திங்கள், 23 ஜனவரி, 2012

ஐந்தாம் வீடு கேள்வி பதில்

venkatesa gurukkalJan 21, 2012 07:48 PM
இது புரியவில்லையே,
இன்னும் சற்று விளக்கமுடியுமா?லக்னம் முதல் என்ன 5ம் வீடு அப்படித்தானே.ஆனால் லக்ன ஆரம்ப பாகை என்கிறீரே,சற்று விளக்கவும்?
 உதாரண ஜாதகம் :
 மேற்கண்ட ஜாதகத்தில் இலக்கணம் சிம்மமாகவும், ஐந்தாம் வீடு தனுசாகவும் வந்து ஐந்தில் ராகு அமர்ந்து இருப்பது  போல் காணப்படுகிறது , உண்மை நிலை என்னவென்று பார்ப்போம்.


ஜாதகர் பிறந்த நேர அமைப்பின் படி அவருக்கு சிம்ம லக்கினம், சிம்ம லக்கினம் பொதுவாக கால புருஷ தத்துவ முறைப்படி 120 பாகை முதல் 150 வரை உள்ளது. இதில் ஜாதகருக்கு லக்கினம் எனும் முதல் வீடு சிம்மத்தில்  148 . 57 பாகை ஆரம்பித்து கன்னியில் 179 . 29 பாகையில் முடிவடைகிறது . இதுவே சரியான கணிதம்.


இதில் ஒரு கேள்வி அனைவர் மனதிலும் எழும் அது லக்கினம் , சிம்மமா கன்னியா , இதில் சந்தேகமே தேவையில்லை  லக்கினம்  சிம்மதான், லக்கினம் எந்த பாகையில் ஆரம்பிக்கிறதோ அந்த ராசியே லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.


பெரும்பாலும் ஜோதிடர்கள் ஒரு லக்கினத்தை கணக்கில் கொள்ளும் பொழுது முதல் பாகையிளிருந்தே கணித்துவிடுகின்றனர் இது முற்றிலும் தவறான கணிப்பாகும் இதனால் ஜோதிடமே பொய்யாகும் வாய்ப்பு உள்ளது .
இதனால் ஒரு கிரகம் எந்த வீட்டில் உள்ளது என்று தெளிவாக தெரிந்துகொள்ள முடிவதில்லை, மேலும் பலன் சொல்லும் பொழுது பலன் தவறாக போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இனி பதிலுக்கு வருவோம் இந்த ஜாதகத்தில் மேலோட்டமாக பார்த்தால் ராகு ஐந்தில் இருப்பது போன்ற தோற்றம் தரும் உண்மையில், ஐந்தாம் வீடு ஆரம்பிக்கும் பாகை 268 . 42 , ஆனால் ராகு இருப்பதுவோ 262 . 34 எனவே ராகு பகவான் இருப்பது தனுசில் உள்ள நான்காம் வீட்டில். இதுவே உண்மை நிலை,
இதுவே ஜாதகருக்கு செயல் படும். 



விளக்கம் போதும் என்று நினைக்கிறேன் .
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
94433 -55696 98424 -21435

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக