பின்தொடர...

Tuesday, May 15, 2018

திருமணம் தாமதமாக காரணம் என்ன ? யோகமான வாழ்க்கை துணை அமையுமா ? அமையாத ?


 " பருவத்தில் பயிர் " செய்யவில்லை எனில், இல்லற வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும், பொதுவாக தொழில், பொருளாதரம் , சமூக அந்தஸ்து, சுய முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் போன்றவற்றை முன்னிறுத்தி பருவ வயதில் இல்லறவாழ்க்கையில் இணையாமல் தாமாதப்படுத்துவதும், தள்ளிபோடுவதும் ஆண் பெண் இருபாலருக்கும் பருவ வயது கடந்த பிறகு கடும் நெருக்கடிகளை வாரி வழங்க ஆரம்பித்து விடும், சரியான வரனோ அல்லது வதுவோ அமைவது என்பது குதிரைக்கொம்பாக மாறிவிடும், காலம் கடந்து செய்யும் திருமண வாழ்க்கையில் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் தம்பதியரே அதிகம் உண்டு, குறிப்பாக ஆணுக்கு 27, பெண்ணுக்கு 24 அகவைக்குள் இல்லற வாழ்க்கையில் இணைந்துவிடுவது நல்லது இதற்க்கு அதிகமாக தாமதம் ஆவது என்பது தவறான ஆலோசனையின் பெயரில் நமது வாழ்க்கைக்கு நாமே இன்னல்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு இணையானதாக அமைந்துவிடும்.

 பொதுவாக சுய ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது ஆண் அல்லது பெண் இருவருக்கும் சரியான பருவ வயதில் இல்லற வாழ்க்கையில் இணையும் வாய்ப்பை நல்கிவிடும், மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கப்பட்ட ஆண் அல்லது பெண்ணிற்கு மட்டுமே திருமண வாழ்க்கை என்பது வெகு கால தாமதத்தை ஏற்படுத்தும், குறிப்பாக மேற்கண்ட வீடுகள் பாதிக்கப்பட்டு நடைபெறும் திசாபுத்தியும் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரோ, ஜாதகியோ இல்லற வாழ்க்கையில் இணைய இயலாமல், பலவித தடைகளையும் தாமதங்களும் சந்தித்து, எவ்வித சுகபோகங்களையும் சுவீகரிக்க வலிமையின்றி தவிக்கும் சூழ்நிலையை தரும், சுய ஜாதகத்தில் மேற்கண்ட 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை அற்ற ஜாதகரோ, ஜாதகியோ எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,5,7,8,12ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பதை மட்டும் உறுதி செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு சகல  சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, திருமணம் தாமதமாக சுய ஜாதக ரீதியான உண்மையான காரணம் என்ன என்பதனை இன்றை பதிவில் இரு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !


லக்கினம் : மீனம்
ராசி : மேஷம்
நட்சத்திரம் :  அஸ்வினி 2ம் பாதம்

ஜாதகருக்கு அகவை 43 நடைபெறுகிறது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் பெரும் தோல்வியையே சந்தித்தது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகளை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமை பெற்று இருப்பின்னும், ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும், இதற்கான காரணத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையற்று காணப்படுகிறது, மேலும் ஜாதகரின் ஆயுள் ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடாக அமைந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது வருந்தத்தக்கது, எனவே ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் ஆயுள் பாவகம் 100% விகிதம் வலிமை அற்றும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்க்கு களத்திர ஸ்தானமான துலாம் வலிமை அற்றும் இருப்பது ஜாதகரின் திருமண வாழ்க்கை தடைகளுக்கும், தாமதத்திற்க்கும் அடிப்படை காரணமாக விளங்கிறது.

மேலும் ஜாதகருக்கு ( 01/02/2006 முதல் 01/02/2016 வரை ) நடைமுறைக்கு வந்த சந்திரன் திசை 10 வருடமும் 2ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு வீச்சில் தீமையான பலன்களை 2ம் பாவக வழியில் இருந்து வாரிவழங்கியது ஜாதகரின் இல்லற வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றியதுடன் கடும் நிதி பிரச்சனையை தந்தது, சந்திரன் திசை முழுவதுமான திருமண முயற்சிகள் ஜாதகருக்கு மிகப்பெரிய தோல்விகளை தந்தது என்பதே உண்மை, அதற்க்கு அடுத்து தற்போழுது நடைமுறையில் உள்ள செவ்வாய் திசை ( 01/02/2016 முதல் 01/02/2023 வரை ) ஜாதகருக்கு 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வழங்கிய போதும், 2,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழுவீச்சில் 2,8ம் பாவக வழியிலான இன்னல்களை வழங்கி திருமண தடைகளையும், பொருளாதார சீரழிவுகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பது ஜாதகரின் திருமண ஆசைகளுக்கு பெரும் தடைக்கற்களாக அமைந்துவிட்டது, எதிர்வரும் புதன் புத்தியில் ஜாதகரின் சீரிய முயற்சி இருப்பின், திருமண வாழ்க்கை கைகூடி வரலாம், இறை அருள் கருணை புரியட்டும்.

மேற்கண்ட ஜாதகருக்கு 2,8ம் வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமான துலாம் ராசியும் கடுமையாக பாதிக்கப்பட்டும், சந்திரன் மற்றும் செவ்வாய் திசை வலிமையற்ற 2,8ம் பாவக பலனை ஏற்று நடத்தியதுமே ஜாதகரின் திருமண தடைகளுக்கு அடிப்படை காரணம் என்பதை தெளிவுற கூற இயலும், ஜாதகர் யாதொரு எதிர்பார்ப்பும் இன்றி, சுய ஜாதகம் வலிமையுள்ள வாழ்க்கை துணையை தேர்வு செய்ய "ஜோதிடதீபம்" பரிந்துரை செய்கிறது. " வாழ்த்துக்கள் "


லக்கினம் : கன்னி
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : விசாகம் 1ம் பாதம்

ஜாதகிக்கு அகவை 31 நடைபெற்று கொண்டு இருக்கின்றது, திருமணத்திற்க்கான முயற்சிகள் யாவும் படுதோல்வியை சந்தித்துள்ளது, இதற்கான காரணம் ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களையும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% விகித இன்னல்களையும், 12ம் வீடு விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 80% விகித இன்னல்களை தந்துகொண்டு இருப்பது திருமண தடைகளுக்கான அடிப்படை காரணங்கள், மேலும் தற்போழுது நடைபெறும் சனி திசை 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தொழில் வழியிலான நன்மைகளை மட்டுமே வழங்கிக்கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது, மேலும் சனி திசையில் சந்திரன்,செவ்வாய்,ராகு புத்திகள் வலிமையற்ற பாவக பலனை ஏற்று நடத்தியதும், தற்போழுது நடைபெறும் குரு புத்தி பாதிக்கப்பட்ட 4,8,12ம் பாவக பலனை ஏற்று நடத்துவதும் ஜாதகிக்கு திருமண வாழ்விற்க்கான யாதொரு அறிகுறியையும் காட்டவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

எதிர் வரும் புதன் திசையும் ஜாதகிக்கு 3,7,11ம் வீடுகள் பாதகஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% விகித இன்னல்களை வாரி வழங்குவது ஜாதகிக்கு உகந்த நன்மைகளை தர சிறிதும் வாய்ப்பில்லை என்பதனால், சுய ஜாதகம் வலிமை பெற்ற ஓர் வரனின் ஜாதகத்தை தேர்வு செய்து இல்லற வாழ்க்கையில் நலம் பெறுவதே சாலச்சிறந்தது என்பதை கவனத்தில் கொள்க.

குறிப்பு :

சுய ஜாதகம் வலிமை அற்று இருப்பின் தனக்கு வரும் வாழ்க்கை துணையின் ஜாதகம் மிக மிக வலிமையுடன் இருப்பதாக தேர்வு செய்து திருமண வாழ்க்கையை இனிமையாக அமைத்துகொள்வதே புத்திசாலித்தனம் என்பதை அறிவுறுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

No comments:

Post a Comment