வெள்ளி, 30 மார்ச், 2012

"ருண பந்தம்"










உலக " வாழ்க்கை என்பது வியாபாரம், அதில் ஜனனம் என்பது வரவாகும், மரணம் என்பது செலவாகும்" என்றார் கவியரசர்.

" போனால் போகட்டும் போடா " என்று விரக்தியானவர்கள் சொல்லலாம். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் யாரோருவரும் அப்படி நினைக்கலாமோ? வாழ்க்கை என்பதெல்லாம் உவமான, உவமேயமே அன்றி வேறில்லை. இது யாவருக்கும் பொருந்தும்.

இறை அருளின் கருணையினாலும் , பூர்வ ஜென்ம புண்ணியத்தை அனுசரித்தும் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடன்களை ( ருணம் ) ஏற்றுக்கொண்டே பிறக்கிறார், அவை :

1 ) தேவ ருணம் :

தேவ ருணம், " அணையாத அக்னி காரியங்களை செய்வதால் தீரும் என்பது நியதி " கலியுகத்தில் 
இது சாத்தியம் இல்லை. பின் எவ்வாறு தீர்ப்பது ?

அனுதினமும் ஆண்டவனை ஆரதிப்பதோடு நில்லாமல் " குல தெய்வத்தை
 கொண்டாடுவதால் தீரும் " .

ஒரு ஜாதகர் எவ்வளவு கஷ்டங்கள் நஷ்டங்கள் வந்தாலும், துயரமும், சோதனைகளும் வந்தாலும் குல தெய்வத்திடம் மனம் உருக வேண்டினால் பாரம் குறையும், மார்க்கம் பிறக்கும். இதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை .

வம்சா வளியினருக்கு, மொட்டை அடிப்பது, காது குத்துவது மட்டும்  " குல தெய்வத்தை நாடினால் போதும் என்றில்லாமல், பிறந்த நாள் , திருமண நாள் , அமாவாசை  , பொர்ணமி , மஹாலய பட்சம் , சொத்து வாங்கும் போதும், இன்ன பிற முக்கியமான நிகழ்வுகளின் போதும், " குலம் தளைக்க உதவிடம்மா" என குல தெய்வத்திடம் வேண்டிட வேண்டும் .

எளிமையாக சொன்னால் , நமது மாவட்ட கலெக்டர்தான் நமக்கு உதவுவார், 
மேலும் அது அவரது கடமை , வேறு அதிகாரி ஒருவரை, எனக்கு அவரை 
தெரியுமே என்றாலும், அவரால் எதோ பரிந்துரைக்க முடியுமோ தவிர 
"Executor" நம் குல தெய்வமே .

" நான் பாவி, பாவ கர்மமுடையவன், பாவத்தையே  செய்பவன் , 
பாவத்துடன் சம்பந்தம் உடையவன் உம்மை சரணடைந்தேன். 
என்னை காப்பாற்ற வேண்டும் என்று இறை நிலையை " அபயம் " என்று அடைந்தால் " வரதம்" கொடுத்தேன் என இறைவன் இறங்குவார்.

ஆக லயிப்புடன் , பக்தி செலுத்தி வேண்டுதல் நலம் தரும் , நம் ஆணவம் , கன்மம் , மாயை , நீங்கி சத் , சித் , ஆனந்த நிலையை அடைய 
" சிரத்தையுடன்" பிரார்த்திக்க வேண்டும் .

வீட்டுக்கு ஒரு பிரதிநிதி என்றில்லாமல் குழந்தை, குட்டிகளோடு,
 குடும்பத்தோடு  பிரார்த்திக்க வேண்டும் . இதனால் அடுத்த 
சந்ததிக்கு இதன் அருமை மற்றும் பாரம்பரியம்  புரியும்.

2 ) ரிஷி ருணம் :

உலக நன்மையின் பொருட்டு சான்றோர்கள் பலர் சிறந்த 
சாஸ்திரங்களை இயற்றி வைத்திருக்கின்றனர். அவற்றை தானும் 
கசடற கற்று, பிறருக்கு கற்க உதவிட வேண்டும் . " கல்வி கொடை" மிகச்சிறந்தகும். வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு " கல்வி கற்க உதவி செய்வது மிக சிறந்த தொண்டாகும் .

3 ) பித்ரு ருணம் :


நாம் நமது முன்னோருக்கு கடமை பட்டுள்ளோம் , அவர்கள் 
எவ்வுலகில் இருந்தாலும் , எந்த   நிலையில் இருந்தாலும் , அவர்கள் நன்மை கருத்தில் குறித்து நித்தமும் எண்ணுதல் வேண்டும் .

உயிருடன் இருக்கும் பெற்றோர்க்கு பணிவிடை செய்வது பித்ரு ருணத்தின் ஒரு பகுதியாகும் , சொல்ல போனால் பெருகிவரும் முதியோர் இல்லங்கள் தேவையில்லையோ என என்னும்படி வாழ வேண்டும் .

தென் புலத்தார் தெய்வம் விருந்தொக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை " எனும் குறள் படி தென்புலத்தார் ஐந்து வகையானவர்கள் :

புரூரவர்கள்          - தேவர்களின் அம்சம்
ஆருத்ரவர்கள்     -  ரிஷிகளின் அம்சம்
வசுக்கள்                 -  அமரரான தந்தை
ருத்ரர்                       -  அமரரான தாத்த
ஆதித்யர்                 -  அமரரான முப்பாட்டனார்

இவர்களை வழிபடுவது தலையாய கடமையாகும் .

4 ) நர ருணம் :

சக மக்களுடைய பசி, பிணி , இவைகளை  போக்க உதவுவது, சுற்றியுள்ளோர் வாழ்க்கையை பன்படுத்துதலும் மற்றும் பல தொண்டுகள் நர ருணத்தை தீர்க்கும் .

அன்னதானம்  செய்தாலும் , மருத்துவ முகாம்கள் , இன்ன பிற உதவிகளும் செய்வது இதன் காரணமாகத்தான் .

5 ) பூத ருணம் :

கால்நடைகள் உள்ளிட்ட மற்ற ஜீவன்கள் மனித வாழ்க்கைக்கு பல விதங்களில் பயன்பட்டு வருகின்றன . அவ்வுயிர்களை பேணி பாதுகாப்பது நமது கடைமைகளில் ஒன்றாகும் .


நன்றி :  திரு ஆர் மணிவண்ணன்

ஜோதிடன் வர்ஷன்
9842421435 
9443355696 

                  

1 கருத்து:

  1. குல தெய்வத்தின் பெருமையை ஒவ்வரு முறையும் நீங்கள் கூறும்போது குலதெய்வ மகிமையை தெரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது

    ருணம் பத்தி உங்களின் விளக்கம் அருமை

    ஆதி கால மனிதன் இதை ஒவ்வரு வழியில் பின்பற்றி உள்ளன்,,

    நமக்கு சொல்லிதர ஆள் இல்லை .. இது போல் அறிய தகவல்கள் நீங்கள் பகிர்ந்ததுக்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு