செவ்வாய், 26 ஜனவரி, 2016

லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகம் வழங்கும் அவாயோக பலன்கள் !


லாப ஸ்தானம் என்றாலே மிகுந்த நன்மைகளையும் யோகங்களையும் வாரி வழங்கும் என்றும், லாப ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கும் கிரகங்கள் யாவும், அதிர்ஷ்டத்தையும் நன்மையையும் வாரி வழங்கும், 11ம் பாவக வழியில் இருந்து யாரும் சிரமங்களை அனுபவிக்க முடியாது, நன்மையான பலன்களே நடைபெறும் என்பது பல, ஜோதிடர்கள் பொது கருத்தாக இருக்கின்றது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான கருத்தாகவே " ஜோதிடதீபம் " கருதுகிறது, லாப ஸ்தான வழியில் இருந்து அனைவரும் நன்மையை பெறுகின்றனர் என்பது முற்றிலும் ஏற்றுகொள்ள இயலாத உண்மைக்கு புறம்பான வாதம், ஏனெனில் சர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ம் பாவகமே பாதக ஸ்தானமாக வருகின்றது, சர லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு 11ம் பாவகத்துடன் தொடர்பு பெரும் அந்தனை வீடுகளும் தமது வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தங்கு தடையின்றி, குறுகிய காலத்தில் வெகு விரைவாக வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சமாகும்.

லாப ஸ்தானம் எனும் 11ம் பாவக வழியில் இருந்து ஒருவர் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி ஓர் உதாரண ஜாதகம் கொண்டு காண்போம் அன்பர்களே, சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களுக்கும் நன்மை தீமை பலாபலன்களை வழங்கும் சக்தி உண்டு, திரிகோணம் (1,5,9 ) மற்றும் கேந்திர (1,4,7,10 ) பாவகங்கள் நன்மையை மட்டுமே செய்யும் என்பதும், மறைவு ஸ்தானம் எனப்படும் (6,8,12) பாவகங்கள்  தீமையை மட்டுமே செய்யும் என்பதும் முற்றிலும் சுய ஜாதக கணிதத்திற்க்கு புறம்பானது, ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் முதல் 12 பாவகங்களும் சம்பந்தபட்ட ஜாதகருக்கு நன்மை தீமை பலாபலன்களை வழங்கும் என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.

உதாரண ஜாதகம் :


லக்கினம் : கடகம் 
ராசி : மிதுனம் 
நட்சத்திரம் : திருவாதிரை 3ம் பாதம் 

ஜாதகருக்கு கடக லக்கினம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம் தற்பொழுது நடைபெறுவது குரு திசை ( குரு மீனத்தில் ஆட்சி ) 03/12/2007 முதல் 03/12/2023 வரை, சுக்கிரன் புத்தி ( சுக்கிரன் மீனத்தில் உச்சம் ) 15/10/2015 முதல் 15/06/2018 வரை, குரு திசை ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் (லாப ஸ்தானம் ) சம்பந்தம் பெற்றும், 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும் பலனை தருவது ஜாதகரின் வளரும் பருவத்தையும், கல்வி காலங்களையும் வெகுவாக பாதித்து கொண்டு இருக்கின்றது, உடல் நிலை சார்ந்த தொந்தரவுகள் ஜாதகரை வெகுவாக பாதிக்கிறது, ஜாதகரின் செயல்பாடுகளும் தனது உடல் நிலையில் அக்கறை இன்மையையும், தனது உடல்நிலையை தானே பாதிக்க செய்யும் விதாமாக இருப்பது, ஜாதகரின் லக்கினம் பாதக ஸ்தானத்துடன் ( லாப ஸ்தானம் )சம்பந்தம் பெறுவதை கட்டியம் கூறுகிறது, இந்நிலை தொடருமாயின் ஜாதகரின் உடல் மனம் இரண்டும் வெகுவாக பாதிக்கும்.

 7ம் வீடு பாதக ஸ்தானத்துடன் ( லாப ஸ்தானம் )சம்பந்தம் பெறுவது ஜாதகரின் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஜாதகரின் நல்வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றவர்களாக இருப்பது, ஜாதகரின் வாழ்க்கை பெரிய போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களை அடிக்கடி தரும் என்பது அச்சம் தரும் ஒரு அமைப்பாகவே கருத வேண்டி உள்ளது, மேலும் குரு திசை 8,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது, ஜாதகரின் நல்ல உறக்கத்திற்கும், மனதைரியத்திர்க்கும் வில்லனாக வந்து அமைகிறது, அனைவரிடமும் முரண்பட்ட கருத்து வேறுபாடு, வீண் மன பயம், தன்னம்பிக்கை அற்ற மன நிலை, எதிர்வாதம் செய்யும் குணம், அனைவராலும் இன்னலுக்கு ஆளாகும் தன்மை என ஜாதகரை வெகுவாக படுத்தி எடுக்கும் என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

சுக்கிரன் புத்தியும் ஜாதகருக்கு 1,7ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் (லாப ஸ்தானம் ) சம்பந்தம் பெற்று பலனை தருவது மேற்கண்ட பாதக ஸ்தான பலனை அதிகரிக்க செய்யும், 6ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு சற்று ஆறுதல் தரும், எதிர்பாராத ஜீவன மேன்மையையும், தொழில் வாய்ப்புகளையும் வாரி வழங்கும், பொருளாதார முன்னேற்றம் உண்டு, நல்ல  தொழில் வாய்ப்பு அமையும், ஜீவன வழியில் இருந்து ஜாதகர் எதிர்பாராத நன்மைகளையும் திடீர் யோகங்களையும் அனுபவிக்கும் தன்மை இருந்த போதிலும், லாபங்கள் அனைத்தும் விரையமாவதை தவிர்க்க இயலாது.

ஜாதகர் 11ம் பாவக வழியில் ( பாதக ஸ்தானம் ) இருந்து அனுபவிக்கும் இன்னல்கள் :

1,3,5,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, 1ம் பாவக வழியில் இருந்து தன்னம்பிக்கை அற்ற மன நிலை, எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்ட மன இயல்பு, தனது வாழ்க்கையை தானே பாதிக்க செய்துகொள்ளும் தன்மை, தனக்கு வரும் நன்மை மற்றும் யோகங்களை உதறி தள்ளும் மன நிலை என்ற அமைப்பிலும்.

3ம் பாவக வழியில் இருந்து சகோதர ஆதரவற்ற தன்மையையும், எடுக்கும் முயற்ச்சிகள் அனைத்திலும் தோல்விகளையும், முரட்டு தனமான செய்கைகளால் புகழுக்கு களங்கத்தையும், பயணங்களில் இன்னல்களையும், துன்பத்தையும் ஆணுபவிக்கும் தன்மையை தரும், ஜாதகரின் முயற்ச்சி இன்மையால் அனைத்து நன்மைகளும் ஜாதகரை விட்டு விலகி செல்வதை காட்டுகிறது.

5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வியினால் பலன் அற்ற தன்மையையும், மற்றவர்கள் உதவி இல்லாமல் தவிக்கும் சூழ்நிலையையும், சரியான சமயத்தில் சிந்தித்து செயல்பட இயலாத தன்மையையும், சமயோசித புத்திசாலித்தனம் இல்லாமல் வீண் விறையங்களை சந்திக்கும் தன்மையை தரும் , அறிவு பூர்வமான செய்திறன் அன்றி கற்பனை வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கும் மன நிலையை  தரும்.

7ம் பாவக வழியில் இருந்து வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூடாளிகள் மூலம் 200% விகித இன்னல்களுக்கும் துன்பத்திற்கும் ஆளாகும் சூழ்நிலையையும், வெளிவட்டார பழக்க வழக்கங்களால் அளவில்லா துன்பத்திற்கும், வியாபரத்தில் நஷ்டத்தையும், கூட்டு தொழில் மூலம் பெரிய இழப்புகளையும் விறையங்களையும் வாரி  வழங்கும்.

9ம் பாவக வழியில் இருந்து பெரியோர் பேச்சை கேளாமல் வீண் அவபெயரையும், சம்ப்பந்தம் இல்லாத விஷயங்களில் ஈடுபட்டு வீண் துன்பங்களையும் சந்திக்கும் தன்மையை தரும், உயர்கல்வி ஆராய்ச்சி கல்வி ஆகியவற்றில் பின்னடைவையும் போராட்டங்களையும் சாதிக்கும் சூழ்நிலையை தரும், தமக்கு தெரியாத புரியாத விஷயங்களில் ஈடுபட்டு குழப்பத்தையும், சந்தேக மன நிலையையும் அடைவார்.

11ம் பாவக வழியில் இருந்து, தாழ்வு மனப்பான்மை, பிற்போக்கு தனமான விஷயங்களில் அதிக ஆர்வத்தையும், நம்பிக்கை அற்ற மன நிலையையும், எந்த ஒரு விஷயத்திலும் குற்றம் மற்றும் குறை காணும் மனப்பக்குவத்தையும், எதையும் எதிர்கொள்ளும் மன ஆற்றல் அற்ற தன்மையையும், பழமையான விஷயங்களில் மூழ்கி தனது அறிவுத்திறனையும், நேரத்தையும் விரையம் செய்யும் குணத்தையும் தரும், உலகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபாட்டையும், தன்னிலை உணராமல் பிற்போக்குத்தனமான வாதங்களில் ஈடுபாட்டினையும் தரும், ஜாதகர் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்ப்பை பெறுவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும்.

எனவே சுய ஜாதகத்தில் 11ம் வீடு கொட்டி கொடுக்கும், நன்மைகளை வாரி வழங்கும் என்று கற்பனை கோட்டையில் மிதப்பதை விடுத்து, சுய ஜாதக நிலையை தெளிவாக உணர்ந்து செயல்படுவதே சால சிறந்தது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

3 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. எல்லாம் வல்ல இறையருளின் கருணையும், தங்களின் ஆசிர்வாதம் எப்பொழுதும் வேண்டி நிற்கும் மாணவன் "நன்றி அய்யா"

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு