"கேதுபோல் கெடுப்பவரும் இல்லை ராகுபோல் கொடுப்பவரும் இல்லை" என்பது வசனநடைக்கு பொருந்துமோ தவிர, ஒருவரின் சுய ஜாதகத்தில் தனது திசையில் மேற்கண்ட பலனை தரும் என்று நினைப்பது முற்றிலும், ஜோதிட கணிதம் அறியாத அன்பர்கள் சொல்லும் வாய்மொழியாகவே இருக்கும், பொதுவாக ஒருவருக்கு நடைபெறும் திசை குரு,சந்திரன்(வளர்பிறை),புதன்,சுக்கிரன் போன்ற கிரகங்களின் திசையாக இருப்பின் யோக பலன்களை நன்மையையும் தரும் என்று கணிப்பதும், சூரியன்,சனி,செவ்வாய்,சந்திரன்(தேய்பிறை),ராகு,கேது போன்ற கிரகங்களின் திசையாக இருப்பின் அவயோக பலன்களையும், தீமையையும் தரும் என்று கணிப்பது கற்பனைக்கு உகந்தாக அமையுமோ தவிர, உண்மையான ஜோதிட கணிதமாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.
ஒருவரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது, இதில் நவகிரகங்களுக்கு தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில், லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமையின் தன்மையை ஏற்றுநடத்தும் பொறுப்பு மட்டுமே உள்ளது, இத்துடன் அன்றைய கோட்சார பலன்களுக்கு ஏற்றவாறு யோக அவயோக பலன்களின் தன்மை மாறுபடும் என்ற போதிலும் பாவக வலிமையின் பலாபலன்கள் நிச்சயம் நடைமுறைக்கு வரும், தங்களின் கேள்வி கேது திசை கெடுதல் மட்டுமே செய்யுமா? என்பதாக உள்ளதால், தற்பொழுது நடைமுறையில் கேது திசை தரும் பலாபலன்களை அனுபவித்து கொண்டு இருக்கும் நமது நண்பரின் சுய ஜாதகத்தை இந்த பதிவில் ஆய்வுக்கு எடுத்து கொள்வோம் அன்பரே !
லக்கினம் : தனுசு
ராசி : கும்பம்
நட்சத்திரம் : சதயம் 4ம் பாதம்
ஒருவரின் சுய ஜாதகத்தில் பாவக வலிமைக்கு ஏற்ப்பவே நவகிரகங்கள் தனது திசையில் பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்பதற்கு சரியான உதாரணம் மேற்கண்ட நமது நண்பரின் ஜாதகமே மிகவும் சரியாக பொருந்தும், தற்பொழுது 31/10/2013 முதல் 30/10/2020 வரை கேது திசை நடைமுறையில் உள்ளது கவனிக்க தக்கது, எனவே அன்பரது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12பாவகங்களின் வலிமை நிலையை பற்றியும், தற்பொழுது நடைமுறையில் உள்ள கேது திசை ஜாதகருக்கு வழங்கும் பலாபலன்களை இனி ஆய்வு செய்வோம்.
ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி வலிமை பெற்றுள்ள பாவகங்கள் :
1,3ம் வீடுகள் தைரியம் வீரியம் மற்றும் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம்.( ஜாதகரின் 3ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாபஸ்தனமாக அமைவது அதிர்ஷ்டத்தின் தன்மையை காட்டுகிறது)
2,5ம் வீடுகள் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 5ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லக்கினமாக அமைவது, ஜாதகர் செய்த புண்ணியத்தின் தன்மையையும், ஜாதகரின் கல்வி அறிவையும், சமயோசித புத்திசாலிதனத்தையும், சுய கட்டுபாடு மற்றும் ஜாதகரின் அறிவு திறனின் வேகத்தையும் காட்டுகிறது )
4,6,12ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 9ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாக அமைவது ஜாதகரின் முன்னோர்கள் செய்த பாக்கியத்தையும், இறை அருள் ஜாதகருக்கு வாரி வழங்கும் அறிவு திறனையும், அதிபுத்திசாலிதனத்தையும் பெரிய மனிதர்களின் ஆதரவையும், நல்லோர் ஆசியையும் பரிபூர்ண ஆன்மீக வெற்றியையும் பறைசாற்றுகிறது.)
7,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 10ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 6ம் பாவகமாக அமைவது, எதிரிகளை வெல்லும் மார்க்கத்தையும், குறைவான முதலீட்டில் மிகப்பெரிய லாபங்களை தொடர்ந்து வழங்கும் தன்மையை தருகிறது, மேலும் கன்னி உபய மண் தத்துவம் என்பதால் விவசாய விதை பொருட்கள் மற்றும் உணவு சார்ந்த பொருட்களை வியாபாரம் ( வியாபாரம் 7ம் பாவகத்தை குறிக்கும் ) செய்யும் யோகத்தை தந்தது.)
11ம் வீடு லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு களத்திர ஸ்தானமாக அமைவது, ஜாதகருக்கு யோகம் மிகுந்த வாழ்க்கை துணையையும், சிறந்த நண்பர்களையும், சக்தி வாய்ந்த பலமிக்க தொழில் முறை கூட்டாளிகளை அமைத்து தந்தது, வாழ்க்கையின் முன்னேற்றங்கள் என்பது ஜாதகரின் திருமணத்திற்கு பிறகு மிகவும் அபரிவிதமாக அமைந்தது.
ஜாதகருக்கு சுய ஜாதக அமைப்பின் படி வலிமை அற்ற பாவகங்கள் :
8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 8ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமாக அமைவது, நீண்ட ஆயுளை தந்து, ஜாதகருக்கு சுக போக பாக்கியங்கள் அனைத்தும் இருந்தாலும், ஜாதகர் அவற்றை முழுமனதாக அனுபவிக்காமல் தாமரை இலை நீர் போல் வாழும் சூழ்நிலையை தந்தது, ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகரித்தது, எதிர்பாராத பொருள் இழப்பால் மனம் மிகவும் வேதனையை அனுபவிக்கும் தன்மை உண்டானது )
9ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம். ( ஜாதகரின் 12ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஆயுள் ஸ்தானமாக அமைவது, ஜாதகரின் மனம் நிலையற்ற தன்மையில் அதிக போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை உருவாக்கியது, ஜாதகர் சமூகத்தில் விமர்சனங்களை சந்தித்து வாழ்க்கையில் முன்னேற்றங்களை பெரும் யோகத்தை தந்தபோதிலும், அதிக மன உளைச்சலுக்கும் மன போராட்டத்திற்கும் ஆளாக்கியது.)
மேற்கண்ட அமைப்பில் ஜாதகர் தனது பாவக வலிமை,வலிமை அற்ற நிலையில் இருந்து பொது பலன்களை அனுபவிக்கும் தன்மையை தந்தது, தந்துகொண்டு இருக்கிறது, இனிவரும் காலங்களில் தரும், இதில் ஜாதகருக்கு 8,9ம் பாவகங்களை தவிர மற்ற அனைத்து பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பது ஜாதகரின் யோக வாழ்க்கைக்கு 100% விகித உறுதியை வழங்குகிறது.
இனி கேள்விக்கு வருவோம் கேது திசை கெடுக்குமா ?
தற்பொழுது நடைபெறும் கேது திசை ஜாதகருக்கு 1,3ம் வீடுகள் தைரியம் வீரியம் மற்றும் சகோதர ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 3ம் பாவக பலனை ஏற்று நடத்துவது, வலிமை பெற்ற மூன்றாம் பாவக வழியில் இருந்து செல்வ செழிப்பு, எதிரிகளை வெல்லுதல், நல்ல உடல் மற்றும் மன நிலை, சிறந்த சிந்தனை அறிவு, பகுத்தறியும் சிறப்பாற்றல், உண்மை மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் குணம், தன்னிறைவான வியாபர விருத்தி, ஏஜென்சி துறையில் அபரிவிதமான லாபம், பயணங்கள் மூலம் வெற்றி வாய்புகள் வந்து குவியும் யோகம், புதியவைகளை கற்றுகொள்ளும் யோகம், புதிய மாற்றங்கள் மூலம் வாழ்க்கையில் சிறப்பு, புதிய சூழ்நிலைகள் மூலம் புத்துணர்வு என்ற வகையில் யோகத்தை தரும்.
ஜாதகரின் 3ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு லாபஸ்தனமாக அமைவதும், ஸ்திர காற்று தத்துவ ராசியில் அமைவதாலும் ஜாதகரின் வெற்றிகள் யாவும் ஸ்திரமாகவும், நிலைதன்மையுடன் நிலைத்து நிற்கும், ஜாதகர் பெரும் வெற்றிகள் யாவும் தனது அறிவு திறன் மூலமாகவும், சமயோசித புத்திசாலிதனத்தாலும் விருத்தியடையும் என்பது கவனிக்க தக்க அம்சம், மேலும் புதிய சொத்துகள், வண்டி வாகனம் மற்றும் புதிய நண்பர்கள் கூட்டாளிகள் மூலம் மிகுந்த லாபம் பெரும் யோகம் உண்டாகும், ஆக கேது திசை ஜாதகருக்கு யோக பலன்களை வாரி வழங்குவது உறுதியாகிறது.
எனவே எந்த ஒரு ஜாதகத்திலும் கேது மட்டுமல்ல நவ கிரகங்கள் அனைத்தும் சம்பந்தபட்ட ஜாதகரின் பாவக பலனை ( வலிமை, வலிமை அற்ற ) ஏற்று நடத்துமே தவிர, குத்துமதிப்பாக கேது கெடுதல் செய்யும் சுக்கிரன் நன்மை செய்யும் என்று கணிப்பது ஜோதிட கணிதத்திற்கு முரண்பட்ட கற்பனை கலந்த கட்டுகதையாகவே இருக்கும் என "ஜோதிடதீபம்" கருதுகிறது.
எனவே ஜோதிட கணிதத்திற்கு முரண்பட்ட கற்பனை கதைகளை நம்பி, எந்த ஒரு ஜாதகரும் செயல்படாமல், மிகவும் விழிப்புணர்வுடன் தனது சுய ஜாதக பாவக வலிமை உணர்ந்து வாழ்க்கை மேன்மை மற்றும் முன்னேற்றங்களை பெற "ஜோதிடதீபம்" ஆலோசனை வழங்குகிறது.
வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696
ஐயா நான் 7/5/1987 வியாழன் பிற்பகல் 3:30 பிறந்தேன் எனது ஜாதகத்தை பற்றி விவரிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையாக விவரிக்கலாம், நேரில் வந்து முறையாக ஜாதக ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
நீக்குsir ennoda name mahalakshmi,my dob 19-10-91,raasi-kumbam,natchathiram-sathayam,pls sir ennoda mrg stop aachu,,athu edhunala sollunga
பதிலளிநீக்கு