ஒருவரின் சுய ஜாதகத்தை கொண்டு 12 பாவகங்களின் அடிப்படையில் திருமண பொருத்தம் காணும் முறையினை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே!
வரனின் ஜாதகம் :
லக்கினம் : மகரம்
ராசி : துலாம்
நட்சத்திரம் : சித்திரை 3ம் பாதம்
வதுவின் ஜாதகம் :
லக்கினம் : விருச்சிகம்
ராசி : மிதுனம்
நட்சத்திரம் : திருவாதிரை 3ம் பாதம்
மேற்க்கண்ட ஜாதகங்களில் நட்சத்திர பொருத்தம் காணும் பொழுது 10 பொருத்தத்திற்கு 7 பொருத்தங்கள் உண்டு, இருப்பினும் பாவக வலிமை அடிப்படையில் ஜாதகத்திற்கு பொருத்தம் காணும் பொழுது, இரண்டு ஜாதகத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லை என்பதே உண்மை, பாரம்பரிய ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் என்று பொருத்தம் இல்லை என்று திருமணத்தை நிராகரித்தாலும், உண்மையான காரணம் அதுவல்ல.
ஒருவரின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் எனில் அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயம் வரன் வது இருவரின் ஜாதகத்திலும் குடும்பம் ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திரம் ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே, மேற்கண்ட ஜாதகங்களில் அடிப்படையில் சிறப்பாக இருக்க வேண்டிய இந்த இரண்டு பாவகமும் வரனின் ஜாதகத்தில் 2,7ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது, வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவகம் கடுமையாக பாதிக்க பட்டு இருக்கின்றது.
வரனின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம், களத்திர ஸ்தானமான 7ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம், எனவேதான் ஜாதகருக்கு 35 வயது கடந்தும் இன்னும் திருமணம் அமையவில்லை, மேலும் தற்பொழுது நடைபெறும் குரு திசை, செவ்வாய் புத்தி ( 10/12/2013 முதல் 16/11/2014 வரை ) அதிர்ஷ்ட ஸ்தானம் என்று அழைக்க படும் 11ம் வீடு பதாக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும், குடும்பம் மற்றும் அயன சயன சுகம் தரும் 2,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை வழங்கி கொண்டு இருப்பதால், ஜாதகரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி கொண்டு இருக்கின்றது.
சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கபட்டு இருந்தாலும் தற்பொழுது நடைபெறும் திசை,புத்தி பாதிப்படைந்த 2,7ம் பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருந்து, நல்ல நிலையில் இருக்கும் பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் திருமண தடை ஏற்ப்பட வாய்ப்பு இல்லை, ஜாதகருக்கு சிரமத்தின் பெயரிலாவது திருமண வாழ்க்கை அமையும், சரியான பருவ வயதில் பாதிப்படைந்த 2,7ம் பாவகத்தின் பலனை நடத்தும் எனில், ஜாதகரின் வாழ்க்கையில் திருமணம் என்பது கனவில் மட்டுமே சாத்தியம்.
வதுவின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் ஓரளவிற்கு வலிமை பெற்று அமைந்த போதிலும், களத்திர ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் திருமண வாழ்க்கைக்கு தடையாக வந்து நிற்கிறது, ஜாதகிக்கு குடும்பம் அமையும் என்ற போதிலும், ஜாதகிக்கு வரும் கணவன் நல்லவராகவும், உயரிய குணம் கொண்டவராகவும் இருப்பார் என்று சொல்வதிற்கு இல்லை என்பதே உண்மை.
மேலும் ஜாதகிக்கு தற்பொழுது நடைபெறும் சனி திசை ( 17/03/2008 முதல் 17/03/2027 வரை ) 2,5,8,11ம் விடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையை செய்த போதிலும், தற்பொழுது நடைபெறம் கேது புத்தி ஜாதகிக்கு சாதகமாக இல்லை கேது புத்தி ( 28/11/2013 முதல் 06/01/2016 வரை ) 1,3,7,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று பலனை தருவது 1ம் பாவக வழியில் இருந்து ஜாதகி நல்ல சூழ்நிலையில் இல்லாததும் , 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகள் தோல்வியை தழுவும் சூழ்நிலையையும், 7ம் பாவக வழியில் இருந்து திருமண தடையையும், 9ம் பாவக வழியில் இருந்து இறை அருளின் கருணை அற்ற அமைப்பையும் தருகின்றது, ஆக தற்பொழுது நடை பெரும் கேது திசை ஜாதகிக்கு திருமண வாழ்க்கையை அமைத்து தர வாய்ப்பு இல்லை என்பதும், திருமணம் செய்ய எடுக்கும் முயற்சிகள் யாவும் தோல்வியை தரும் என்பதும் உறுதியாகிறது.
அடுத்து வரும் பதிவில் மேலும் சில ஜாதகங்களை ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே !
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக