வியாழன், 17 மே, 2018

குழந்தையின் ஜாதகத்தில் 9க்கு உடையவன் 8ல் மறைந்தால் தகப்பன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா ?


கேள்வி :

 வணக்கம் அய்யா ,

எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சிம்மத்தில் ) எனவே எனக்கு ஆயுள் பங்கம் ஏற்படும் என்றும், குழந்தையின் வாழ்க்கையும் சீரழியும் என்று ஜாதகம் பார்க்க சென்ற இடத்தில் ஜோதிடர்கள் கூறியுள்ளனர், இது உண்மையா ? மேலும் எனது குழந்தையின் ஜாதகத்தில் 2ல் கேது 8ல் ராகுவுடன் புதன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, கடுமையான ராகுகேது தோஷத்தையும், 7ல் சூரியன் குழந்தைக்கு கடுமையான களத்திர தோஷத்தையும் தரும் என்கின்றனர் இது உண்மையா? எனது குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.


லக்கினம் : மகரம்
ராசி : சிம்மம்
நட்ஷத்திரம் : மகம் 3ம் பாதம்

எனது குழந்தையின் ஜாதகத்தில் ( ஆண் ) 9பதுக்கு உடைய கிரகம் புதன் ( மகர லக்கினம் ) 8ல் மறைவு பெற்றுள்ளது ( சிம்மத்தில் ) எனவே எனக்கு ஆயுள் பங்கம் ஏற்படுமா ?

பதில் :

சுய ஜாதக வலிமையை உணராமல், நவகிரகங்கள் ராசிகளில் அமர்ந்திருக்கும் நிலையை மட்டும்  கருத்தில் கொண்டு, பிதற்றும் வாய்ஜாலமாகவே இதை "ஜோதிடதீபம்" கருதுகிறது, தங்களது கேள்வியில் 9பதுக்கு உடைய கிரகம் 8ல் மறைவு என்பதாக உள்ளது, இதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம், தங்களது குழந்தையின் ஜாதகத்தில் 9ம் வீட்டிற்கு அதிபதி புதன் என்று வைத்துக்கொண்டாலும், அவர் லக்கினத்திற்க்கு 7ம் பாவகத்தில் அமர்ந்து இருக்கிறார் என்பதே உண்மை, ஏனெனில் ஜாதகருக்கு ஆயுள் ஸ்தானம் எனும் 8ம் பாவகம் சிம்ம ராசியில் 144:53:10 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 178:39:51 பாகை வரை வியாபித்து நிற்கிறது, ஆயுள் பாவகத்திற்கு உற்பட்ட பாகையில் புதன் அமராமல், சிம்ம ராசியில் 7ம் பாவகத்திற்கு உற்பட்ட ( 7ம் பாவகம் கடக ராசியில் 110:29:54 பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில்  144:53:10 பாகை வரை வியாபித்து நிற்கிறது ) 132:59:33 பாகையில் அமர்ந்திருப்பதால் 9 பதுக்கு உடைய கிரகம் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை மேலும் தனது பாவகத்திற்கு ( 9ம் பாவகத்திற்கு ) 11ல் அமர்ந்திருப்பது மிகுந்த சுபயோகங்களை 9ம் பாவக வழியில் இருந்து தரும் என்பதே உண்மை, 9ம் பாவகம் என்பது தகப்பனை குறிக்காது, தகப்பன் வழியிலான பாக்கியத்தை ( முன்னோர்கள் செய்த நற்பதிவுகள் ) குறிக்கும் என்பதால் தாங்களும் தங்களது குடும்பமும் யாதொரு கலக்கமும், பயமும் கொள்ளத்தேவையில்லை, தங்களின் உயிருக்கு தங்களின் குழந்தையின் ஜாதகத்தால் சிறு இடையூறும் ஏற்படாது என்பதை உறுதியுடன் கூற கடமைப்பட்டுள்ளது.

 மேலும் குழந்தையின் ஜாதகத்தில் தாய் தகப்பனை குறிக்கும் 4,10ம் வீடுகள் முறையே 4,10ம் பாவகங்களுடனே சம்பந்தம் பெறுவதால் பெற்றோருக்கு மிகுந்த சுபயோகங்களை நல்கும் யோக ஜாதகமாகவே காணப்படுகிறது என்பதால் தங்களுக்கும் தங்களது குழந்தைக்கும் மிகுந்த நன்மையையும், யோக வாழ்க்கையுமே  வாரி வழங்கும், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை சிறிதும் தாங்களும், தங்களது குடும்பமும் நம்பாமல் இருப்பது தங்களது வாழ்க்கையில் சிறப்புகளை சேர்க்கும்.

2ல் கேது 8ல் ராகுவுடன் புதன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை, கடுமையான ராகுகேது தோஷத்தையும், 7ல் சூரியன் குழந்தைக்கு கடுமையான களத்திர தோஷத்தையும் தரும் என்கின்றனர்  இதனால் குழந்தையின் வாழ்க்கையும் சீரழியுமா ?

பதில் :

 சுய ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்று இருப்பது மிகுந்த நமைகளை தரும் குறிப்பாக, தங்களது குழந்தையின் ஜாதகத்தில் பாவக கணிதத்தின் அடிப்படையில் 2ல் கேதுவும், 8ல் ராகுவும் அமரவில்லை, லக்கினம் ( கும்பம் ) மற்றும் களத்திர ( சிம்மம்) ஸ்தானமான 1,7ம் பாவகத்தில் அமர்ந்திருப்பதே உண்மை நிலை, மேலும் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது மற்றும் ராகு பகவான்  தாம் அமர்ந்த பாவகத்திற்கு  100 % விகித வலிமை சேர்க்கும் விதத்தில் அமைந்து இருப்பது குழந்தைக்கு 1,7ம் பாவக வழியில் இருந்து பரிபூர்ண சுபயோகங்களை வாரி வழங்கும், மேலும் ராகு பகவானுடன் சேர்ந்த சந்திரன்,புதன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் தரும் சுபயோகங்களை தனது பலனாக சுவீகரித்து ராகு பகவானே தருகிறார் என்பது ஜாதகத்தில் உள்ள சிறப்பு அம்சமாகும்.

சூரியன் கடகத்தில் உள்ள சத்துரு ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால், களத்திர ஸ்தானம் சார்ந்த கவலைகளை தவிர்த்துவிடுவது நல்லது, சுய களத்திர ஸ்தானம் ராகு பகவானால் 100% விகித வலிமையுடன் திகழ்வதால், களத்திர பாவக வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும் சுபயோகங்களை  தங்கு தடையின்றி பெறுவார் என்பதனையும், ஜாதகருக்கு யாதொரு களத்திர தோஷமும் இல்லை என்பதையும்  தெளிவுபடுத்த "ஜோதிடதீபம்" கடமைப்பட்டுள்ளது நண்பரே !

குறிப்பு :

சுய ஜாதக வலிமை என்பது அவரவர் சுய ஜாதகத்தில் பிறந்த தேதி,நேரம் மற்றும் இடம் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு, லக்கினம் முதல் 12 பாவகங்கள் பெரும் வலிமையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவதாகும், மேலும் இதுவே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு  துல்லியமான பலாபலன்களை காண வழிவகுக்கும், நவகிரகங்களின் ஆதிக்கம்  என்பது பொதுவானது, இது அனைவருக்கும்  சரிநிகர் ஜீவகாந்த சக்தியை வழங்கும் தன்மை கொண்டதாகும், சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் நவகிரகங்களின் ஜீவகாந்த சக்தியை சுவீகரித்து ஜாதகருக்கு யோகங்களையும், சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவகங்கள்  நவகிரகங்களின் ஜீவகாந்த சக்தியை  சுவீகரிக்க வலிமை அற்று அவயோக பலன்களை நடைமுறைப்படுத்தும் என்பதால், நமது சுய ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை பற்றி ஓர் தெளிவான விளக்கம் பெற்று இருப்பது நமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக