செவ்வாய், 29 டிசம்பர், 2015

தாமத திருமணமும் சுயஜாதகத்தில் களத்திர ஸ்தான வலிமை நிலையும்!


“ திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யபடுகிறது “ என்ற பழமொழிக்கு ஏற்ப திருமணம் என்பது ஒவ்வொரு தம்பதியருக்கும், யோகங்களை வாரி வழங்கும் தன்மையில் அமையவேண்டும், எந்த ஒரு ஜாதகருக்கும் திருமண வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது சம்பந்தபட்ட ஜாதகரின் களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படும் 7 ம் பாவக வலிமையே, சரியான வயதில் எவ்வித தங்கு தடையும் இன்றி திருமண வாழ்க்கை சிறப்பாக அமைவது சம்பந்தபட்ட ஜாதகத்தில் களத்திர பாவக வலிமையின் அடிப்படையிலே என்றால் அது மிகையில், சுய ஜாதகங்களில் களத்திர ஸ்தானம் வலிமை பெரும் பொழுது சம்பந்தபட்ட ஜாதகருக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை ( வது, வரன் ) சரியான பருவ வயதில், சரியான நேரத்தில், மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெறும், தாம்பத்திய வாழ்க்கையும் மணமக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைத்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை அன்பர்களே!

சுய ஜாதகங்களில் களத்திர ஸ்தானம் எனப்படும் 7 ம் பாவகம் எந்த விதத்திலாவது பாதிக்கப்படும் பொழுது, ஜாதகர் அல்லது ஜாதகியின் திருமண வாழ்க்கை வெகுவாக பாதிக்க படுகிறது, பொருத்தமற்ற வரன்கள் வருவது, திருமணம் தாமதம், திருமணதிற்கு பிறகு இன்னல்கள், தாம்பத்தியத்தில் மனகசப்பு, மன வாழ்க்கையில் பிரிவு என திருமண வாழ்க்கையையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றிவிடும், பொதுவாக களத்திர ஸ்தான வலிமையை பெரும்பாலும் 7ம் பாவகத்தில் அமர்ந்த கிரகம், பார்த்த கிரகம், 7ம் பாவகத்திற்கு அதிபதியான கிரகம், அவர் அமர்ந்த வீடு என நிர்ணயம் செய்வது, களத்திர ஸ்தான வலிமையை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலாது அன்பர்களே!

 உதாரணமாக ஒருவரின் சுய ஜாதகத்தில் சாய கிரகங்களான ராகு அல்லது கேது களத்திர ஸ்தானத்தில் அமர்வது ஜாதகருக்கு களத்திர தோஷத்தை வழங்கும் என்று முடிவு செய்வது மிகவும் அபத்தமான விஷயம், களத்திர பாவகத்தில் அமர்ந்த ராகு அல்லது கேது சம்பந்தபட்ட பாவகத்திற்கு வலிமை பெற்று யோக பலன்களை தருகின்றனர? வலிமை அற்று அவயோக பலன்களை தருகின்றனர? என்று தெளிவு பெற்ற பின்பு ஜாதக பலன் காண முற்படுவதே சரியானதாக அமையும், சாய கிரகங்களுக்கு மட்டும் தாம் அமர்ந்த பாவகத்தை தனது கட்டுபாட்டில் கொண்டவரும் வல்லமை உண்டு, மேலும் சம்பந்த பாவகத்திற்கு 1௦௦ சதவிகித வலிமை பெற்று யோக பலன்களையோ, 1௦௦ சதவிகித வலிமை அற்று அவயோக பலன்களையோ தங்கு தடையின்றி வழங்கும் தனிப்பட்ட வலிமை உண்டு.

களத்திர ஸ்தான வலிமையை துல்லியமாக அறிந்துகொள்ள, 7ம் வீடு தாம் தொடர்பு பெரும் பாவகத்தின் அடிப்படையில் களத்திர ஸ்தான வலிமையை நிர்ணயம் செய்வது மிகவும் துல்லியமாக அமையும், உதாரணமாக 7ம் வீடு 6,8,12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வலிமை அற்ற நிலையையும், 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் ( சர லக்கினத்திற்கு 11ம் பாவகமும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் பாவகமும், உபய லக்கினத்திற்கு 7ம் பாவகமும் ) சம்பந்தம் பெறுவது களத்திர ஸ்தான வழியில் இருந்து  கடுமையான பாதிப்புகளை தரும் என்பதை தெளிவாக உணரலாம், இதை தவிர்த்து வேறு எந்த பாவகத்துடன் 7ம் வீடு தொடர்பு பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு, மிகுந்த யோக பலன்களையே வாரி வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, ஒருவரது சுய ஜாதகத்தில் களத்திர பாவக வலிமையின் அடிப்படையில் பலாபலன்களை ஓர் உதாரணா ஜாதகம் கொண்டு விளக்கம் பெறுவோம் அன்பர்களே!



லக்கினம் : கடகம்
ராசி : மகரம்
நட்சத்திரம் : உத்திராடம் 2ம் பாதம்

மேற்கண்ட ஜாதகியின் திருமண தாமதத்திற்கு, ஜாதக ரீதியாக ஜோதிடர்கள் சொன்ன காரணங்கள் :

காரணம் 1) 
களத்திர ஸ்தானத்தில் ராகு, லக்கினத்தில் கேது எனவே கால சர்ப்ப தோஷம், திருமணம் தாமதம் ஆகிறது.

உண்மை நிலை :

 ஜாதகிக்கு லக்கினம் கடக ராசியில் 109:28:14 பாகையில் ஆரம்பித்து சிம்ம ராசியில் 137:56:07 பாகையில் முடிவடைகிறது, கேது பகவான்  கடக ராசியில் உள்ள 12ம் பாவகத்தில் 107:38:27 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

 ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து கும்ப ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, ராகு பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 287:38:27 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

எனவே சுய ஜாதகத்தில் திருமண தாமதத்திற்கு சாயா கிரகங்களான ராகுகேது காரணம் இல்லை என்பது 100% விகிதம் உறுதியாகிறது.

காரணம் 2) 
செவ்வாய் தோஷம், 8ம் பாவகத்தில் செவ்வாய் அமர்ந்து இருப்பது தோஷத்தை தரும் எனவே திருமணம் தாமதம் ஆகிறது.

உண்மை நிலை :

8ம் பாவகத்தில் அமர்ந்த செவ்வாய் எந்த ஒரு விதத்திலும் களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறவில்லை என்பதாலும், செவ்வாய் தான் அமர்ந்த பாவக அமைப்பில் இருந்து மேஷம் விருச்சிகம் இரண்டு பாவகங்களுக்கும் நன்மை தருவது சிறப்பானதே, எனவே திருமண தாமதத்திற்கு செவ்வாய் காரணம் இல்லை என்பது உறுதியாகிறது.

காரணம் 3) 
சனி பகவான் 7ம் வீட்டில் அமர்ந்து இருப்பது, திருமணம் தாமதமாக காரணமாக உள்ளது.

உண்மை நிலை : 

ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து கும்ப ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, சனி பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 271:32:32 பகையில் மிகவும் வலிமை பெற்று அமர்ந்திருக்கின்றது.

காரணம் 4) 
களத்திர ஸ்தானத்தில் 3 பாவ கிரக சேர்க்கை எனவே திருமணம் அமைய தாமதமாகிறது.

உண்மை நிலை :

ஜாதகிக்கு களத்திர ஸ்தானம் மகர ராசியில் 289:28:14 பாகையில் ஆரம்பித்து மகர ராசியில் 317:56:07 பாகையில் முடிவடைகிறது, ராகு பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 287:38:27 பாகையிலும், சனி பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 271:32:32  பகையிலும், சந்திர பகவான்  மகர  ராசியில் உள்ள 6ம் பாவகத்தில் 270:25:14 பகையிலும் அமர்ந்து இருப்பதால், 3 பாவ கிரக சேர்க்கை 6ம் பாவகத்திலேயே அமைகிறது, எனவே திருமண தாமதத்திற்கு இதுவும் சரியான காரணமல்ல.

திருமண தாமதத்திற்கு உண்மையான காரணம் :

ஜாதகிக்கு 3,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், ஜாதகியின் 11ம் பாவகம் காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு குடும்ப ஸ்தானமான ரிஷப ராசியில் அமைவதாலும், தற்பொழுது நடைமுறையில் உள்ள ராகு திசை விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவதும், விரைய ஸ்தானம் ஜாதகிக்கு கால புருஷ தத்துவத்திற்கு முயற்ச்சி ஸ்தானமாக  அமைவது திருமனத்திற்க்காக எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையும்  வாரி  வழங்குகிறது.

வாழ்க வளமுடன் 
 ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக