சனி, 23 ஆகஸ்ட், 2014

பெண்கள் ஜாதகத்தில் களத்திர பாவகம், பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகியின் நிலை என்ன ?

  
 பொதுவாக ஆண்கள் ஜாதகம் என்றாலும் சரி, பெண்கள் ஜாதகம் என்றாலும் சரி, சுய ஜாதக அமைப்பில் களத்திர பாவகம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல, மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற களத்திர பாவக பலனை பருவ வயதிலோ, திருமண வயதிலோ, நடைபெறும் திசை ஏற்று நடத்தினால் ஜாதகரோ, ஜாதகியோ படும் இன்னல்களுக்கு எல்லை இருக்காது, குறிப்பாக எதிர்பால் இன அமைப்பில் இருந்து பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், ஆண் என்றால் பெண்களிடமும், பெண் என்றால் ஆண்களிடமும் ஏமாறும் தன்மையை தரும், சபந்தபட்ட நபர்களால் உடல் நலம் மற்றும் மன நலம் வெகுவாக பாதிக்க படும், இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கையை விட்டு விட்டு புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு சிரமப்படும் நிலைக்கு தள்ளபடுவார், மேலும் களத்திர பாவக வழியில் 200% துன்பத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை எவ்வித பாகுபாடு இன்றி வாரி வழங்கும்.

 இதை ஒரு உதாரண ஜாதகம் கொண்டு இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே !

லக்கினம் : தனுசு
ராசி : மகரம் 
நட்சத்திரம் : திருவோணம் 4ம் பாதம்


ஜாதகத்தில் நன்மைதரும் பாவக அமைப்புகள்:

1) 2,5,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% யோகத்தை வாரி வழங்குகிறது.

2) 3ம் வீடு தைரிய வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% யோகத்தை வாரி வழங்குகிறது.

3) 4,6,10,12ம் வீடுகள் உயிர் உடலாகி லக்கினத்துடன் சம்பந்தம் பெற்று 70% யோகத்தை வாரி வழங்குகிறது.

4) 9ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% யோகத்தை வாரி வழங்குகிறது.
ஜாதகத்தில் தீமை தரும் அமைப்புகள் :

1) 7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200% இன்னல்களுக்கும், மனதளவில் துன்பத்திற்கும் வழிவகுக்கும்.

2) 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 100% திடீர் இழப்பிற்கும், பொருள் இழப்பிற்கும், நிம்மதியற்ற வாழ்க்கைக்கும் அடிகோலும்.

3) 1ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 70% நிம்மதியற்ற வாழ்க்கைக்கும், தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறான பாதைக்கும் அழைத்து செல்லும்.

ராகு திசையில் 2,5,11ம் வீடுகள் லாபம் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜாதகிக்கு கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றியும், சிறந்த அந்தஸ்த்தையும் வாரி வழங்கியது, 2ம் பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு அளவில்லா வருமானத்தை வாரி வழங்கியது, 5ம் பாவக அமைப்பில் இருந்து கலைத்துறையில் பிரகாசிக்கு தன்மையை வாரி வழங்கியது, 11ம் பாவக அமைப்பில் இருந்து ஜாதகிக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் பல இடங்களில் இருந்து தொடர்ந்து வந்து குவிந்தது, ஜாதகியின் 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 7ம் பாவகமாக இருப்பதால், பொதுமக்களின் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருந்தது, மிகப்பெரிய மனிதர்களின் அறிமுகமும், கலைத்துறையில் மிகப்பெரிய வெற்றியையும் சம்பாதித்து கொடுத்தது.

ஆனால் ராகு திசையில் சந்திரன் மற்றும் செவ்வாய் புத்தியும்,
தற்பொழுது நடைபெறும் குரு திசையில், குரு புத்தியும் ஜாதகிக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகியின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, ஜாதகியால் இந்த இன்னல்களில் இருந்து வெளிவர இயலாத சூழ்நிலையில் மற்றவருக்கு கட்டுப்படும் நிலைக்கு ஆளாகி, அதில் இருந்து மீண்டு வர இயலாத சூழ்நிலையை ஜாதகியே உருவாக்கிகொண்டார், மேலும் தனது மனதையும் உடலையும் கொடுத்துக்கொண்டு , பல நிலைகளில் எதிர்ப்புகளை சம்பாதித்து கொண்டார், தனக்கு வந்த பல நல்ல வாய்ப்புகளை உதறி தள்ளிவிட்டு, தன் வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டார், தற்பொழுது நடைபெறும் திசை லக்கினத்திற்கு அதிபதியானாலும் கூட, அவர் ஏற்று நடத்துவது பாதக ஸ்தான பலன் என்பதால் 200% துன்பத்தையும் இன்னல்களையுமே இதுவரை வழங்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கருத்தில் கொள்வது அவசியம்.

மேலும் நடைபெறும் குரு திசை களத்திர ஸ்தான அமைப்பில் இருந்து பாதக ஸ்தான பலனை வழங்குவதால், ஜாதகி முரண்பட்ட இல்லற வாழ்க்கையை வாழ்ந்து பலரிடம் ஏமாறும் சூழ்நிலையை தந்துகொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரிய ஒரு விஷயம் , மேலும் இந்த பாதிப்பில் இருந்து ஜாதகி வெளியே வருவது என்பது மிக சிரமமான ஒரு காரியமே என்றால் அது மிகையில்லை, சுய ஜாதகத்தில் 8ம் வீடு ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, 8ம் பாவகம் சர நீர் ராசி என்பதால் ஜாதகி தனது மனதை கட்டுபடுத்த இயலாமல், மனம் போன போக்கில் தனது வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

 இதன் விளைவுகள் இனிவரும் காலங்களில் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதே வருந்ததக்கது, 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமாக இருப்பதால் தனக்கு நல்லது என்று நினைக்கும் விஷயங்கள்  யாவும், எதிர்ப்பாராத பொருள் இழப்பையே வாரி வழங்கியது, லக்கினம் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதால் ஜாதகி மற்றவரை நம்பி ஏமாறும் சூழ்நிலையையே இதுவரை தந்துகொண்டு இருக்கிறது, மேலும் 12ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் பாவகமாக வருவதாலும் ஜாதகிக்கு மன வாழ்க்கை என்ற ஒரு விஷயம் கேள்விக்குறியாகவே உள்ளது, 8ம் பாவகம் கடுமையான பாதிப்பை தருவதால், ஜாதகி தனது வாழ்க்கை துணையாக நினைக்கும் நபர்கள், ஜாதகியை மிக எளிதாக ஜாதகிக்கே தெரியாமல் ஏமாற்றுகிறார்கள் என்பதே வேதனைக்குரிய விஷயம்.

எனவே பெண்களின் ஜாதகத்தில் களத்திர பாவகம் பாதிக்கபடுவது எதிர்பால் அமைப்பில் இருந்து மிகப்பெரிய இன்னல்களையும், வாழ்க்கை துணை வழியில் இருந்து அதிக துன்பத்தையும் தரும், 8ம் பாவகம் பாதிக்க படுவது வாழ்க்கை துணை வழியில் இருந்து மிகப்பெரிய பொருள் இழப்பை தரும், 2ம் பாவகம் பாதிக்கபடுவது குடும்ப வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிடும், பெண்கள் ஜாதகத்தில் 2,7,8ம் பாவகங்கள் எக்காரணத்தை கொண்டு பாதிக்க படாமல் இருப்பது நல்லது, மேற்கண்ட பாவகங்கள் வலிமை பெறுவது ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் மிகுந்த சந்தோஷத்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக