ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் மேன்மை - பாகம் 1


 ஜீவன ஸ்தானம் ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் ஒரு பாவகம், மேலும் ஒரு ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வைத்து அந்த ஜாதகரின் கௌரவம்,அந்தஸ்து சுய மரியாதை ஆகிய விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும், ஜீவன பாவகத்தின் அடிப்படையிலேயே ஒவ்வொருவருக்கும் சரியான தொழில் அமைகிறது என்றால் அது மிகையில்லை, 12 ராசிகளும் , சர,ஸ்திர,உபய அமைப்புகளும், நெருப்பு,நிலம்,காற்று,நீர் தத்துவங்களும் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு எந்த விதமான ஜீவன வாழ்க்கையை, எந்த வயதில் அமைத்து தருகிறது என்பதை ஜாதக ரீதியாக தெளிவாக தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் தனது தொழில்,வேலை  மற்றும் பணியை சிறப்பாக செய்து வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் காணலாம்.

ஒருவரின் ஜீவன அமைப்பை ( செய்யும் தொழில் அல்லது வேலை ) சுய  ஜாதகரீதியாக தெரிந்து கொள்வது, அந்த ஜாதகர் தனது ஜீவன வாழ்க்கையை சிறப்பாக  செய்ய பெரும் உதவியாக இருக்கும், அடிப்படையில்  ஒருவரது  ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் எந்த விதமான தொடர்புகளை  பெறுவது ஜாதகரின் தொழில் மற்றும் வேலை  வாய்ப்பினை கேள்வி குறியாக மற்றும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் அன்பர்களே !

ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் தொடர்பு பெற கூடாத நிலைகள் :

1) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், எக்காரணத்தை கொண்டும் பாதக ஸ்தானம் எனும் 7,9,11ம் பாவகங்களுடன் தொடர்பு பெற கூடாது , ஒரு வேலை ஜீவன ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது ஜாதகரை ஜீவன வழியில் இருந்து 200% இன்னல்களுக்கு வழிவகுத்துவிடும் மேலும் சுய கௌரவமும் அந்தஸ்தும் வெகுவாக பாதிக்க படும்  ( சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானம், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானம், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானம்)

2) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம்,எதிரி மற்றும் பகை ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகருக்கு ஜீவன வழியில் இருந்து பல எதிர்ப்புகளையும், எதிரிகளையும் உருவாக்கும், மேலும் செய்யும் தொழில் அமைப்பில், அதிக கடன் தொந்தரவுகளை உருவாக்கி தொழில் முடங்கும் சூழ்நிலையை தந்துவிடும், ஜாதகருக்கு 6ம் பாவகம் ஒரு வேலை சர ராசியாக இருப்பின், ஜாதகர் தனது தொழிலுக்கு மூடுவிழா, தொழில் செய்ய ஆரம்பித்த சில தினங்களிலேயே நடத்தி விடுவார், தேவையின்றி செய்யும் சில காரியங்களால், ஜாதகரின் தொழில் வாய்ப்புகள்  முடங்கி மிகப்பெரிய பின்னடைவை தந்துவிடும்.

3) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், திடீர்  இழப்பை தரும் ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, எதிர்பாராத சந்தர்பத்தில் திடீர் இழப்பை  தந்து, இதுவரை செய்துவந்த தனது தொழில்  அமைப்பிற்கு மூடுவிழா காணும் தன்மையை தரும், சுய ஜாதகத்தில் இந்த அமைப்பை பெறும் அன்பர்கள் தயவு செய்து மற்ற  பாவகங்களின் வலிமை உணர்ந்து தொழில் செய்வது நலம், இல்லை எனில் ஜாதகரின் ஜீவன வாழ்க்கை மிகப்பெரிய கேள்வி குறியாக மாறிவிடும், தொழில்  செய்யாமல் அடிமை ஜீவனம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கும் இந்த அமைப்பு அதிக துன்பத்தையே தரும், குறிப்பாக ஒரு இடத்தில் நிரந்தரமாக வேலை பார்க்க ஜாதகரால் இயலாது, எதிர்பாராத நேரத்தில் வேலையை விட்டு எக்காரணமும் தெரியாமல் நீக்கபடுவார்கள்.

ஜாதகர் தனது உழைப்பின் மூலம் சம்பாதித்த பணம் பொருள் அனைத்தையும் திடீர் என இழக்கும் சூழ்நிலையை தரும், குறிப்பாக மருத்துவ செலவினங்கள்,  விபத்து செலவினங்கள், மற்றவர்களை நம்பி கொடுக்கும் பணம்,  மற்றவர்களை நம்பி செய்யும் முதலீடுகள், ஆகியவற்றில் பெரிய திடீர்  இழப்பையே ஜாதகர் சந்திக்கும் சூழ்நிலையை தரும், மற்றவர்கள் விஷயங்களில் தலையீடு செய்வதாலும், மற்றவர்களுக்கு ஜாமீன் தருவதாலும் ஜாதகருக்கு மிகப்பெரிய இழப்பே ஏற்ப்படும், ஜாதகர் செய்யும் தொழிலும் கடுமையாக பாதிக்க படும்.

ஜாதகருக்கு 8ம் பாவகம் சர ராசியாக இருப்பின், மேற்கண்ட பாதிப்புகள்  மிக விரைவாக நடத்தும், ஜாதகரின் சிந்தனை எதுவும் பலன் தராது, ஜாதகருக்கு உதவி செய்யும் அன்பர்கள் யாரும் இல்லை என்ற சூழ்நிலையை தரும்.

4) ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம், விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் செய்யும் தொழில் முதலீட்டையே வெகுவாக பதம் பார்க்கும், குறிப்பாக ஜாதகர் தொழில் ரீதியாக செய்த முதலீட்டை திரும்ப பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கும், தொழிலில் முதலீடு செய்துவிட்டு ஒவ்வொரு நாளும்  உறக்கமின்றி நிம்மதியின்றி தவிக்கும் சூழ்நிலையை தந்துவிடும், மனதளவில் அதிக இன்னல்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும்,  பெரும்பாலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்கள் சமுதாயத்தில் பொருளாதார ரீதியான பின்னடைவை விரைவில் சந்திக்கிறார்கள், இவர்கள் தொழில் ரீதியாக மீண்டு வருவது என்பது இயலாத ஒரு காரியமே என்றால், அது மிகையில்லை அன்பர்களே !

இந்த அமைப்பை பெற்ற அன்பர்களுக்கு அடிமை ஜீவனம் சிறந்த  நன்மைகளை வாரி வழங்கும், சுய தொழில் செய்தால் மட்டுமே ஜாதகர் கடுமையாக பாதிக்க படுவார், ஒருவரிடமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ பணிபுரியும் பொழுது ஜாதகருக்கு  பெரிய இழப்புகள் எதுவும் நடை பெறுவதில்லை, மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் கூட்டு தொழில் செய்ய கூடாது ஏனெனில் ஜாதகர் தனது கூட்டாளியாலேயே ஏமாற்றப்பட கூடும், மேலும் செய்த முதலீடு, ஜாதகரின் கூட்டாளிக்கு மிகுந்த வளர்ச்சியை கொடுத்துவிடும்.

5) மேற்கண்ட விஷயங்களுடன் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகரம் மிகவும் சிறப்பாக இருப்பது அவசியம், சிலர் தொழில் ரீதியாக பெரிய வெற்றிகளை பெற இயலாத நிலைக்கு காரணம் இதுவே, மேலும் சுய ஜாதகத்தில் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் பாவகமான மகர ராசிக்கு அதிபதியான சனிபகவானும், சுய ஜாதகத்தில் 10ம் பாவகத்திர்க்கு அதிபதியான கிரகமும் எக்காரணத்தை கொண்டும் வக்கிரக நிலையை பெற கூடாது, மேற்கண்ட கிரகங்கள் வக்கிரக நிலை பெரும் பொழுது ஜாதகர் தொழில் ரீதியான வெற்றிகள் வாய்ப்புகள் வெறும் 10% நிலையிலேயே நின்றுவிடும், தொழில் ரீதியான சிரமங்கள் ஜாதகரை வெகுவாக பாதிக்கும், வக்கரகம் பெற்ற கிரகங்களுக்கு முறையாக வக்கரக நிவர்த்தி செய்யும் வரை ஜாதகர் ஜீவன வழியில் இருந்து நன்மையை பெற முடிவதில்லை.

இனி வரும் பதிவுகளில் ஜீவன ரீதியான பலன்கள் பற்றி விளக்கமாக காணலாம் அன்பர்களே!.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக