புதன், 13 ஆகஸ்ட், 2014

சுய ஜாதக ரீதியாக திருமணம் தாமதமாக காரணம் என்ன ?




பொதுவாக ஒருவரின் சுய ஜாதக அமைப்பில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகமும் கடுமையாக பாதிக்கப்படும் பொழுதே திருமணம் எனும் ஒரு சுப நிகழ்வு நடைபெறாமல் தாமதமாகும், அதிலும் சுய ஜாதகத்தில் ஆண் என்றாலும் சரி, பெண் என்றாலும் சரி எக்காரணத்தை கொண்டும் குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிக்க படாமல் இருப்பது திருமண வாழ்க்கையை சரியான வயதில் சீரும் சிறப்புமாக அமைத்து தரும்.

மேலும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷபமும், களத்திர ஸ்தானமான துலாமும் பாதிக்க படாமல் இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மையை வாரி வழங்கும், மேலும் சிறப்பான மணமகனையோ, மணமகளையோ அமைத்து தரும் என்பது நிச்சயம்.

ஒருவேளை குடும்பம் மற்றும் களத்திர பாவகங்கள் பாதிக்க பட்ட போதிலும் இந்த இரண்டு பாவகங்களின் பலனை திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு ஏதாவது ஒருவகையில் திருமணம் நடைபெற்று விடும், இதற்க்கு மாறாக திருமண வயதில் நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதிக்க பட்ட குடும்ப மற்றும் களத்திர பாவக பலனை ஏற்று நடத்தினால்,  ஜாதகரின் திருமண வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிட வாய்ப்பு அதிகம், மேலும் இந்த அமைப்பை பெற்ற ஜாதக அன்பர்கள் பெரிய எதிர்பார்ப்புகளை தவிர்த்து, திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முன்வருவது சால சிறந்தது.

அல்லது தனது சுய ஜாதகத்தில் பாதிக்க பட்ட பாவகங்களுக்கு அதிபதியாக வரும் கிரகங்களை ( இங்கு குறிப்பிடும் கிரகங்கள் சம்பந்தபட்ட பாவக ராசி அதிபதி அல்ல என்பதை கருத்தில் கொள்ளுங்கள் அன்பர்களே !) வழிபாடு செய்வதும், பாதிக்க பட்ட பாவகம் சார்ந்த  உறவுகளுக்கு நன்மை செய்வதும், அதன் வழியில் நடைபெறும் துன்பங்களில் இருந்தும், திருமண தடை அமைப்பில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும், குறிப்பாக திருமண தாமதத்தை தவிர்த்து விரைவில் திருமணம் நடைபெறும்.

உதாரணமாக :

கிழ்கண்ட ஜாதகத்தை சார்ந்தவருக்கு  வயது 30க்கு மேல் ஆகியும் திருமணம் நடைபெறவில்லை, என்ன காரணம் என்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : மிதுனம் 
ராசி : மீனம் 
நட்சத்திரம் : உத்திரட்டாதி 4ம் பாதம் 

திருமணம் தாமதமாக காரணம் என்ன? என்பதை முதலில் சிந்தனைக்கு எடுத்துகொள்வோம்.

1) குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் திடீர் இழப்பை தரக்கூடிய 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குடும்ப ஸ்தான அமைப்பை வெகுவாக பாதிக்கிறது.

2) களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் பாதக ஸ்தானம் எனும் 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று களத்திர ஸ்தானத்தை வலுவாக 200% பாதிக்கிறது.

3) கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷபமும் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று குடும்ப வாழ்க்கையை கேள்வி குறியாக மாற்றுகிறது.

4) கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் வீடான துலாம் மட்டும் அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகத்தை வாரி வழங்குகிறது .

5) தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசையும் ( 22/03/2007 முதல் 22/03/2027 ) வரை 4,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று அவயோக பலனை தருகிறது.


குறிப்பு : 

"குரு பார்த்தால் கோடி நன்மை"

இங்கே களத்திர பாவகத்தை "குரு பார்த்தால் கோடி நன்மை" என்பது பொய்யாகிறது, ஏனெனில் கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் குருபகவான் லக்கினத்தில் அமர்ந்து தானது கேந்திர ஸ்தானத்தை நேரெதிராக பார்வை செய்யும் பொழுது , தனது பாவகத்தை தானே கெடுத்து தீமை செய்கிறார் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம், இங்கே குரு பார்வை எவ்வளவு தீமை செய்கிறது, என்பது ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகாமல் தடை பெற்று கொண்டு இருப்பதை கவனத்தில் எடுத்துகொண்டாலே தெள்ள தெளிவாக புரிந்துகொள்ள இயலும்.

எனவே கோண வீடுகளான 1,5,9ம் பாவகதில் விழும் குரு பார்வை மட்டுமே நன்மை தரும், கேந்திர வீடுகளை பார்க்கும் குருபகவான் கேந்திர பாவகங்களுக்கு தீமையான பலன்களை தருவார் என்பது உறுதியாகிறது, மேலும் குரு பார்வை எல்லா பாவகங்களுக்கும் நன்மை செய்யும் என்பது உண்மைக்கு புறம்பானது என்பது ஜோதிடதீபத்தின் கருத்து, இதை பற்றி வேறு ஒரு பதிவில் காண்போம்.

எனவே குடும்ப ஸ்தானம் பாதிப்பதால், ஜாதகர் தனது வாழ்க்கைக்கு உகந்தவர் இவர்தான் என்று முடிவெடுக்கும் தகுதியை இழந்து விடுகிறார், மேலும் ஜாதகர் விரும்பு நபரையும் திருமணம் செய்துகொள்ள இயலாது ஏனெனில் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் விரும்பும் நபர் இவரை உண்மையாக நேசிக்க வாய்ப்பில்லை, அவரை ஜாதகர் கட்டாயத்தின் பேரில் திருமண செய்தாலும் ஜாதகருக்கு 200% தீமையை தருவார், திருமண வாழ்க்கை நீடிக்காது.

கால புருஷ தத்துவத்திற்கு குடும்ப ஸ்தானம் எனும் ரிஷபமும் பாதிக்க படுவதால் ஜாதகர் தான் தேர்ந்தெடுக்கும் திருமண வாழ்க்கையில் மன நிம்மதி இழப்பு என்ற ஒரு விஷயத்தை தவிர வேறு எதையும் நுகர இயலாது, தன்னிடம் உள்ள சேமிப்பு மற்றும் பணம் சொத்து மதிப்பு மரியாதை அனைத்தையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்.

இந்த ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானம் எனும்  துலாம் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான ஒரு விஷயம், இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ஜாதகரை யார்  அதிகமாக நேசிக்கின்றாரோ அவரை முழுமனதாக ஏற்றுக்கொண்டு, மணவாழ்க்கையை சிறப்பாக  அமைத்துகொள்வது சால சிறந்தது.

மேற்கண்ட ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகம் மட்டும் சிறப்பாக இருப்பதால் சம்பந்த பட்ட ஜாதகரை விரும்பி வருபவரை ஏற்றுகொள்வது நல்லது என்று பரிந்துரை செய்வதிற்கு காரணம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகம் மிகவும் வலிமையாக இருப்பதால் ஜாதகரை விரும்பி வரும் அன்பரே! ஜாதகருக்கு சிறந்த வாழ்க்கை துணையாக வருவார், நல்ல அதிர்ஷ்ட வாழ்க்கையையும், சிறப்பான எதிர்காலத்தையும் அமைத்து தருவார். ஆகவே ஜாதகர் இதை கருத்தில் கொண்டு தனது திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துகொள்வது சகல நிலைகளில் இருந்து நன்மை பயக்கும்.

குறிப்பு :

மேற்கண்ட ஜாதகருக்கு பாவக வழியில் 2ம் பாவகத்திற்கு அதிபதியான புத பகவானுக்கும் , 7ம் பாவகத்திற்கு அதிபதியான ராகு பகவானுக்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் பாவகதிர்க்கு அதிபதியான சுக்கிர பகவானுக்கும் ஜோதிடதீபம் பரிந்துரை செய்யும் முறையான பரிகாரங்களை செய்து நலம் பெறுங்கள்.

மேலும் ஜாதகர் தனது தாயாருக்கு தேவையான  அனைத்து விஷயங்களையும் அவரது மனம் நோகாமல், செய்து கொடுப்பது அருமையான குடும்ப வாழ்க்கையை அமைத்து தரும். தனது முன்னோர்களுக்கு  செய்யவேண்டிய வழிபாடு மற்றும் இதர விஷயங்களை செய்வது தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரியவர்களிடம் நல்லாசிகளை பெறுவது அருமையான வாழ்க்கை துணையை அமைத்து தரும், எக்காரணத்தை கொண்டும் ஜாதகர் மற்றவரிடம் பேசும் பொழுது அதிக கவனமாக இருப்பது சகல நிலைகளில் இருந்தும் நன்மை பயக்கும்., மேற்க்கண்டவை அனைத்தும் ஜாதகர் கடைபிடிக்கும் பொழுது பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்த்து யோக பலன்களை வாரி வழங்கும் சம்பந்தபட்ட பாவக வழியில் இருந்து.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக