ஞாயிறு, 4 மார்ச், 2012

சனி பார்வை விளக்கம் !





கேள்வி :

நானும் படித்திருக்கிறேன் சனிக்கு 6ம் பார்வை உண்டு என்று. சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் போது 6 என்ற என்ணை 3 போல் எழுதுவதால் 3ம் பார்வையாக மாறிவிட்டது என்ற கருத்து எனக்கு சிறிது ஐயத்தை உண்டாக்குகிறது. அப்படியானால் ஜோதிடம் தோன்றியது சமஸ்கிருதத்திலிருந்தா? அவர்கள் கண்டறிந்ததை வைத்து தான் தமிழில் மொழிபெயர்த்து நமது சித்தர்களும், முனிவர்களும் பலன்களை எழுதியிருக்கின்றனரா? விளக்கம் தேவை. ?


பதில் :
 
தமிழன் என்று சொல்லிக்கொள்ள இந்த இடத்தில் நாம் பெருமை கொள்ளலாம் பல தமிழ் ஆராய்ச்சியாளர்களின், கருத்து என்னவென்றால் முக்காலங்களையும் உணர்த்தும் இந்த ஜோதிட கலையானது நமது தாய் மண்ணான தமிழகத்தில், சித்தர்களாலும் முனிவர்களாலும் கண்டறியப்பட்டு, மக்களுக்கு பயன்பட, எழிய நடைமுறையில் தமது சிஷ்யர்களுக்கு சித்தர்களால், உபதேசிக்கப்பட்ட ஒரு மிகசிறந்த கலையாகும்.

 இந்த ஜோதிட கலையை ஏடுகளிலும் ஓலை சுவடிகளிலும்  , ஞான மார்க்கத்திலும் குரு குல அமைப்பிலும், போதிக்கப்பட்டு, மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க ஜோதிட கலை பயன்படுத்தப்பட்டது.

இந்த ஜோதிடக்கலை தமிழகத்தில் பல சிறந்த நாடாளும் மன்னர்களையும் , ராஜ தந்திரிகளையும் , சிறந்த மந்திரிமார்களையும்
 ( இப்பொழுது இருக்கும் மந்திரிமார்கள் அல்ல ) 64 கலைகளிலும் சிறந்து விளங்கும் பல கலைனர்களையும் உருவாக்கிய பெருமை இந்த சித்தர்கள் அருளிய ஜோதிட கலையினாலேயே உரு பெற்றனர் என்பது முற்றிலும் உண்மை 


( எடுத்துக்காட்டாக : பிறக்கும் ஒரு குழந்தை சிறந்த தளபதியாக விளங்க வேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரத்தில் கரு கூட வேண்டும் என ஜோதிட கலை மிக சிறந்த கணிதத்தை தருகிறது, இது போல் அனைத்து நன்மை தீமை அமைப்பை பெறவும் ஜோதிட கலை மிக சிறந்த கணிதத்தை தருகிறது )

இந்த ஜோதிட கலையை தமிழகத்தில் குரு முகமாக நின்று பயின்று தமது மன்னர்களுக்கு பயன்படும் விதமாக இருக்க தமிழகத்திற்கு வந்த சிலர், தமது சமஷ்கிருத மொழியில் மொழி பெயர்க்கும் பொழுது இந்த விஷயங்கள் ( 6 என்ற என்ணை 3 போல் எழுதுவதால் 3ம் பார்வையாக மாறிவிட்டது ) மருவியிருக்க வாய்ப்புள்ளது

அதாவது சுவற்றில் இட்ட பந்து போல், நமது ஜோதிட  கலை பற்றி நம்முடைய இடத்தில் தேடாமல் மற்ற இடங்களில் தேடியாதால் ஏற்ப்பட்ட குழப்பம் இது . நமது பழமையான ஓலை சுவடிகளில் ஜோதிட கலை சம்பந்தப்பட்ட ரகசியங்கள்  இருந்ததை ( அதன் அருமை உணர்ந்து ) மற்றவர்கள் இங்கு வந்து தமது மொழியில் பிரதி எடுத்து கொண்டனர் , நமது ஆட்ச்சியாளர்கள் இதன் அருமை புரியாமல், பல்கலை கழகங்களில் ஜோதிட சம்பந்த பட்ட பாடங்களை மட்டும் வைத்துவிட்டு நன்றாக தூங்கி விட்டனர் .

 6 என்ற என்ணை 3 போல் எழுதுவதால் 3ம் பார்வையாக மாறிவிட்டது , இது போல் பல குழப்பங்கள் ஜோதிடத்தில் உண்டு, எனவே ஜோதிடத்தை தமிழ் வழியில் இருந்து ஆராய்ச்சி செய்தால், மிகசிறந்த ஜோதிட ஞானம்
 உண்டாகும் .

எங்கு போனாலும் அது எந்த விஷயம் ஆனாலும்  அதன் அடிப்படியில் நமது தமிழ் இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்பதில் தமிழர்கள் பெருமைகொள்ள உரிமையுண்டு .

குறிப்பு : 

நான் தெரிவிக்கும் கருத்துக்களை உங்களின் சிந்தனைக்கு எடுத்துகொண்டு சிறந்ததை ஏற்றுக்கொள்ளுங்கள் , மற்றதை தவிர்த்து விடுங்கள், உங்களின் சிந்தனைகள்  மற்றும் கேள்விகள் கூட பல உண்மைகளை வரவைக்ககூடும் .
உங்களை சிந்திக்க வைக்கவே எமது ஆவல்.

 கருத்துக்களை திணிப்பது அல்ல !

ஜோதிடன் வர்ஷன் 
9842421435  
9443355696    

 

1 கருத்து: