வெள்ளி, 4 டிசம்பர், 2015

சுய ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களின் திசா புத்திகள் யோகபலன்களை வாரி வழங்குமா?


தங்களின் கேள்விக்கு ஜோதிட அன்பர்களின் கருத்து பெரும்பாலும் யோக பலன்களை வாரி வழங்கும் என்பதாகேவே இருக்கும், இந்த கேள்வி தங்களின் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தே கேட்கபட்டதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது, எனவே தங்களின் ஜாதகத்தையே உதாரணமாக கொண்டு விளக்கம் தருகிறோம் அன்பரே !

பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் ஆட்சி,உச்சம் பெற்று ( ராசி அல்லது அம்சம் ) அமர்ந்து இருந்தால் ஆட்சி,உச்சம் பெற்ற கிரகத்தின் திசா புத்திகள் யோக பலன்களை வாரி வழங்கும் என்று முடிவு செய்வது மிகவும் தவறு என்றே கருதுகிறோம், பொதுவாக ஒரு ஜாதகர் யோக பலன்களை அனுபவிப்பதும், அவயோக பலன்களை அனுபவிப்பதும் சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் திசா புத்திகளுமே என்றால் அது மிகை இல்லை, உதாரணமாக தங்களது ஜாதகத்தையே ஆய்வு செய்வோம் அன்பரே!



லக்கினம் : துலாம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : ஆயில்யம் 4ம் பாதம் 

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் ராசி அமைப்பில், சந்திரன் சனி  ஆட்சி பெற்றும், சுக்கிரன் ராகு  உச்சம் பெற்றும், சூரியன் செவ்வாய் பகை பெற்றும், குரு நட்பு நிலையிலும், புதன் சம நிலையிலும், கேது நீசம் பெற்றும் அமர்ந்து இருக்கின்றனர்.

தங்களது ஜாதகத்தில் நவ கிரகங்கள் நவாம்ச நிலையில், புதன் ஆட்சி பெற்றும், சூரியன் சனி உச்சம் பெற்றும், குரு ராகு கேது பகை பெற்றும், சந்திரன் சம நிலையிலும், செவ்வாய் சுக்கிரன் நட்பு நிலையிலும் அமர்ந்து இருக்கின்றனர்.

தாங்கள் பிறந்த பொழுது நடந்தது புதன் திசை, இந்த புதன் தங்களது சுய ஜாதகத்தில் ராசியில் சம நிலையிலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்றும் இருக்கின்றது எனவே தங்களுக்கு யோக பலன்களை தந்திருக்கும் என்று கணிப்பது சரியாக இருக்குமா ? நிச்சயம் இல்லை அன்பரே ஏனெனில் தங்களது லக்கினத்தை அடிப்படையாக கொண்டு 12 பாவகங்களின் வலிமை நிலையை தெளிவாக உணர்ந்தால் மட்டுமே தங்களுக்கு புதன் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்தியது என்பது தெரிய வரும்.

எனவே தங்களது ஜாதகத்தில் பாவகன்களின் தொடர்புகளை அறிவது அவசியமாகிறது, அதன் அடிப்படையில் கிழ்கண்டவாரு தங்களது சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் தொடர்பு நிலையும் அமைகிறது.

1,2,5,6,7,10,11,12 ம் வீடுகள் பாதக ஸ்தானமான ( சர லக்கினத்திற்கு பாதக ஸ்தானம் 11ம் பாவகம் ஆகும் ) 11ம் பாவகத்துடன் தொடர்பு.
3,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் தொடர்பு.
4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு.

பிறப்பில் தங்களுக்கு நடந்த புதன் திசை ( ராசியில் சமம், நவாம்சத்தில் ஆட்சி ) 2,6,10,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது,

அடுத்து வந்த கேது திசை ( ராசியில் நீசம்,நவாம்சத்தில் பகை ) தங்களுக்கு 4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் தொடர்பு பெற்று 8ம் பாவக பலனை ஏற்று நடத்தியிருக்கிறது.

தற்பொழுது நடைமுறையில் உள்ள ( 23/07/2002 முதல் 23/07/2022 வரை ) சுக்கிரன் திசை ( ராசியில் உச்சம், நவாம்சத்தில் நட்பு ) தங்களுக்கு 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவக பலனை ஏற்று  நடத்தி கொண்டு இருக்கிறது, எனவே தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை தங்களுக்கு எவ்வித பலனை தருகிறது என்பதை ஆய்வு செய்வோம் அன்பரே! மேலோட்டமாக தங்களது ஜாதகத்தை காணும் அன்பர்கள் சுக்கிரன் உச்சம் பெற்று தனது திசை நடத்துவதால் தங்களுக்கு மிகுந்த யோகமும் நன்மையையும் உண்டாகும் என்பதாக கருதக்கூடும், ஆனால் தங்களது சுய ஜாதக அமைப்பின் படி, சுக்கிரன் தனது திசையை 1,5,7,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு படுத்தி நடத்துவது வருந்தத்தக்கதே.

சுய ஜாதகத்தில் எந்த ஒரு வீடுகளும் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது நல்லதல்ல, அப்படி தொடர்பு பெற்றாலும், நவ கிரகங்கள் தனது திசையில் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தாமல் இருந்தால் ஜாதகருக்கு நல்லது, ஆனால் தங்களது சுய ஜாதகத்தில் பிறப்பில் வந்த புதன் திசையும், தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசையும் தங்களுக்கு பாதக ஸ்தான பலனையே ஏற்று நடத்துகிறது.

 எனவே தாங்கள் 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிக அளவில் சுக்கிரன் திசையில் அவயோக பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாக கூடும், குறிப்பாக இலக்கின வழியில் இருந்து உடல் மனம் பாதிக்கும், 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வியும், சிந்தனையும் அறிவு திறனும் பாதிக்கும், தனது பூர்வீகத்தை விட்டு பரதேச ஜீவனம் மேற்கொள்ளும் தன்மையை தரும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் மற்றும் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் இன்னல்களையும், எதிர்பால் அமைப்பில் இருந்து துன்பங்களையும், 11ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை குறைவையும், வீண் அலைச்சல் மற்றும் அதிக போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும்.

பாதக ஸ்தானம் என்பது ஒருவருக்கு 200% சதவிகித இன்னல்களை தங்குதடையின்றி வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது, எனவே சுக்கிரன் திசை முழுவதும் தாங்கள் 1ம் பாவக வழியில் இருந்து சுய கட்டுபாடு நல்ல ஒழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களை கையாள்வதும், 5ம் பாவக வழியில் இருந்து குல தேவதை வழிபாடும், எந்த ஒரு காரியத்தையும் பொறுமையாக கையாளும் தன்மையையும், 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள்,பெண்கள் மற்றும் பொதுமக்கள் என்ற அமைப்பில் எச்சரிக்கையுடனும், 11ம் பாவக வழியில் இருந்து மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டும், அதிர்ஷ்டத்தை நம்பாமல், தீவிர உழைப்பை நம்பி செயல்படுவதும் தங்களுக்கு சுக்கிர திசை பாதக ஸ்தான பலன்களில் இருந்து காப்பாற்றும், குறிப்பாக தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்தாலே 90% சதவிகித இன்னல்கள் குறைந்துவிடும்.

தங்களது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று திசையை நடத்துகிறது, எனவே இனி மிகுந்த யோகத்தை தரும் என்று யாரவது சொல்வதை கேட்டுக்கொண்டு தங்களது பூர்வீகத்திலேயே ஜீவனம் செய்தீர்களா என்றால், அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் சூழ்நிலையை தந்துவிடும் என்பதால், தங்களது பூர்வீகத்தை விட்டு வெளியேறி, சிறப்பாக திட்டமிட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதே புத்திசாலித்தனம்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக