புதன், 14 மார்ச், 2012

தொழில் ஸ்தானம் சிறப்பாக அமைந்தால், ஜாதகருக்கு அமையும் தொழில்கள் !



ஒவ்வெருவருக்கும் பிறக்கும் பொழுதே இறைவன் ஜீவனம் செய்யும் வாய்ப்பினை நன்கு உணர்த்தியே படைத்து விடுகிறார், சரியான நேரம் வரும்பொழுது ஜாதகருக்கு இந்த நிலை விழிப்புணர்வால் ( தனது அறிவின் நிலையிலிருந்து ) தெரிந்து கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொள்கின்றனர், 

இருப்பினும் ஜாதகரீதியாக 100  சதவிகிதம் தெரிந்துகொண்டு அந்தவகை தொழிலை ஜாதகர் தன்னம்பிக்கையுடன் செய்வாரே ஆயின் நிச்சயம் நல்ல வாழ்வினை பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை .

ஒரு ஜாதகருக்கு ஜீவன ஸ்தான அதிபதி , மற்றும் ஜீவன ஸ்தானம் எனும் இரு அமைப்பை மட்டுமே வைத்துக்கொண்டு, ஜாதகர் எந்த தொழில் செய்தால் சிறப்பாக வருவார் என்று தெளிவாக சொல்லிவிட முடியும், மேலும் தொழில் அமைப்பில் இரு நிலைகளை வைத்தே ஜாதகருக்கு அமையும் தொழிலை சொல்லிவிட முடியும் அது கீழ்க்கண்டவாறு அமையும் :

ஒரு ஜாதகருக்கு சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் முதல் நிலை தொழில்கள் :

மருத்துவம் , நீதிமன்றம் , ரயில்வே , தொழிற்சாலை , காவல் துறை , கெமிக்கல் , இஞ்சினியர் , அரசு அதிகாரி , விஞ்ஞானி , நீதித்துறை , ஜவுளி , பங்கு மார்க்கெட் , மேனேஜர் , விளையாட்டு வீரர் , அரசியல் , நகை , பணம் , விமானம் , சமயத்துறை , துப்பறியும் இலாகா , வங்கி , கல்வி நிறுவனங்கள், அரசு ஒப்பந்த வேலை, அணுசக்தி , பொதுத்துறை நிறுவனம், நில ஆய்வாளர் , சென்சஸ் ஆபீஸ் , கணித துறை போன்ற துறைகளில் சிறந்து விளங்குவர் ,

   ஒரு ஜாதகருக்கு சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது  என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் இரண்டாம் நிலை தொழில்கள் :

தொழிலாளி , மெக்கானிக் , அரசுக்கு பொருட்களை சப்பளை செய்வோர் , அரசு சார்ந்த தொழில்கள் , டெக்னீசியன் , பாய்லர் , ரோமம் , சுரங்கப்பொருள் , உலோகம் , சர்க்கரை , ரப்பர் , எலெக்ட்ரிக்கல் சாதனங்கள் போன்ற துறையை சார்ந்தவர்களாக இருப்பார்கள் .

 ஒரு ஜாதகருக்கு சந்திரன் , புதன், குரு, சுக்கிரன் என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் முதல் நிலை தொழில்கள் :

ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் படை , ரயில்வே அதிகாரி , மருந்துகள், தூதுவர்கள், கணித ஆசிரியார்கள் , பொறியியல் துறை சார்ந்தவர்கள் , பஸ் முதலாளி , நர்ஸ் , மொழி பெயர்ப்பாளர் , கவுன்சிலர் , வங்கி , நீதி துறை , நீர் விநியோகம் , ஓவியர் , இசை, குழந்தை மருத்துவர் , மன நல மருத்துவர் , அரசியல் , பொது நல வாதி , நீதி மன்றம் சார்ந்த தொழில் , எழுத்தாளர் , வெளிநாட்டில் வேலை , பேச்சாளர் , நீர்பாசன துறை, விவசாயம், உணவகம் , 64  கலைகள் , இலக்கியம் , சாஸ்திரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார் .

 ஒரு ஜாதகருக்கு சந்திரன் , புதன், குரு, சுக்கிரன் என்ற கிரகங்கள் ஜீவன அதிபதியாக  வந்தால் அவருக்கு அமையும் இரண்டாம்  நிலை தொழில்கள் :

திரவ பொருட்கள் , வியாபாரம் , மாலுமி , பாய்லர் , விவாசய தொழிலாளி , சிற்றுண்டி சாலை , லாட்ஜ் , உரம் , ட்ராவல் ஏஜென்சி , ஜவுளி , பால் , வாசனை திரவியம் , புரோக்கர் , விர்ப்பனையாளர் , மருந்துகடை , வட்டி தொழில் , மீனவன் , மண்ணெண்ணெய் , ஆறு, குளம் , கிணறு , போர்வெல் , கடல் , சார்ந்த தொழில்கள் , இரவு நேர வேலைகள், சமையல் பொருட்கள் , எண்ணெய், பட்லர்,  சமையல் , ரொட்டி கடை , பெட்ரோல், கண்ணாடி, சாய பட்டரை , டோபி, ஐஸ், சிமென்ட் , பார்பர் , குளிர்பானம் , டெய்லர் , பழம் , காய்கறி , விளையாட்டு பொருட்கள் , தரகர், சாராயம் , பொழுது போக்கு சாதனங்கள் , நீரோட்டம் பார்ப்பவர் , நாடகம் ,சினிமா நடிகர்கள் , போன்ற துறையை சார்ந்தவர்கள் . 

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக