வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாயா கிரகங்களான ராகு கேதுவுக்குள் அனைத்து கிரகங்களும் அமர்ந்தால் யோகமா ? தோஷமா ?


ஐயா .

கவிபாரதி  03.07.2014 ( 2.35AM ) salem
 
இது என் மகள் ஜாதகம். அனைத்து கிரகங்களும் கேது, ராகுவுக்கு  நடுவில் உள்ளது இது யோக பலன்களை வழங்குமா சார் ?எனது மகளின் எதிர் காலம் எப்படி இருக்கும்? தொந்தரவுக்கு மன்னிக்கவும்


தங்களது மகளின் சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு காணும் பொழுது, சனி பகவனை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் சாய கிரகங்கள் என்று அழைக்கப்படும் கேது ராகுக்கு மத்தியில் அமர்ந்து உள்ளது என்பதை வைத்து, தங்களது மகளின் ஜாதக பலனையும் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயம் செய்ய இயலாது அன்பரே! ( உண்மையில் தங்களது மகளின் ஜாதகத்தில் கேது வலிமை பெற்று 12ம் பாவகத்திலும், ராகு வலிமை அற்று 6ம் பாவகத்திலும் அமர்ந்து இருப்பது கவனிக்க தக்கது )

அவரது சுய ஜாதக அமைப்பின் படி 12 பாவகங்களின் வலிமை நிலையையும், தற்பொழுது மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களின் தன்மையையும் துல்லியமாக தெரிந்தால் மட்டுமே சரியான பலனை கூற இயலும், எனவே தங்களது மகளின் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் வலிமை பெற்று இருக்கும் பாவகங்கள் எவை எவை ? சுய ஜாதகத்தில் பதிப்பான நிலையில் வலிமை அற்று இருக்கும் பாவகங்கள் எவை எவை ? நடைபெறும், எதிர்வரும்  திசா புத்திகள் எந்த எந்த பாவக பலன்களை ஏற்று நடத்துகிறது என்பதை துல்லியமாக ஆய்வு செய்து இனி பலன் காண்போம் அன்பரே!

தங்களது மகளின் ஜாதகத்தில் பாவகங்களின் வலிமை நிலை :

ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்கும் பாவகங்கள் :

1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு,
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு,
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் தொடர்பு,
7ம் வீடு லக்கின ஸ்தானமான 1ம் பாவகத்துடன் தொடர்பு,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் தொடர்பு, பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் ஆகும்.

ஜாதகத்தில் வலிமை அற்று  இருக்கும் பாவகங்கள் :

2,5,6,8,11,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் மிகவும் வலிமை அற்ற பாவகங்கள் ஆகும்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை (03/07/2014 முதல் 13/01/2028 வரை ) தங்களது மகளுக்கு 1ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று யோக பலனை தருவதும் 7ம் பாவகம் துலாம் ராசியில் 2 பாகையும், விருச்சிக ராசியில் 25 பாகையும் கொண்டு இருப்பதால், இனிமையான குழந்தை பருவத்தை பெறுவார் என்பதும் திடீர் அதிர்ஷ்டங்களை பெரும் யோகம் பெற்றவர் என்பதும், பொதுமக்கள் வழியில் இருந்தும் நண்பர்கள் வழியில் இருந்தும் நன்மைகளை பெறுவார் என்பதும் உறுதியாகிறது, இந்த சுக்கிரன் திசை முடிவு பெரும் வரையிலும் ஜாதகிக்கு உடல் நலமும், மன ஆரோக்கியமும் சிறந்து விளங்கும், கல்வி காலங்களில் சிறந்த மாணவியாக திகழ்வார், அனைவரையும் மிக எளிதாக வசீகரிக்கும் ஆற்றல் உண்டாகும், ஜாதகி வளரும் இடம் மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்ததாக விளங்கும் என்பதை கவனத்தில் கொள்க.

சுய ஜாதகத்தில் 2,5,6,8,11,12 ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 12ம் பாவக வழியில் இருந்தும், மேற்கண்ட பாவக வழியில் இருந்தும் சிறு சிறு இன்னல்களை தரக்கூடும் என்பதால், சரியான பரிகாரங்களை தேடிகொள்வது ஜாதகிக்கு எதிர்காலத்தில் நலம் தரும், மேலும் ஜாதக ரீதியான முழுமையான பலன்களுக்கு முறையான ஆலோசனை நேரில் பெற்று கொள்ளவும்.

சுய ஜாதகத்தில் ராகு வலிமை பெற்று அமர்ந்த போதிலும் தனது திசா புத்தியில் இன்னல்களையும் 12ம் பாவக பலனையும்.

கேது சுய ஜாதகத்தில் வலிமை அற்று அமர்ந்த போதிலும் தனது திசா புத்திகளில்  நன்மைகளையும் 4ம் பாவக பலனையும் நடத்துவது சாயா கிரகங்கள் ரீதியான கவனிக்க தக்க அம்சம்.

ராகுவின் அமைப்பில் இருந்து ஜாதகி மன நிம்மதியையும், கேதுவின் அமைப்பில் இருந்து ஜாதகி உடல் நலத்தில் இன்னல்களையும் சந்திக்கும் தன்மையை தர கூடும், இருப்பினும் நடைபெறும் திசை சிறப்பாக இருப்பதால் எவ்வித பயமும் கொள்ள தேவையில்லை என்பது தங்களது மகளின் ஜாதக யோக நிலை, மேலும் விபரங்களுக்கு நேரில் அணுகவும்.

வாழ்த்துகள் 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக