Monday, January 30, 2012

ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள்

veluJan 30, 2012 04:06  கேள்வி 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அந்த ராகு கேதுவின் ஏழு கட்ட பிடிப்பிற்குள் லக்கினம் மாட்டாமல்
வெளியே இருந்தாலும் அல்லது லக்கினம் மாட்டிக் கொண்டு சந்திர
ராசி (சந்திரன்) மாட்டாமல் வெளியே இருந்தாலும் தோஷம் உண்டு.
ஆனால் 80% சதவிகிதப் பலன்கள் மட்டுமே இருக்கும். அதாவது
ஏற்படும் துன்பங்களில் 20% கன்செஷன் உண்டு:-))))

சிலர் கால சர்ப்ப தோஷம் இல்லாவிட்டாலும், இருப்பதைப் போன்ற
அளவிற்குத் துன்பப்படுவார்கள். அதற்குக் காரணம், அந்த ஏழுகட்ட
அமைப்பு இல்லாவிடினும், அவர்களுடைய ஜாதகத்தில் முக்கியமான
கிரகங்கள் எல்லாம், ராகு அல்லது கேதுவின் நட்சத்திர சாரத்தில்
(திருவாதிரை, சுவாதி, சதயம் - அஸ்வினி, மகம், மூலம் )இருக்கும்.
அதை ஆராய்ந்து பார்த்தால் உண்மை புலப்படும். subbiah
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அய்யா இது நான் படித்து ..இதன்படி தான் எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளதா என்று கேட்டேன் ..விளக்கவும் ? பதில் :


இது முற்றிலும் தவறான கருத்து ஆகும் ,  உங்களின் ஜாதக அமைப்பில் ராகு கேது நல்ல நிலையில் உள்ளனரா அல்லது, கெடுதல் செய்கின்றனர என்பதையே, தெரிந்து கொள்ளாமல் குத்து மதிப்பாக ஒரு கருத்தை சொல்லுவது, மிகவும் நகைப்ப்புகுரியது, 

பொதுவாக எந்த ஒரு கிரகமும் தள்ளுபடி போனஸ் எல்லாம், எந்தகாலத்திலும் தர வாய்ப்பில்லை,  அப்படி செய்யதால் அது கிரகமே அல்ல என்பதே உண்மை.

ஒரு ஜாதக அமைப்பில் எந்த ஒரு கிரகமும் தான் செய்ய வேண்டிய பணிகளை சரியாக செய்து விடும், அது நன்மையானாலும் தீமையானாலும் இதுவே கிரக தத்துவம்.   

உங்களது ஜாதக அமைப்பில் ராகு கேது எனும் இரு கிரகங்களும் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன ,

இதன் அமைப்பில் உங்களது 5  ம், 11 ம் , வீடுகள்  முறையே நன்மையான பலனையே ஜாதகர் அனுபவிப்பார்.

5  ம்  பாவத்தால் நடக்கும்  நன்மைகள் :

ஜாதகர் தமது பூர்விகத்தில் இருந்தால் படிப்படியான முன்னேற்றம் பெறலாம் ,
( இதில் பூர்வீகம் என்பது ஜாதகரின் தகப்பனார் பாட்டனார் வாழ்ந்த ஊர் அதை சுற்றி 50 கிலோ மீட்டர் ) பூர்விகத்தை விட்டு வெளியே வந்து விட்டால், ஜாதகத்தில் உள்ள யோக பலன்களை முழுமையாக அனுபவிக்க முடியாது, மேலும் குல தெய்வத்தின் பரிபூர்ண அருளாசி எப்பொழும் உண்டு , தமது குழந்தைகளால் ஜாதகர் நன்மையான பலன்களை மட்டுமே அனுபவிப்பார்,
தமது குல தெய்வ வழிபாட்டினை முறையாக செய்து வர அனைத்து நலன் களும் அடையப்பெருவார் , உதவி செய்ய பலர் முன்வருவார்கள் , சாஷ்திரத்தில் நல்ல ஞானம் ஏற்றப்படும், வருமுன் அறியும் உணர்வு இயற்கையிலேயே அமைந்து விடும்,  நல்ல குணம் , நல்லறிவு இதன் துணையால் எவ்வித பிரச்சனைகளுக்கும்  தீர்வு காணும் அமைப்பு ,  ஐந்தாம் வீட்டில் அமர்ந்த ராகுவால் ஏற்ப்படும் , ஆனால் ஜாதகர் தினமும் சூரியன் வருவதிற்கு முன்பே சூர்யா நமஸ்காரம் செய்து வருவது அவசியம் , அப்பொழுதுதான் இந்த யோகங்கள் முழுமையாக கிடைக்க பெறுவார்.

11  ம்  பாவத்தால் ஏற்ப்படும் நன்மைகள் :

இரண்டாவது திருமண வாழ்க்கையினால் நன்மை , 34 வயதுக்கு மேல் சிறப்பான முன்னேற்றம், சுய தொழில் செய்வதால் முன்னேற்றம், புதையல் லாபம், ( புதையல் என்றவுடன் சற்றே சிந்திக்கவும் தமது அறிவாற்றலால் புதையலுக்கு இடாக வருவாயினை  பெறுவது ) தம்மை விட வயது அதிகம் உள்ளவர்களால் இலாபம் , வெளிநாடுகளில் இருந்து வரும் அதிக வருவாய் , சக்தி வழிபடு செய்வதால் நல்ல முன்னேற்றம், வருடம் ஒருமுறை திருப்பதி வளர்பிறை திங்கள் அன்று சென்று வழிபாடு செய்வதால் சகல அதிர்ஷ்டங்களையும் அடையும் வாய்ப்பு போன்ற நல்ல பலன்களை கிடைக்கபெறலாம்,
மேலும் விரிவான பலன் தெரிந்து கொள்ள நேரில் வருவது சிறப்பு :

1 comment:

 1. வணக்கம்,
  10ம் வீடான தொழில் ஸ்தானத்தை பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.
  ஒரு ஜாதகர் என்ன தொழில்/வேலை செய்து வருமானம் ஈட்டுவார் என எப்படி கண்டுபிடிப்பது?

  உதாரணமாக
  1.பத்தாம் வீட்டில் அமர்ந்த கிரகத்தின் காரகமான தொழிலா?

  2.சாரம் பெற்ற கிரகத்தின் தொழிலா?

  3.பத்தாம் வீட்டுக்கு உரியவனின் காரக தொழிலா?

  4.பத்தாம் வீட்டுக்கு உரியவன் சாரம் பெற்ற கிரகத்தின் காரகமான தொழிலா?

  5.பத்தாம் வீட்டை பார்ப்பவனின் காரகமான தொழிலா?

  6.அல்லது வேறு எப்படி முடிவு செய்வது?

  ReplyDelete