ஞாயிறு, 22 ஜூன், 2014

திருமண வாழ்க்கை தாமதமாக காரணம் ஏன்? சிறப்பாக விரைவில் திருமணம் நடைபெற பரிகாரம் என்ன ?




சுய ஜாதக ரீதியாக ஒருவருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் வீடும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும் பொழுது மட்டுமே திருமணம் தாமதமாகின்றது அல்லது திருமணம் நடைபெறாமலே ஜாதகர் சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை தருகின்றது, அதாவது சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் 6,8,12ம் பாவக்த்துடனோ அல்லது பாதக ஸ்தானத்துடனோ தொடர்பு பெரும் பொழுது ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குரியதாக மாறிவிட வாய்ப்பு அதிகம், மேலும் திருமணத்திற்காக ஜாதகர் எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வி மேல் தோல்வியை தந்து ஜாதகரை கலங்கடிக்கும்.

உதாரணமாக :



 மேற்கண்ட மகர இலக்கின ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் என்று அழைக்க பெரும் 2ம் வீடும், களத்திர ஸ்தானம் என்று அழைக்க பெரும் 7ம் வீடும் முறையே, விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தமும், பாதக ஸ்தானமான 11ம் பாகத்துடன் சம்பந்தமும் பெறுவது ஜாதக ரீதியான அதிக இன்னல்களை வாரி வழங்கும், 2ம் வீடு ஜாதகருக்கு விரைய ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று குடும்ப வாழ்கையை அமைத்து தர தடை செய்கிறது, 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று திருமண வாழ்க்கை அமைவதை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

 மேலும் ஜாதகருக்கு தற்பொழுது 35 வயது ஆகிறது இதுவரை ஜாதகருக்கு பார்த்த வது அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தட்டி சென்று கொண்டே இருக்கிறது, ஜாதகரும் செய்யாத பாரிகாரம் கிடையாது, செல்லாத கோவில் கிடையாது எனலாம், ஜோதிடர்கள் சொல்லும் அனைத்து பரிகாரங்களையும் ஜாதகர் செய்தும் கூட ஜாதகருக்கு திருமண வாழ்க்கை கைகூடி வரவில்லை   இதற்க்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !

 சுய ஜாதகத்தில் குடும்பம் எனும் 2ம் வீடு பதிக்கபட்டும், களத்திரம் எனும் 7ம் பாவகம் பாதிக்கபட்டும் இருந்த போதிலும், ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி மேற்கண்ட பாவகத்தின் பலனை தராமல் இருந்திருந்தால் ஜாதகருக்கு ஏதாவது ஒரு வகையில் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உண்டு ஆனால் தற்பொழுது நடைபெறும் குரு திசை ( 10/04/2001 முதல் 10/04/2017 வரை ) 1,7 ம் வீடுகள் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், குரு திசையில் தற்பொழுது நடைபெறும் செவ்வாய் புத்தி (10/12/2013 முதல் 16/11/2014 வரை ) 2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவதும் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு வரும் தடைகளுக்கு மிக முக்கிய காரணமாக கருதலாம், சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் பாதிக்க பட்டு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்த பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றுகிறது.

 ஜாதகர் செய்த பரிகாரங்கள் பலன் தராமல் போவதற்கு காரணம் என்ன ? சுய ஜாதகத்தில்  11ம் பாவகத்திற்க்கு அதிபதியாக வரும் கேது பகவானும், 12ம் பாவகத்திற்க்கு அதிபதியாக வரும் சந்திர பகவனும் சேர்ந்தே ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக தீமைகளை செய்கின்றனர், மேலும் சுய ஜாதகத்தில் கேது சந்திரன் மட்டுமே மிகவும் கடுமையாக பாதிக்க பட்டு உள்ளனர், எனவே  ஜாதகர் செய்த பரிகாரங்கள் யாவும் மேற்கண்ட கிரகங்களுக்கு உண்டானதாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை, எனவேதான் ஜாதகருக்கு பரிகாரங்கள் சரியான பலனை தரவில்லை.

பரிகாரம் :

 கேது பாதிக்க படும்பொழுது ஜாதகர் தனது சுய ஜாதகத்திற்கு, கால புருஷ தத்துவ அமைப்பில் எந்த பாவகதிர்க்கு தொடர்பு பெறுகிறார் என்பதை நன்கு கவனித்து அதற்க்கு உண்டான பிரிதி பரிகாரங்களை தனது லக்கினத்திற்கு 1,4,7,10 ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் நாழிகைகளில் நிவர்த்தி செய்துகொள்வது உடனடி விரைவான பலனை தரும்.

 சந்திரன் பாதிக்க படும் பொழுது கால புருஷ தத்துவ அமைப்பில் எந்த பாவகதிர்க்கு தொடர்பு பெறுகிறார் என்பதை நன்கு கவனித்து அதற்க்கு உண்டான பிரிதி பரிகாரங்களை தனது லக்கினத்திற்கு 1,5,9ம் வீடுகள் வலிமை பெற்று இருக்கும் நாழிகைகளில் நிவர்த்தி செய்துகொள்வது உடனடி விரைவான பலனை தரும்.

 எனவே ஜாதகர் செய்த பரிகாரங்கள் யாவும் சரியான பலனை தர இயலாமல் போனதற்கு ஜாதக அமைப்பில் பாதிக்க பட்ட பாவகங்கள் எவை எவை என்பதனை தெளிவாக உணராமல், பதிக்க பட்ட கிரகங்களுக்கு செய்யாமல் நல்ல நிலையில் இருக்கும் கிரகங்களுக்கு செய்ததின் காரணமாகவே பலன் தரவில்லை என்பது மட்டும் உண்மை.

 தனது சுய ஜாதக ரீதியாக பாதிக்க பட்ட கிரகம் எதுவென்று உணர்ந்து சம்பந்த பட்ட  கிரகங்களுக்கு முறையான பிரிதி பரிகாரங்களை மேற்கொள்ளும் பொழுது ஜாதகர் எவ்வித கிரக பாவக பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தாலும் அதில் இருந்து வெகு விரைவாக மீண்டு வந்து, சம்பந்த பட்ட கிரக அமைப்பில் இருந்தும், பாவக அமைப்பில் இருந்தும் மிகுந்த நன்மையையும் யோகத்தையும் 100%  பெறுவார் என்பது மட்டும் உறுதி.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696


1 கருத்து: