நவ கிரகங்களில் மிகவும் வலிமையானது கேது, அதற்க்கு மேலான வலிமையை பெற்றது ராகு, சுய ஜாதகத்தில் மேற்கண்ட சாயாகிரகங்களின் ஆளுமை என்பது விவரிக்க இயலாத ஒன்றாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவரது ஜெனன ஜாதகத்தில் சாயா கிரகங்களான ராகுகேது தான் அமர்ந்த பாவகத்தை வலிமை சேர்க்கும் அமைப்பில் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகர், ராகுகேது அமர்ந்த பாவக வழியிலான சுபயோகங்களை தங்கு தடையின்றி சுவீகாரம் செய்வார், அபரிவித நன்மைகளும் சுபயோகங்களும் ஜாதகரை தேடிவரும் வரும் இதில் சிறிதும் மாற்றம் இருக்காது, அதே சமயம் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு வலிமை சேர்க்கவில்லை எனில் ஜாதகரின் பாடு படு திண்டாட்டம் தான், எவ்விதத்திலும் ஜாதகர் சாயாகிரகங்கள் அமர்ந்த பாவக வழியிலான சிறு நன்மைகளையும் பெற இயலாது என்பது கவனிக்கத்தக்கது.
பெரும்பாலும் சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் அமரும் ராகு கேது தோஷத்தை தரும் என்பதாகவும், சாயா கிரகங்களுக்குள் மற்ற கிரகங்கள் அமர்ந்து இருப்பின் கால சர்ப்ப தோஷத்தை தருவதாகவும் பொதுவான கருத்து உள்ளது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதனை "ஜோதிடதீபம்" அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளது, மேலும் இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவுபடுத்த உவகை கொள்கிறது, ராகு கேது தோஷம், சர்ப்ப தோஷம் என்று வர்ணிக்கப்பட்ட ஓர் ஜாதகத்தை இன்றை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !
லக்கினம் : கும்பம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : திருவோணம் 1ம் பாதம்
மேற்கண்ட கும்ப லக்கின ஜாதகருக்கு ராகு லக்கினம் எனும் முதல் பாவகத்திலும், கேது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு கடுமையான ராகுகேது தோஷத்தை ஏற்படுத்தும் என்றும், லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் ராகு கேது அமர்வது மிகுந்த இன்னல்களை தரும் என்றும், திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது மற்றும் இல்லற வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க நேரும் என்றும் ஜாதகருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, பொதுவாக சுய ஜாதகத்தில் 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்வது தோஷம் என்று கருதுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் சரி, தான் அமர்ந்த பாவகத்திற்கு எவ்வித வலிமையை பெற்று தருகிறது என்று தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை தவிர்த்து 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானது, தெளிவான ஜாதக பலாபலன்கள் காணவும் இது உதவாது.
மேற்கண்ட ஜாதகருக்கு லக்கினம் மற்றும் களத்திர பாவகத்தில் ராகு கேது அமர்ந்தாலும், லக்கினம் சம வீடு என்ற முறையில் அங்கு அமரும் ராகு ஜாதகருக்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், மேலும் களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகத்தில் ( கேந்திர ஸ்தானம் ) அமரும் கேது பகவானும் தான் அமர்ந்த பாவகத்திற்க்கு 100% விகித வலிமையை தருவதால், களத்திர ஸ்தான அமைப்பிற்கு முழு வீச்சில் சுபயோக பலன்களை வழங்க அருகதை உடையவர் ஆகிறார், எனவே மேற்கண்ட ஜாதகர் லக்கினம் மற்றும் களத்திரம் என இரண்டு பாவக வழியில் இருந்தும் சாயா கிரகங்களால் 100% விகித சுபயோக பலன்களை அனுபவிக்க வல்லமை உடையவராக திகழ்கிறார்.
மேற்கண்ட அமைப்பு ஜாதகருக்கு லக்கினத்தில் அமர்ந்த ராகு பகவான், லக்கினம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாப ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர காற்று ராசியில் 10 பாகைகளும், உபய நீர் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த அறிவாளியாகவும், வளரும் சூழ்நிலையில் யோகத்தை பெற்றவராகவும், பரந்த மனப்பக்குவம், பெருந்தன்மையான குணத்தை பெற்றவராகவும் ஜாதகர் திகழ்கிறார், இது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற ராகு பகவானால் வழங்கப்படும் சுபயோகம் ஆகும், மேலும் ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது பகவான், களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமாக அமைவதாலும், ஸ்திர நெருப்பு ராசியில் 10 பாகைகளும், உபய மண் ராசியில் 24பாகைகளை கொண்டிருப்பதால் சிறந்த சுறுசுறுப்பு, சுய கட்டுப்பாடு, தெவீக அனுக்கிரகம், சமயோசித புத்திசாலித்தனம், தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து சுபயோகங்களை பரிபூர்ணமாக பெரும் வல்லமை கொண்டவராக திகழ செய்யும்.
சுய ஜாதகத்தில் ராகு கேது 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருப்பின் தான் அமர்ந்த பாவகத்திற்கு அது தரும் பாலாபலன்கள் என்ன ? என்பதில் தெளிவு பெற்ற பிறகே ஜாதக பலன்களை விவரிக்க வேண்டும், மேற்கண்ட 1,2,5,7,8,12 பாவகங்களின் ராகு கேது அமர்ந்து இருந்தாலே தோஷம் என்று கருதுவது முற்றிலும் ஜோதிடகணிதத்திற்கு புறம்பானது என்பதை கருத்தில் கொள்வது சிறப்புகளை தரும்.
ஜாதகருக்கு திருமணம் தாமதமாக ராகு கேது தோஷம் காரணமல்ல, நடைபெறும் ராகு திசை 4ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் ஜீவன ஸ்தான பலனை மட்டும் ஏற்று நடத்துவதால் ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றங்களை மட்டும் வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எதிர்வரும் சந்திரன் புத்தி ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் இணைவதற்கான அதிர்ஷ்ட வாய்ப்பை நல்கும் என்பது கவனிக்கத்தக்கது, "வாழ்த்துக்கள்"
குறிப்பு :
சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோகங்களை பெறுவார் இதில் மாற்றம் இல்லை, சுய ஜாதகத்தில் சாயாகிரகங்களான ராகு கேது தான் அமர்ந்த பாவகத்திற்கு வலிமை இழக்கும் விதத்தில் இருப்பின் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து 100% விகித அவயோகங்களை பெறுவார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை, எனவே சாயா கிரகங்கள் சுய ஜாதகத்தில் தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து பெரும் வலிமை என்ன ? என்பதில் தெளிவு பெறுவதே மிக துல்லியமான ஜாதக பலாபலன்களை பெற உதவி புரியும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக