பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரங்கங்களின் வலிமையை பாரம்பரிய ஜோதிட முறையில் அமர்ந்த இடத்தை வைத்தும், அமர்ந்த இடத்தில் பெற்ற நிலையை ( ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீசம் ) வைத்துமே நிர்ணயம் செய்கின்றனர், மேலும் லக்கினம் எதுவென்றாலும் நவகிரங்கள் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு என்ற நிலையில் இருப்பின் நன்மையை செய்யும் என்றும், பகை, நீசம் என்ற நிலையில் இருப்பின் தீமையை செய்யும் என்றும், லக்கினத்தில் இருந்து 6,8,12ம் பாவகங்களில் இருந்தால், தீமையான பலன்களையே செய்யும் என்ற கோணத்திலேயே ஜோதிடர்களின் கருத்து அமைந்திருக்கிறது, இதன் உண்மை நிலையை பற்றிய சிந்தனையை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பர்களே!
ஒருவருடைய சுய ஜாதகதம் கணிதம் செய்யும் பொழுது உயிர் உடலாகி லக்கினம் என்ற முதல் பாவகத்தை அடிப்படையாக கொண்டே மற்ற பாவகங்கள் இயங்குகிறது, லக்கினம் என்பது ஒரு ஜாதகத்திற்கு மிக முக்கியமான ஒரு அங்கமாக கருத வேண்டும் ஏனெனில் இதன் அடிப்படையிலேயே மற்ற பாவகன்களின் தன்மையை உணர இயலும், மேலும் எந்த எந்த பாவகங்களில் நவ கிரகங்கள் அமர்ந்து ஜாதகருக்கு யோக அவயோக பலன்களை நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்களில் வழங்குகிறார்கள் என்று தெரிந்து கொள்ள இயலும், மேலும் திசை புத்திகள் வழங்கும் பலன்கள் கோட்சார ரீதியான தொடர்பில் எவ்வித நன்மை தீமை செய்கிறது என்பதை இணைத்து துல்லியமான ஜாதக பலன்களை தெளிவாக ஒரு ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்துவிட முடியும்.
பொதுவாக கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ( மேஷம் முதல் மீனம் வரை ) 12 ராசிகளில் நவகிரகங்கள் ஆட்சி,உச்சம்,சமம்,நட்பு,பகை,நீசம் என்ற நிலையை பெறுகின்றனர், இந்த காலபுருஷ தத்துவ அமைப்பில் கிரகங்கள் பெரும் வலிமையை அடிப்படையாக கொண்டு சுய ஜாதகத்திற்கு பலன் நிர்ணயம் செய்வது உண்மைக்கு மாறான பலன்களை நிர்ணயம் செய்யவே வழிவகுக்கும், மேலும் சுய ஜாதகத்தை இது எவ்விதத்திலும் கட்டுபடுத்த இயலாது என்பதே உண்மை, சுய ஜாதக பலன்களை நிர்ணயம் செய்யும் பொழுது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு ( லக்கினம் ஆரம்பிக்கும் பாகை மற்றும் மற்ற பாவகங்கள் ஆரம்பிக்கும் பாகை ) பலன் நிர்ணயம் செய்யும் பொழுதே ஜாதகத்திற்கு நவகிரகங்கள் வழங்கும் யோக அவயோக பலன்களை தெளிவாக உணர இயலும்.
உதாரணமாக :
மேற்கண்ட கன்னி இலக்கின ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களின் தன்மை மற்றும் நவ கிரகங்கள் 12 பாவகங்களுக்கு வழங்கும் வலிமை ஆகியவற்றை கணிதம் செய்வோம் அன்பர்களே!
1) லக்கினம் :
ஜாதகருக்கு கன்னி லக்கினம் லக்கினதிபதியான புதன் லக்கினத்தில் இருந்து மிதுனத்தில் உள்ள 9ம் பாவகத்தில் அமர்ந்து ஜாதகருக்கு கோண பலம் பெற்று அவயோக பலன்களை லக்கினத்திற்கு வழங்குகிறார். ( லக்கினம் என்பது ஜாதகருக்கு கன்னியில் 172.30.12 பாகையில் ஆரபித்து துலாம் ராசியில் 202.04.34 பாகையில் முடிவடைகிறது. 9ம் பாவகம் ஜாதகருக்கு ரிஷபத்தில் 51.38.55 பாகையில் ஆரம்பித்து மிதுனத்தில் 81.13.16 பாகையில் முடிவடைகிறது லக்கினதிபதியான புதன் மிதுனத்தில் 9ம் பாவகத்திர்க்கு உற்பட்ட 68.11.52 பகையிலே இருப்பதால் புதனின் அமர்வு நிலை 9ம் பாவகம் என்பதே சரியானது, ராசியை அடிப்படையாக வைத்து புதன் 10ல் இருப்பதாக நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறானது.)
2) இரண்டாம் வீடு :
இரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் இரண்டாம் பாவகதிர்க்கு 6ல் இருந்து மறைவு பலம் பெற்று ஜாதகருக்கு இரண்டாம் பாவக அமைப்பிற்கு 100 சதவிகித நன்மையை செய்கிறார், எனவே ஜாதகர் இனிமையான பேச்சும், கை நிறைவான வருமானமும் பெறுபவராக காணப்படுவார்.
3) மூன்றாம் வீடு :
மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் தனது வீட்டிற்கு 10ல் அமர்ந்து 100சதவிகித நன்மையை 3ம் பாவகதிர்க்கு வாரி வழங்குகிறார் எனவே ஜாதகர் நல்ல வீரியம் மிக்க தைரியசாலியாகவும், துணிச்சல் மிக்கவராகவும், சகோதர வழியில் இருந்து நன்மையை பெறுபவராகவும் இருப்பார்.
4) நான்காம் வீடு :
நான்காம் வீட்டிற்கு அதிபதியான குரு தனது வீட்டிற்கு 7ல் அமர்ந்து கேந்திர பலம் பெற்று தனது வீட்டை நேரெதிர் பார்வை செய்வதால் 4ம் பாவகம் 100 சதவிகித பாதிப்புக்கு உள்ளாகி, சொத்து சுக இழப்பு, வாகன யோகம் அற்ற நிலை, வசதி வாய்ப்புகள் இருந்து அவற்றை அனுபவிக்க இயலாத தன்மையை தரும்.
5) ஐந்தாம் வீடு :
ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனி தனது வீட்டிற்கு 10ல் அமர்ந்து கேந்திர பலம் பெற்று 100 சதவிகத தீமையை செய்வதால் ஜாதகர், தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்ய இயலாத தன்மையையும், அறிவாற்றல் வழியில் சிறப்பாக செயல்பட இயலாத சூழ்நிலையையும் தரும்.
6) ஆறாம் வீடு :
ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சனி தனது வீட்டிற்கு 9ல் அமர்ந்து கோண பலம் பெற்று 100 சதவிகத தீமையை செய்வதால், ஜாதகர் ஆறாம் பாவக வழியில் இருந்து உடல் நல குறைவு, கடன் பெறுவது கொடுப்பதால் அதிக இன்னல்கள் என்ற அமைப்பில் இருந்தும் எதிரிகள் அமைப்பில் இருந்து துன்பத்தையும் அனுபவிக்கும் நிலையை தரும்.
7) ஏழாம் வீடு :
ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு தனது வீட்டிற்கு 4ல் அமர்ந்து கேந்திர பலம் பெற்று 100 சதவிகித தீமையை செய்வதால் ஜாதகர் களத்திரம், நண்பர்கள், கூட்டாளிகள், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து அவயோகத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கும் நிலையை தரும், கூட்டு முயற்ச்சி மற்றும் திருமண வாழ்க்கை அமைப்பில் தாமதத்தையும் பிரச்சனைகளையும் தரும்.
8) எட்டம் வீடு :
எட்டம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் தனது வீட்டிற்கு 5ல் அமர்ந்து கோண பலம் பெற்று 100 சதவிகிதம் தீமையை செய்வதால் ஜாதகருக்கு திடீர் இழப்பு,விபத்து,முதலீட்டில் வரும் இழப்பு, எதிர்பாராத உடல் நல குறைவு என்ற வகையில் சிரமங்களை தர கூடும், ஜாதகர் தனது உடல் நிலையை தானே கெடுத்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார், விரக்தியான மன நிலையை கொண்டிருப்பார்.
9) ஒன்பதாம் வீடு :
ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் தனது வீடிற்கு 11ல் அமர்ந்து சிறப்பான நிலையில் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை தரும், ஆன்மீக வெற்றி உண்டாகும், இறை நிலையின் கருணை ஜாதகருக்கு பரிபூரணமாக கிடைக்கும், கோவில் வழிபடு அல்லது குல தெய்வ வழிபாட்டில் ஜாதகருக்கு ஈடுபாட்டினையும், இதன்மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாக்கும், முன்னோர்கள் ஆசி ஜாதகருக்கு பரிபூர்ணமாக நிறைந்து நிற்கும்.
10) பத்தாம் வீடு :
பத்தாம் வீட்டிற்கு அதிபதியான புதன் தனது வீட்டிற்கு 12ல் மறைவது ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து அதிக இன்னல்களை தரும், நிலையான தொழில் அற்ற சூழ்நிலையும், சுய தொழில் செய்ய இலாத தன்மையையும், அடிமை சேவகம் செய்யும் நிலைக்கும் ஆர்ப்படுத்தும், எதிர்பாராத கௌரவ குறைவு ஏற்ப்பட அதிக வாய்ப்புண்டு, தன்னம்பிக்கு கடுமையாக பாதிக்கும்.
11) பதினொன்றாம் வீடு :
பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் தனது வீட்டிற்கு 12ல் மறைவது ஜாதகருக்கு வாழ்க்கையில் அதிக போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை தரும், தன்னம்பிக்கை இழக்கும் விதமாக ஜாதகருக்கு பல நிகழ்வுகள் வரக்கூடும், மூத்த சகோதர அமைப்பில் இருந்து அதிக இன்னல்களை சந்திக்க வேண்டி வரும், பிற்போக்கான சிந்தனைகளில் ஜாதகர் மூழ்கி கிடக்கும் சூழ்நிலையை தரும், எவர் எதை சொன்னாலும் அதை அப்படியே நம்பி வாழ்க்கையில் பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மையை தரும்.
12) பனிரெண்டாம் வீடு :
பனிரெண்டாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன் தனது வீட்டிற்கு 9ல் அமர்ந்து கோண பலம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, ஜாதகருக்கு நல்ல நிம்மதியான வாழ்க்கையை தர வாய்ப்பில்லை, மற்றவரை நம்பி முதலீடு செய்வதால் ஜாதகர் கடுமையாக பாதிக்க படுவார், மற்றவர் விஷயங்களில் ஜாதகர் தலையீடு செய்தால் சகல நிலைகளில் இருந்தும் துன்பத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.
மேற்கண்ட பலன்கள் யாவும் ஒவ்வொரு பாவக அமைப்பிற்கும் அதன் அதிபதிகள் வழங்கும் பலன்களே! மேலும் பாவகங்களில் விழும் நவகிரகங்களின் பார்வைக்கு பலன் தனிபட்ட முறையில் கணிதம் செய்வது அவசியம், பிறகு ராகு கேது கிரகத்தின் வலிமை அமர்ந்த பாவகத்தின் அடிப்படையில் கவனிப்பதும் அவசியம், தற்பொழுது நடைபெறும் திசை ஜாதகருக் எந்த பாவகத்தின் தன்மையை ஏற்று நடத்துகிறது, கோட்சார கிரகங்கள் தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவகத்திர்க்கு எவ்வித பலன்களை வழங்குகிறது என்ற விஷயங்களையும் கணிதம் செய்து ஜாதக பலன் காணுவது ஜாதக பலன்களை துல்லியமாக கூற வாய்ப்பளிக்கும்.
மேற்கண்ட ஜாதகத்தில் ராகு கேது என்ற சாய கிரகங்கள் ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக அமைப்பிற்கு ( அதாவது லக்கினம் மற்றும் களத்திரம் ) 100 சதவிகித நன்மையை வாரி வழங்குவது சிறப்பான ஒரு விஷயம், ஆக ஜாதகர் லக்கினம் மற்றும் களத்திர ஸ்தான அதிபதிகள் எவ்வித தீய பலன்களை செய்தாலும் 1,7ம் பாவகத்திர்க்கு எவ்வித பாதிப்பையும் தர வாய்ப்பில்லை என்பதே உண்மை.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக