Wednesday, March 7, 2012

அழகான பெண், அதிர்ஷ்டமான பெண் யாருக்கு மனைவியாக அமைவாள் ?




ஒரு ஜாதகருக்கு ஏழாம் வீடோ அல்லது இரண்டாம் வீடோ, ரிஷபம் , கடகம் , சிம்மம், துலாம் , தனுசு, கும்பம், மீனமாக  அமைந்து, அந்த வீடுகள் முறையே 100  சதவிகிதம் சுய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்.

 நிச்சயம் அந்த ஜாதகருக்கு அமையும் மனைவி, நிச்சயம் அதிர்ஷ்டம் நிறைந்த ஜாதகியாகவும், அழகான அமைப்பை கொண்டவளாகவும் இருப்பாள் என்பது  முற்றிலும் உண்மை.

மேலும் ரிஷபம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி,
 நிச்சயம் அதிர்ஷ்டம் நிறைந்த பெண்ணாகவும், தனது கணவனுக்கு, சொத்து சுகம், வண்டி வாகனம், செல்வம் போன்ற வளங்களை கொண்டு வருபவளாகவும் இருப்பாள் .  

கடகம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக   கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு மனோ ரீதியாக ஆலோசனைகளை வழங்கி தன்னம்பிக்கையுடன் தனது கணவன் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட வாழ்க்கையினை பெற துணையிருப்பாள்.

சிம்மம் ஏழாம் வீடாக அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது சுய உழைப்பால் ஆதரவாக நின்று , தனது கணவன் வாழக்கையில் முன்னேற்றம் பெறவும் சகல யோகங்களையும் பெறவும் நல்ல ஆலோசனை சொல்பவளாகவும், வாழ்க்கையில் எந்த நிலையிலும் தனது கணவனுடன் நின்று அவனது வாழ்வு முன்னேற்றம் பெற ஆதரவு தந்து அதிர்ஷ்டத்தையும் அள்ளி தருவாள் .

 துலாம் ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது அறிவாற்றலால் துணை நின்று ஒரு சிறந்த மந்திரியாக ஆலோசனை சொல்லி அவனது வாழ்க்கையில் நீடித்த அதிர்ஷ்ட வாழ்க்கையினை பெற ஆலோசனை சொல்பவளாகவும், எவ்வித சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவளாக, தனது கணவனுக்கு இறுதிவரை துணை இருப்பாள் .

 தனுசு ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
தனது கணவருக்கு தனது பூர்வீக அமைப்பில் இருந்து வரும்பொழுதே சகல யோகங்களையும், பொன் பொருள், பசு பாக்கியம் , நிலையான சொத்துகள் அனைத்தையும் கொண்டுவரும் தன்மை உடையவளாக இருப்பாள் .

 கும்பம் ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, குடும்பத்திற்கு வந்தவுடனேயே ஜாதகருக்கு யோகா வாழ்க்கை ஆரம்பம் ஆகிவிடும் , மேலும் தம்பதியர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும், மற்றாவர்கள் ஆதாரவு இவர்களுக்கு எப்பொழுதும் கிடைத்து கொண்டே இருக்கும், மக்கள் ஆதரவால் வெகு விரைவில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவாள் .

மீனம்  ஏழாம் வீடாக  அல்லது இரண்டாம் வீடாக கொண்டு 100  சதவிகிதம் நன்றாக இருக்கும் ஜாதகருக்கு, அமையும் மனைவி, 
ஒரு அதிர்ஷ்ட தேவதை இவளது கால் பட்ட இடமெல்லாம் சகல யோகங்களும் பெருகும், தனது கணவனுக்கு மட்டும் அல்ல அவனை சார்ந்தவர்களுக்கும், இந்த அதிர்ஷ்டம் பலன் தரும் என்பது ஒரு சிறப்பான விஷயம்.

ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696   

2 comments:

  1. //ஒரு ஜாதகருக்கு ஏழாம் வீடோ அல்லது இரண்டாம் வீடோ, ரிஷபம் , கடகம் , சிம்மம், துலாம் , தனுசு, கும்பம், மீனமாக அமைந்து, அந்த வீடுகள் முறையே 100 சதவிகிதம் சுய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்.

    நிச்சயம் அந்த ஜாதகருக்கு அமையும் மனைவி, நிச்சயம் அதிர்ஷ்டம் நிறைந்த ஜாதகியாகவும், அழகான அமைப்பை கொண்டவளாகவும் இருப்பாள் என்பது முற்றிலும் உண்மை.//


    மோட்டார் அமையுதோ இல்லையோ நல்ல மனைவி அமைந்தால் சந்தோசம்.. கௌண்டமணி சொன்னது போல் அவனவன் செய்த விதி என்பது இது தானோ ???

    ReplyDelete
  2. what about viruchchkam & methunam?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.