புதன், 4 ஜூன், 2014

ரிஷப லக்கினம் - இலக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் நன்மைகள் !




கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷப ராசியை லக்கினமாக கொண்ட ஜாதகருக்கு, லக்கினம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் இலக்கின வழியில் இருந்து பெரும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!

 ரிஷபம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடாகவும் ஸ்திர மண் தத்துவ ராசியாக அமைவதால் ஜாதகர் மிகவும் பொறுமைசாலியாக திகழ்வார், மண் தத்துவம் ஜாதகரின் உடல் அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கு உதவும், ஜாதகரின் உடல் வலிமையையும் மிகவும் சிறப்பாக இருக்கும், உடல் உறுப்புகளின் இயக்கம் மிகவும் செம்மையாக அமையும், எனவே ஜாதகரின் மன நிலையும் உடல் வலிமையையும் ஜாதகருக்கு ஆயுள் முழுவதும் சிறப்பாக அமைந்து விடும்.

 பொதுவாக ரிஷப லக்கினத்தை சார்ந்தவர்கள், எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளும் தன்மை பெற்றவர்கள், இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டே சகல அமைப்புகளிலும் வெற்றி காணும்  குணம் கொண்டவர்கள், சிந்தனை செய்யாமல் எந்த ஒரு காரியத்திலும் இறங்கமாட்டார்கள், இவர்களின் பொறுமையும் சிந்தனை ஆற்றலும் படிப்படியான வெற்றிகளை தொடர்ந்து வழங்கி கொண்டே  இருக்கும், பேச்சு திறைமை மிக்கவர்களாக இருப்பார்கள், தனது பேச்சாற்றல் மூலம் மக்களை கட்டிபோடும் வல்லமை பெற்றவர்கள்,

 இவர்களின் வளரும் சூழ்நிலை என்பது மிகவும் வசதிமிக்க இடத்தில் அமையும், சகல செல்வங்களும் பிறவியில் இருந்தே நுகரும் யோகம் பெற்றவர்கள், கலைகளில் அதிக ஈடுபடும், தேர்ச்சியும் அடையும் யோகம் உண்டாகும், தான் எடுத்துக்கொண்ட துறையில் தன்னிகரற்று விளங்கும் யோகத்தை தரும், இசையில் மிகுந்த ஆர்வமும் தன்னிகரற்ற தனி திறமையும் கொண்டவர்கள், பல்வேறு இசை வாத்தியங்களை சிறப்பாக கையாளும் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.

 ரிஷப லக்கினத்திற்கு மேற்கண்ட சிறப்புகள் இருந்த போதிலும், சற்று பயந்த  சுபாவம் கொண்டவர்களாகவே இருப்பார்கள், பிரச்சனைகள் உள்ள இடங்களில் இவர்கள்  இருக்க விரும்புவதில்லை, மேலும் தனிமையில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவே கருதலாம், இரவில் தனியாக செல்வதற்கு இவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை, லக்கினத்துடன் செவ்வாய் அல்லது ராகு சம்பந்தம் பெரும் பொழுது மேர்கண்டதிர்க்கு எதிர்மறையான பலன்களே நடைபெறும், ஜாதகர் எவ்வித பயமும் இல்லாமல் மிகுந்த தைரியாசாலியாகவும் வீரம் மிகுந்தவராகவும் காணப்படுவார்.

 கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் ராசியாக ரிஷபம் அமைவதால், இந்த லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு வாக்கு பலிதம் இயற்கையாக அமைந்துவிடும், தன சேர்க்கை ஜாதகருக்கு தாரளமாக குறைவின்றி வரும், அல்ல அல்ல குறையாத செல்வ சேர்க்கை உண்டாகும், ஜாதகர் சொல்லும் நல்வாக்கு எப்பொழுதும் பலிதம் பெரும், இறைஅருளும் ஜாதகருக்கு இயற்கையாகவே கிடைக்கும், ஆன்மீக பெரியோரின் ஆசிர்வாதம் ஜாதகருக்கு இளம் வயதிலே கிடைக்க பெரும் யோகம் பெற்றவர்கள், இவர்களின் வளர்ச்சி என்பது எவ்வித சிரமங்கள் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

மற்றவர்களை நம்பி ஏமாறுவதற்கு உண்டான வாய்ப்புகள் ஜாதகருக்கு அடிகடி வர கூடும், கள்ளம் கபடம் அற்ற இவரின் குணத்தை பலர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டபோதிலும், மன்னிக்கும் மனப்பான்மையை இயற்கையாக பெற்று இருப்பார்கள், எவ்வித சூழ்நிலையிலும் நேர்மை மாறாத குணத்தையும், தன்னம்பிக்கையையும் கைவிடாத மன நிலையும் ஜாதகர் பெற்று இருப்பார்.

கலை துறையில் சிறந்து விளங்கும் யோகத்தை தரும், சிறந்த படைப்புகளை மக்களுக்கு எளிதில் "விளங்கும் வண்ணம்" மக்களிடம் கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் , தனது வித்தியாசமான அணுகு முறையால் பல புதுமைகளை கலைத்துறையில் பயன்படுத்தி  அதில் 100% வெற்றியை பெறுபவர்களும் இவர்களே என்றால் அது மிகையல்ல, இனிமையான குரல் வளம் கொண்டவர்கள் என்பதால் இசை துறையில் நல்ல எதிர்காலம் உண்டு முறையான பயிற்ச்சி ஜாதகருக்கு உலக புகழ் சேர்க்கும்.

ரிஷப ராசியை லக்கினமாக கொண்டு லக்கினம் வலிமை பெரும் அமைப்பை பற்றி  இனி பார்ப்போம் ரிஷப ராசியை லக்கினமாக பெற்றவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் வீடு 1,2,3,4,5,7,9,10 பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து யோக பலன்களை அனுபவிக்கும் தன்மை உண்டாகும், 6,8,12ம் பாவகங்களுடன் தொடர்பு பெரும் பொழுது ஜாதகர், சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து தீய பலன்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும். பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது ஜாதகர் சம்பந்தபட்ட பாவக  வழியில் இருந்து 200 மடங்கு தீய பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளபடுவார்.

ஆக ரிஷப லக்கினமாக உள்ள ஜாதகருக்கு லக்கினம் 6,8,12 பாவகத்துடனும், பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடனும் சம்பந்தம் பெறுவது மட்டுமே அதிக தீமைகளை செய்யும் இலக்கின வழியில் இருந்து, மற்ற பாவகங்களான 1,2,3,4,5,7,9,10 ம் பாவகங்களுடன் தொடர்பு பெறுவது மிகுந்த நன்மையே தரும் இலக்கின வழியில் இருந்து ஜாதகர் யோக வாழ்க்கையை அனுபவிக்கும் தன்மையை தரும்.

குறிப்பு : 

 லக்கினம் எந்த பாவகத்துடன் தொடர்பு பெறுகிறது என்பதை ஜாதகரின் சுய ஜாதகத்தை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக