வணக்கம்...
ஜோதிடதீபம் ஆசிரியர் அவர்களூக்கு. K.சக்திவேல் எழுதுவது
எனது ஜாதகம் அனுப்பியுள்ளேன் பாருங்கள்.
13/12/1970(2.03am) dharapuram
இதுவரை எதுவும் உருப்படவில்லை !!!
இதுவரை திருமணம்இல்லை (அந்த ஐடியாவும் இல்லை)
ஆடும்வரைஆட்டம்,ஆயிரத்தில்நாட்டம்.எனவாழ்ந்துவிட்டேன்!!!
வாழாவெட்டியாகவும் & வெட்டியாவாழாமழும் (நடைபிணம்போல் இருக்கிறேன்)
என் ஜாதகம்பார்த்து ஏதாவது தேருவேணா? அல்லது வீணாய்போகும் வாழ்க்கையா எனபார்க்கவும்.
அன்பு நண்பரே,
ஒரு மனிதருக்கு சில குறைகளை இறை "அருள்" தந்தபோதிலும், அந்த குறைகளை களைந்து வாழ்க்கையில் நன்மைகளை அடைய சில நல்ல வழிகளையும் வைத்திருக்கும், தங்களது ஜாதகத்தில் பாவக தொடர்பு அமைப்புகளை ஆய்வு செய்வோம்.
1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் பாதக ஸ்தான வழியில் இருந்தும், 12ம் பாவக வழியில் இருந்தும் அதிக அளவில் இன்னல்களை தரும், இதில் பாதக ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 12ம் பாவக வழியில் இருந்து 35% விகித இன்னல்களையும் தாங்கள் அனுபவிக்கும் தன்மையை தரும், எனவே மேற்கண்ட பாவக தொடர்புகளே தங்களது வாழ்க்கையில் இன்னல்கள் தரும் அமைப்பாக கருதலாம்.
3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும்,
9,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதும் தங்களது ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற அமைப்பாக கருதலாம், உதாரணமாக தங்களது 3ம் பாவகம் விருச்சிக ராசியிலும்,தனுசு ராசியிலும் வியாபித்திருப்பது மிகுந்த நன்மைகளை தரும், மேலும் தரகு தொழில், கமிஷன் வியாபாரம், ஏஜென்சி துறையில் நல்ல வருமானத்தை பெறுவதற்கு உண்டான வாய்ப்புகளை வழங்கும்.
5ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் தொடர்பு 5ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவனம் மற்றும் லாப ஸ்தானமான மகரம் மற்றும் கும்பம் ராசியில் வியாபித்து இருப்பது, ஜாதகர் தனது புத்திகூர்மையாலும், சமயோசித புத்திசாலிதனத்தாலும் ஜீவனம் மற்றும் லாபங்களை பெரும் யோகத்தை தரும், எனவே தனது அறிவு திறனின் அடிப்படையில் ஜீவனத்தை தேடுவது சிறப்பான வெற்றிகளை வாரி வழங்கும், ஜாதகர் முற்போக்கு சிந்தனையுடன் அணுகும் எந்த ஒரு காரியமும் மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும், அறிவு சார்ந்த முயற்ச்சிகள் ஜாதகருக்கு யோகங்களை வாரி வழங்கும்.
9,11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் தொடர்பு 11ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுகம் மற்றும் பூர்வபுண்ணிய வீடுகளான கடகம் மற்றும் சிம்மத்தில் வியாபித்து இருப்பது சுக போக வண்டி வாகன யோகத்தையும், ஆன்மீக வழியில் வெற்றியையும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாததினால் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளையும் அதிர்ஷ்டகரமாக பெரும் யோகத்தை வாரி வழங்கும், எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிக்கும் வல்லமையை மிகவும் சிறப்பாக தரும், இறை அருளின் கருணையினால் வாழ்க்கையில் சிக்கல்களில் இருந்து விடுபட்டு நன்மையான பலன்களை அனுபவிக்கும் யோகத்தை தரும்.
சுய ஜாதகத்தில் 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவதே தங்களுக்கு அதிக அளவில் இன்னல்தரும் அமைப்பாக கருதலாம், லக்கினம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெறுவது, ஜாதகரே தனது வாழ்க்கையை பாதிப்பிற்கு உள்ளாக்கும் தன்மையை தரும், ஜாதகர் உடல் மனம் உயிர் ஆகியவற்றை சிறப்பாக பராமரிக்கவில்லை எனில், ஜாதகர் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், தனது உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கும் செயல்களில் ஜாதகர் ஈடுபடாமல் இருப்பதே ஜாதகருக்கு மிகுந்த நன்மையை தரும், ஜாதகரின் முயற்ச்சி இன்மையும், அறிவு திறனில் சிந்தனை ஆற்றல் குறையும் பொழுது ஜாதகரின் செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கும், எனவே சிறந்த ஆன்மீக பெரியோரிடம் தீட்சை பெறுவதும், மனதையும் உடலையும் பேணிகாப்பது ஜாதகரின் நலவழ்விற்கு சரியான பாதையை அமைத்து தரும்.
7ம் வீடு பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெறுவது, எதிர்பால் அமைப்பில் இருந்து அதிக இன்னல்களையும் துன்பங்களையும் வாரி வழங்கும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது, 7ம் பாவக வழியில் இருந்து நண்பர்கள் கூட்டாளிகள் வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மூலம் தங்களின் வாழ்க்கை மிகப்பெரிய இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிக்கும் சூழ்நிலையை தர கூடும், மேலும் தேவையில்லாத பிரச்சனைகள் மூலம் மற்றவர்களால் மனநிம்மதியும், மன போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாக கூடும், தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை தங்களுக்கு வலிமை பெற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் தங்களுக்கு சிறப்பான நன்மைகள் நிச்சயம் நடை பெரும், மாறாக வலிமை அற்ற பாவகத்தின் பலனை ஏற்று நடத்தினால் இன்னல்களின் சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
தற்பொழுது நடைபெறும் சனி திசை தங்களுக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும்,
2,4,6,8,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றும் பலனை நடத்துவதால் பாதக ஸ்தான வழியில் இருந்து அதிக இன்னல்களையும், 12ம் பாவக வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரக்கூடும் என்பதால் 7ம் பாவக வழியில் இருந்தும், 12ம் பாவக வழியில் இருந்தும் தங்களை தற்காத்து கொள்வது நல்லது, மேலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வழியில் இருந்து அதிக எச்சரிக்கையுடன் சில விஷயங்களை கையாள்வது சிறந்த நன்மைகளை தரும்.
தங்களது சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து முயற்ச்சிகளையும் செயல்பாடுகளையும் செய்வது நன்மையையும் யோகத்தையும் தரும்.
தங்களது சுய ஜாதகத்தில் வலிமை அற்ற பாவக வழியில் இருந்து அதிக எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களையும் கையாள்வது, தங்களுக்கு சிரமங்களை வெகுவாக குறைக்கும்.
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடு வலிமை பெறுவது தாமத இல்லற வாழ்க்கையை அமைத்து தரும், எதிர்பார்ப்புகள் இல்லாத இல்லற துணையை தேடிகொள்வது சிறப்பு, சுய ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் பாதிக்கக் பட்டு இருப்பதால் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 2,7ம் பாவகங்கள் வலிமை பெற்ற ஜாதகத்தை தேர்வு செய்து வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வது தங்களின் ஜாதகத்தில் பாதிக்க பட்ட 2,7ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை வெகுவாக குறைக்கும்.
தற்பொழுது நடைமுறையில் உள்ள கேது புத்தி தங்களுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்கது, எனவே சரியான வாழ்க்கை துணையை தேடிக்கொள்ள ஏற்ற யோக காலம் இதுவே என்றால் அது மிகையல்ல.
தங்களது ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறுவதற்கு உண்டான முயற்சிகளில் இனி தாங்கள் முழு மூச்சாக இறங்குவது சிறப்பான யோகத்தையும் நன்மையையும் பெற்றுத்தரும்.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
Thank you sir.Thank you......
பதிலளிநீக்குk.sakthivel
My son's birth details: DOb 22/2/85 TOB 11/15 AM POB T.NAGAR , CHENNAI PAST EVENTS JOINED JOB ON 22/2/07 Accidents on 6/1/2010 & 16/7/2003 will you pl verify the correctness of birth time snd advise when he will settle thanksn pl give your rmail address
பதிலளிநீக்குMy son's birth details: DOb 22/2/85 TOB 11/15 AM POB T.NAGAR , CHENNAI PAST EVENTS JOINED JOB ON 22/2/07 Accidents on 6/1/2010 & 16/7/2003 will you pl verify the correctness of birth time snd advise when he will settle thanksn pl give your rmail address
பதிலளிநீக்கு