Tuesday, March 6, 2012

11 ம் வீடும் அதிர்ஷ்ட வாழ்க்கையும் !



நீடித்த அதிர்ஷ்டம் அமைந்த ஜாதகங்கள் பற்றிய ஒரு சிந்தனை :


நீடித்த அதிர்ஷ்ட வாழ்வு ஒவ்வொரு மனிதரும் ஏக்கம் கொள்ள செய்யும் ஒரு வார்த்தை, இந்த அதிர்ஷ்ட வாழ்வினை எந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் அனுபவிக்க இயலும்.


 மிதுனம் , கன்னி , தனுசு , மீனம் ஆகிய லக்கன அமைப்பை கொண்டவர்களுக்கு நீடித்த அதிர்ஷ்டம் வழங்கும் 11  ம் வீடு சர ராசியில் அமையும் . 

 இவ்வாறு அமைந்த ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் சுய  ஜாதகங்களில் 
( இந்த 11  ம் வீடு 11  ம் வீட்டுடனோ, இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் ) , நிச்சயம் நீடித்த அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் என்பதில் சிறிதேனு சந்தேகமே இல்லை , ஆனால் இந்த வீடுகளின் பலன்களை தற்பொழுது நடக்கும் திசை நடத்தினால் மட்டுமே முழு பலனை அனுபவிக்க இயலும் .


மேலும் ஜாதகர் எந்த வழியில் அதிர்ஷ்டங்களை அடைவார் என்று நிர்ணயம் செய்வதுதான் ஜோதிடனின் திறமை உள்ளது .


பொதுவாகவே  இலக்கணம் 11  ம் வீட்டுடனோ தொடர்பு பெறுமாயின் , ஜாதகர் ஓரளவு அதிர்ஷ்ட வாழ்வினை பெற இயலும் அது எந்த லக்கினம்
ஆனாலும் சரி.


அதிர்ஷ்ட அமைப்பை பற்றி கணிதம் செய்த பொழுது கிடைத்த 
தகவல்கள் :


1 ) மிதுன லக்கினத்திற்கு மேஷம் 11  ம் வீடாக வந்து சர நெருப்பு தத்துவமாக செயல் படும் பொழுது எந்தவகையில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் ஜாதகர் செய்யும் தொழில் பொறியியல் சம்பந்தம் பெற்று அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார் ,

2 ) கன்னி லக்கினத்திற்கு கடகம் 11  ம் வீடாக வந்து சர நீர்த்ததுவமாக செயல்படும் பொழுது ஜாதகர்  தனது மன ஆற்றலை கொண்டு ( யோக நிலை மனோவசியம், மக்கள் வசியம்)  அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

3 ) தனுசு  லக்கினத்திற்கு துலாம் 11  ம் வீடாக வந்து சர காற்று தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் தனது அறிவை மூலதனமாக கொண்டு ( கமிஷன், போதனை , பேச்சு ) அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.

 4  ) மீன லக்கினத்திற்கு மகரம் 11  ம் வீடாக வந்து சர மண் தத்துவமாக செயல் படும் பொழுது, ஜாதகர் மண் மனை வண்டி, வாகனம் ,சொத்து வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார்.


இதுவெல்லாம் சிறு விளக்கம்  நீங்கள் புரிந்து கொள்வதற்காக மட்டும் . இதில் மேலும் பல விசயங்கள் உண்டு .



ஜோதிடன் வர்ஷன் 
9842421435 
9443355696 
  

1 comment:

  1. நான் சில சமயம் யோசிப்பது உண்டு நாக்கு தொங்க நாம நாயா வேல செஞ்சாலும் செய்வது சொதப்புகிறது. சிலர் புல்லை புடிங்கி புதனுக்கு போட்டு உக்காந்த இடத்துலேயே அள்ளு அள்ளுன்னு அள்ளரங்கா(நான் சத்தியமா activation deactivationa பத்தி சொல்லலே )

    அதனால அதிர்ஷ்டம் என்பது ஜாதகம் சார்ந்தது என்பது எனது அனுபவ உண்மை..அனாலும் உழைப்பு தேவைதான்...
    //
    1 ) மிதுன லக்கினத்திற்கு மேஷம் 11 ம் வீடாக வந்து சர நெருப்பு தத்துவமாக செயல் படும் பொழுது எந்தவகையில் அதிர்ஷ்ட வாழ்வினை பெறுவார் ஜாதகர் செய்யும் தொழில் பொறியியல் சம்பந்தம் பெற்று அதன் வழியில் நீடித்த அதிர்ஷ்டம் பெறுவார் ,//

    நல்லது என்னுடையதும் மிதுனம் தான் ... அதிர்ஷ்ட அமைப்பை எதிர்பார்கிறேன் ????


    //மேலும் ஜாதகர் எந்த வழியில் அதிர்ஷ்டங்களை அடைவார் என்று நிர்ணயம் செய்வதுதான் ஜோதிடனின் திறமை உள்ளது .//

    உண்மை .. ஒருவனின் ஜாதகத்தை வைத்து அவருக்கு சரியான தொழில் மற்றும் வாழ்கை க்கு வழிகாடியாக இருக்க வேண்டும்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.