வியாழன், 8 மார்ச், 2012

பலன் சொல்ல மூன்று வழி !




கேள்வி :

எனக்கு ஒரு சிறிய ஐயம். ஒருவருக்கு சந்திர தசா நடக்கிறது எனில் 10 வருடம் நடைபெறும் சந்திர தசாவின் நன்மை தீமைகளை கோச்சாரத்தில் 2 நாளைக்கு ஒரு முறை மாறும் சந்திரனை எப்படி சம்பந்தப்படுத்தி பலனை நிர்ணயிப்பது. 

மற்றொரு ஐயம். எந்த தசாவிலும் சுயபுக்தி வேலை செய்யாது என்றும் அப்படி நன்மை செய்தால் தசா முழுவதும் நற்பலன்களை செய்யாது என்றும் ஜோதிட கருத்து உள்ளதே. தங்களின் கருத்து என்ன?

ஒரு தசாவில் சுய புக்தி பலன்களை எப்படி நிர்ணயம் செய்து பலனை சொல்வது? ஏனெனில் பல தசாக்களில் சுய புக்தி காலம் ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் போது அவருக்கு வாழ்வில் முக்கியமான சம்பவங்கள் எதுவும் நடைபெறாதா? அவற்றை ஜோதிடர்கள் சுயபுக்தி பலன் தராது என்று நினைத்து சொல்லாமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காக கேட்கிறேன்.

பாரம்பரிய ஜோதிட முறைக்கும் நமது ஜோதிட முறைக்கும், கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது ஏனெனில் பாரம்பரிய முறையில் ஜோதிட பலன்களை தெரிந்து கொள்வது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பதை போன்றது நீங்கள் எவ்வளவுதான் ஆராய்ச்சி செய்தாலும் நிச்சயம் சரியான தெளிவான பதில் கிடைப்பது அரிது , இருந்தாலும் உங்களது ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள், ஜோதிடம் என்றாலே தெளிவு மற்றும் சரியான வாழ்வியல் வழிகாட்டி என்று பொருள், நமக்கு தேடுதல் இருந்தால் நிச்சயம் இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் .

சரி பதிலுக்கு வருவோம்  ஒருவருக்கு சந்திர தசா நடக்கிறது எனில் 10 வருடம் நடைபெறும் சந்திர தசாவின் நன்மை தீமைகளை கோச்சாரத்தில் 2 நாளைக்கு ஒரு முறை மாறும் சந்திரனை எப்படி சம்பந்தப்படுத்தி பலனை நிர்ணயிப்பது.  

பலனை சந்திரனை வைத்து நிர்ணயம் செய்ய தேவை இல்லை, சந்திரன் திசை எந்த வீடுகளின் பலனை நடத்துகிறது கண்டறிந்து அந்த வீடுகள் நன்மையை செய்கிறதா தீமையை செய்கிறதா என்று கண்டறிந்து, அந்த வீடுகளுக்கு நவகிரகங்கள் கோட்சார ரீதியாக தொடர்பு உள்ளாத அதனால்  நன்மையா தீமையா என பலன் கணிதம் செய்தால் மட்டும் போதும். நமக்கு நிச்சயம் சரியான ஜாதக பலன் கிடைத்துவிடும்.
எந்த தசாவிலும் சுயபுக்தி வேலை செய்யாது என்றும் அப்படி நன்மை செய்தால் தசா முழுவதும் நற்பலன்களை செய்யாது என்றும் ஜோதிட கருத்து உள்ளதே. தங்களின் கருத்து என்ன?

திசைகளில் சுய புத்தி வேலை செய்யாமல், ஒரு வேலை ஓய்வெடுக்க ஊட்டி கொடைக்கானல் , என்று சுற்றுள சென்றுவிடுமா என்ன ? எந்த திசையாக இருந்தாலும் அது எந்த புத்தியாக இருந்தாலும் தனது கடமையை சிறிதுகூட தவறாமல் செய்யும் தன்மை பெற்றவை நவ கிரகங்கள். இதில் எவ்வித சந்தேகம் தேவையில்லை.

 இதில் அதைவிட நகைசுவை சுய புத்தியில் நன்மை செய்தால் தசா முழுவதும் நற்பலன்களை செய்யாது என்று சொல்வது,  ஜோதிட கணிதம் தெரியாமல், குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் மட்டுமே பயன் படுத்தும் வாய் ஜாலம். 

எந்த திசை புத்தியாக இருந்தாலும், நிச்சயம் நன்மையோ தீமையோ துல்லியமாக செய்யும் இதில் எந்தவிதமான விதி விளக்கும் இல்லை, சுய புத்தி நன்மை செய்தால் திசை முழுவது நன்மை செய்யாது என்பது முற்றிலும்  தவறான கருத்து . இந்தமாதிரியான கணிப்புகள் எந்த பழமையான ஜோதிட நூல்களிலும் இல்லை .

ஒரு ஜாதகருக்கு பலன் சொல்ல மூன்று வழியினை மட்டும் பயன்படுத்தினால் போதும்  தெளிவாக மற்றும் சரியாக பலன் சொல்லிவிட முடியும் . அது கீழ்க்கண்டவாறு :

1    நடக்கும் திசை, புத்தி  எந்த வீடுகளுடன் சம்பந்தம் பெற்று எந்த வீட்டின் பலனை செய்கிறது .

2   அவ்வாறு நடக்கும் திசை, புத்தி ஜாதகருக்கு நன்மை செய்கிறதா, அல்லது தீமை செய்கிறதா ?

3   அந்த வீடுகளுடன் கோட்சார ரீதியாக சம்பந்தம் பெரும் நவ கிரகங்கள் நன்மை செய்கிறதா அல்லது தீமை செய்கிறதா ?

இந்த விஷயங்களை துல்லியமாக தெரிந்து கொண்டாலே ஜாதகருக்கு சரியான மற்றும் தெளிவான பதிலை சொல்லிவிட முடியும், வேறு எந்த விஷையங்களையும் போட்டு குழப்பி கொள்ள தேவை இல்லை .

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
    

8 கருத்துகள்:

  1. //திசைகளில் சுய புத்தி வேலை செய்யாமல், ஒரு வேலை ஓய்வெடுக்க ஊட்டி கொடைக்கானல் , என்று சுற்றுள சென்றுவிடுமா என்ன ? //
    ,// குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் மட்டுமே பயன் படுத்தும் வாய் ஜாலம்.//

    உங்க நகைச்சுவைக்கு(குசும்பு ) அளவே இல்லையா?? இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.....

    பதிலளிநீக்கு
  2. //பலனை சந்திரனை வைத்து நிர்ணயம் செய்ய தேவை இல்லை, சந்திரன் திசை எந்த வீடுகளின் பலனை நடத்துகிறது கண்டறிந்து அந்த வீடுகள் நன்மையை செய்கிறதா தீமையை செய்கிறதா என்று கண்டறிந்து, அந்த வீடுகளுக்கு நவகிரகங்கள் கோட்சார ரீதியாக தொடர்பு உள்ளாத அதனால் நன்மையா தீமையா என பலன் கணிதம் செய்தால் மட்டும் போதும். நமக்கு நிச்சயம் சரியான ஜாதக பலன் கிடைத்துவிடும்..//

    நல்ல விளக்கம்

    பதிலளிநீக்கு
  3. ”கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று”.

    நன்றி ஐயா, தங்களின் பதில் நல்லதொரு தெளிவை கொடுத்தது. தங்களின் தெளிவான, முடிவான பதில் மூலம் ஜோதிடத்தில் உங்கள் நிபுணத்துவம் மிளிர்கிறது.

    ஜாதகத்தின் மூலம் ஒருவர் எந்த தொழிலில் ஈடுபட்டால் வெற்றிபெறலாம் என்று நிர்ணயிப்பது எப்படி? 10ம் பாவம் ஜீவனத்தை குறிக்கிறது. 6மிடம் பிறருக்கு கீழ் பணியாற்றும் நிலையை குறிக்கிறது. 11ம் பாவம் நமக்கு வருமானம் வரும் வழியை குறிக்கிறது. 2ம்பாவம் ஜாதகரது செல்வநிலையை குறிக்கிறது.

    இப்படி பல பாவங்கள் தொழிலை குறிப்பதால் நாம் எந்த பாவத்தை கொண்டு ஜாதகரது அடிப்படை ஜீவனத்தை நிர்ணயிக்க வேண்டும்.

    கேள்விகள் மூலம் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்கவும்.

    ஜோதிடத்தில் நல்ல பாண்டித்யம் பெற்றவர்களால் தான் அடிப்படை மாணவர்களுக்கு மிகத் தெளிவாக வழிமுறைகளை சொல்ல முடியும்.

    தாங்கள் ஜோதிடத்தை மிகவும் தெளிவாக விளக்குவதால் எனது கேள்விகள் மூலம் விளக்கங்கள் கிடைத்தால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. முறையாக ஜாதக ஆலோசனை பெற்றுக்கொள்ளவும், இலவச ஆலோசனை வழங்க படுவதில்லை

      நீக்கு