"மிருகசீரிடம் நட்சத்திரம்" கணிதம் மற்றும் வியாபாரநுணுக்கமும் ஒருங்கே அமையப்பெற்ற அருமையான நட்சத்திரம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மூன்றாவது உபய காற்று ராசியான மிதுன ராசியில் வியாபித்து இருக்கும் "செவ்வாயின்" மிருகசீரிடம் நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்சத்திரமாக பெற்ற அன்பர்கள் இயற்கையிலேயே வியாபர தந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல் தொழில் நுட்ப அறிவுத்திறன் கொண்டவர்கள், இவர்களது அறிவுத்திறன் என்பது சிக்கலான பல பாதுகாப்பு விஷயங்களையும், வியாபார ரீதியான திட்டமிடுதல்களையும் மிக லாவகமாக கையாளும் தன்மை பெற்றவர்கள், கருத்து பரிமாற்றம், புதிய தொழில் நுட்ப கருவிகளை கண்டுபிடிப்பது மற்றும் கையாள்வது, எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் தைரியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், விளையாட்டு துறையில் புகழ்மிக்க பதவி மற்றும் பரிசுகளை சுவீகரிக்கும் யோகம், உலகப்புகழ், உழைப்பிற்க்கான முழுமையான அங்கீகாரம் போன்றவற்றை மிக குறிக்கியகாலத்தில் பெற்று சாதனை புரிவார்கள், இவர்களது தமது வாழ்வில் சகலவிதமான சௌபாக்கியமும், உடல் நலம் மனோவலிமை, கல்வியில் மேன்மை, தொழில் விருத்தி, புத்திரபாக்கியம், பொருளாதார வளர்ச்சி என்றவகையில் பரிபூரணமான சுகபோகங்களையும், தன்னிறைவாக சுவீகரிக்க, மிக எளிமையான ரகசிய இறைவழிபாடு என்பது கீழ்கண்டவாறு அமையும்.
நாமக்கல் "நரசிம்மர் திருக்கோவில்" மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு நினைக்கும் காரியங்கள் யாவற்றையும் சாதிக்கும் பேராற்றலை 18நாட்களுக்குள் வாரி வழங்கும் வல்லமை பெற்ற திருக்கோவில், நரசிம்மரும் நாமகிரி தாயாரும் மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு உலகப்புகழ், வியாபார வெற்றி, திருமணயோகம், அரசுத்துறை ஆதாயங்கள் என்ற வகையில் சிறப்பான நற்பலன்களை தடையின்றி வாரி வழங்குவார்கள், வளர்பிறை செவ்வாய் அல்லது வெள்ளி கிழமைகளில் செவ்வாய், சுக்கிர ஹோரையில் வெண்ணிற பட்டு வஸ்த்திரம், மல்லிகை மலர்மாலை சாற்றி, நரசிம்மர் மற்றும் தாயாரை வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு மேற்சொன்ன சுபயோக பலன்கள் என்பது மூன்று வாரங்களில் வெகுசிறப்பாக நடைமுறைக்கு வரும், குறிப்பாக தொழில் ரீதியான தடை, திருமண தடை, புத்திர பாக்கிய தடைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்களுக்கு சிறப்பான நற்பலன்கள் நடைமுறைக்குவரும் என்பது உறுதியான அம்சமாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரம் மிதுன ராசி அன்பர்கள் விளையாட்டு மற்றும் வியாபார துறையில் கொடிகட்டி பறக்கும் யோகம் கொண்டவர்கள், சிறு வயது முதலே விளையாட்டு துறையில் அதீத ஆர்வமும், மிக எளிதான வெற்றிகளையும் பெறுவார்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மிக சிறப்பாக கையாளும் தன்மை பெற்றவர்கள், மேலும் திட்டமிட்டு காரியங்களை சாதிக்கும் குணம் பெற்றவர்கள், இவர்கள் சொல்வதுபோல் செயலிலும் தமது திறமையை காட்டும் வல்லவர்கள், குறிக்கோள்கள் லட்சியங்கள் போன்றவற்றில் தங்களது தனித்திறமையை வெகு அற்புதமாக வெளிப்படுத்துவார்கள், எந்த ஒரு விஷயத்தையும் சரியான கோணத்தில் அணுகும் வல்லமை பெற்றவர்கள், இவர்களது அறிவுரைப்படி செய்யும் காரியங்கள் மிகுந்தபாதுகாப்புடன் கூடிய வெற்றிகளை வாரிவழங்கும், நிதி சம்பத்தப்பட்ட திட்டமிடுதல்கள், சேமிப்பின் மூலம் வாழ்வை முன்னேற்ற பாதையில் நகர்த்திச்செல்லும் வல்லமை, தன்னிறைவான வருமான வாய்ப்பு, தொழில் சார்ந்த விஷயங்களில் தொலைநோக்கு பார்வை மற்றும் திட்டமிடுதல்கள், தொழிலாளர்கள் மற்றும் வேலையாட்களை நெறிப்படுத்தி, உயர்ந்த லட்சியங்களை மிக சிறப்பாக சுவீகரிக்கும் யோகம் என்ற வகையில் மிகுந்த நற்பலன்களை பெறுவார்கள்.
குறிப்பு :
மிதுனராசியில் "மிருகசீரிடம்" நட்சத்திரத்தை தனது ஜென்ம நட்ஷத்திரம் அல்லது லக்கினமாக பெற்ற அன்பர்கள், தகவல் தொழில் நுட்ப அறிவாற்றல் வியாபார நுணுக்கம் மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரியும் யோகம் பெற்றவர்கள், விரல்நுனியில் சகல விஷயங்களையும் வைத்திருக்கும் வல்லமை பெற்றவர்கள், திட்டமிடுதல் என்பது இவர்களின் தாரக மந்திரமாகும், செய்யும் காரியங்களில் மிக நேர்த்தியான விஷயங்களை கடைபிடிப்பவர்கள், சிரமமான நேரங்களில் தனது அறிவாற்றல் கொண்டு சிக்கல்களை தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள், இயல் இசை நாடக துறையில் புகழ்மிக்க கவுரவ பதவிகளை சுவீகரிப்பார்கள், ரகசிய கலைகளையும் தற்காப்பு விஷயங்களையும் முறைப்படி கற்றுணர்ந்தவர்கள், தேவையான நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொள்ளும் ஆளுமை திறனும் இவர்களுக்கு அமையப்பெற்று இருக்கும், இவர்களுக்கு மேற்சொன்ன இறை வழிபாடு இவர்களது வாழ்வில் ராஜயோகத்தை தன்னிறைவாக வாரி வழங்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை அன்பர்களே !
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக