும் என்னுடைய நட்சத்திரம் விசாகம் 4ம் பாதம் என்று கூறுகின்றனர் இது சரியானதா ? நடைபெறும் திசை எதிர்வரும் திசை தரும் பலன்கள் என்ன ?


பதில் :

 திருமண தடைகள் ஏற்படுவதற்கு ராகு பகவான் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் அமர்வது மட்டுமே காரணமாக அமைந்து விடாது, சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியான ரிஷபம், 7ம் ராசியான துலாம், இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டோ அல்லது சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு  குடும்ப ஸ்தானமான 2ம் பாவகம் மற்றும் களத்திர ஸ்தானமான 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டோ இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர் திருமண தடைகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகலாம், மேலும் நடைமுறையில் உள்ள திசாபுத்திகள் வலிமை அற்ற பாவகங்களின் பலனை நடைமுறைப்படுத்தினால் ஜாதகர் திருமணம் சார்ந்த முயற்சிகளில் தடைகளையும், தாமதங்களையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படலாம், தங்களுக்கு திருமணம் தாமதமாக என்ன காரணம் ? என்பதனை இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பரே !


லக்கினம் : விருச்சிகம்
ராசி : விருச்சகம்
நட்ஷத்திரம் : அனுஷம் 1ம் பாதம்

தங்களது சுய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சம் என்ற போதிலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் பாதக ஸ்தான தொடர்பை பெற்று 200% விகிதம் வலிமையற்று காணப்படுகிறது, தங்களது சுய ஜாதக அமைப்பின்படி, லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மட்டும் மிகுந்த வலிமையுடன் இருக்கிறது, இல்லற வாழ்க்கையை குறிக்கும் மற்ற வீடுகளான 5,7,8,12ம் வீடுகள் மிகவும் வலிமை அற்று காணப்படுகிறது, குறிப்பாக 1,5,7,11,12ம் வீடுகள் அனைத்தும் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது தங்களுக்கு 1,5,7,11,12ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னலைகளை தரும் அமைப்பாகும், தங்களின் திருமண முயற்சிகளில் வரும் தோல்விகளுக்கு, திருமண தடைகளுக்கும் அடிப்படை காரணமாக விளங்குவதும் இதுவேயாகும்.

தங்களது சுய ஜாதகத்தில் 2,3,10ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவக்கங்களும் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளுங்கள், திருமண தடைகளுக்கு ராகு ஓர் காரணமாக இருந்தாலும், அது மட்டுமே முழு காரணமாக அமைந்துவிடாது, சுய ஜாதகத்தில் வெகுவான பாவகங்கள் கடுமையான பாதிப்பை பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது, சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2ம் வீடான குடும்ப ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பதால், தங்களுக்கு நல்ல இல்லறமும் , சிறப்பான குடும்பமும் அமையும் இதில் மாற்றம் இல்லை தாங்கள் தேர்வு செய்யும் மணப்பெண்ணின் சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் பாவகங்கள் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, தங்களின் சீரிய முயற்சி நல்லொதொரு வாழ்க்கை துணையை அமைத்து தரும்.

சுய ஜாதகத்தில் பெரும்பாலான பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது  தங்களின் திருமண வாழ்க்கைக்கு பல தடைகளை தந்தபோதிலும், குடும்ப ஸ்தான வலிமை தங்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கையை சிறப்பாக அமைத்துத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை, மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வாழ்க்கை துணையை தேர்வு செய்து, இனிமையான இல்லறம் காணுங்கள் வாழ்த்துக்கள் அன்பரே !

 நடைமுறையில் உள்ள புதன் திசை தங்களுக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களையும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி வாய்ப்பையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் அதே வேளையில் 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த இன்னல்களை தருவது தங்களுக்கு வெகு சிரமங்களை தரும் அமைப்பாகும், வீடு, வண்டி வாகனம், சொத்து  சுக சேர்க்கை போன்ற அமைப்பில் சிரமங்களையும், வீண் செலிவினங்கள், எதிர்பாராத திடீர் இழப்பு, மருத்துவ செலவுகள், என்ற வகையில் துன்பங்களை  தரக்கூடும், தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாடும் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா சுபயோகங்களை வாரி வழங்கும், நல்ல வாழ்க்கை துணையை தேடி அமைத்துக்கொள்வது, தங்களின் வாழ்க்கையில் பரிபூர்ண நன்மைகளை  வாரி வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 எதிர்வரும் கேது திசை தங்களுக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்ற போதிலும், அதற்க்கு பிறகு வரும் சுக்கிரன் தசை 20 வருடம் தங்களின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் பாவக தொடர்பை பெறுவது வரவேற்கத்தக்க சிறப்பு அம்சமாகும் ( சுக்கிரன் திசை 20 வருடமும் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவக தொடர்பை பெற்று முழு வீச்சில் சுபயோக பலன்களை  நல்குகிறது ) எனவே எதிர்காலம் தங்களுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளதால் எஜென்ஜி, தரகு, கமிஷன் மற்றும் வியாபாரம் சார்ந்த முன்னேற்றங்களை பெற தயார் நிலையில் இருப்பது அவசியமாகிறது.

குறிப்பு :

  ஜாதகர் முறையான பிரீதி பரிகாரங்களை மேற்கொண்டு சகல நலன்களையும் பெறுக, ஜாதகருக்கு தற்போழுது நடைமுறையில் உள்ள சந்திரனின் அந்தரம் சிறப்பான மாற்றங்களை வாரி வழங்கும் என்பது கவனிக்கத்தக்கது, திருமணம் சார்ந்த முயற்சிகளை முறையாக மேற்கொண்டு வாழ்க்கையில் நலம் பெறுக .

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

2 கருத்துகள்:

  1. என் பிறந்தநாள் 16.10.1987 5.05AM மதுரையில்
    இதே பிரச்சனைதான் எனக்கும் 7 ல்
    ராகு இப்பொழுது சுக்கிர திசை நடப்பில் உள்ளது ஏதாவது நல்லது நடக்குமா
    கல்யாணத்தை நான் எதிர்பார்க்கலாமா பதில் அளிக்கவும்

    பதிலளிநீக்கு