செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - மகர லக்கினம்


 சாய கிரகங்கள் என்று போற்றப்படும் " ராகு கேது" பெயர்ச்சி, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை, லக்கினமாக கொண்ட அன்பர்களுக்கு, லக்கினத்திற்கு 8ல் ராகு பகவானும், 2ல் கேதுபகவானும் சஞ்சாரம் செய்து, இனி வரும் 18 மாதங்களுக்கு வழங்கும் பலாபலன்களை பற்றி ஆய்வு செய்வோம் அன்பர்களே!

மகர இலக்கின சிறப்பு இயல்புகள் :

மகர ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, லக்கினம் வலிமை பெறும் பொழுது, ஜாதகரின் செயல்பாடுகளில் பொறுமையும், சுய கட்டுபாடும் அதிகரிக்கும், தன்னம்பிக்கை கூடும், நேர்மை மாறாத குணமும், சத்தியத்திற்கு கட்டுப்படும் யோகமும் உண்டாகும், சிறந்த உழைப்பாளியாகவும், மற்றவர்களுக்கு உதவும் நற்குணமும், பகுத்தறிந்து செயல்படும் தன்மையையும் அதிகரிக்கும், பொதுவாழ்க்கையில் நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும் கடைபிடிக்கும் நல்லவர்களாக திகழ்வார்கள், சிந்தனையும் செயல்பாடுகளும் ஜாதகரின் தனித்தன்மையை சிறப்பாக எடுத்துக்காட்டும், உடல் ஆரோக்கியமும் மனதில் தெளிவும் ஜாதகரின் வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை ஈட்டுவதற்கு உதவி புரியும், எவரின் உதவியும் இன்றி சுயமாக முன்னேற்றம் பெரும் திறமையையும் வல்லமையும் ஒருங்கே அமைய பெற்றவர்கள் மகர இலக்கின அன்பர்கள் என்றால் அது மிகையில்லை, மேலும் ஜாதகரின் கௌரவம் அந்தஸ்து மற்றும் சுய மரியாதை குறைவில்லா வாழ்க்கை, தொழில் வெற்றிகளை ஜாதகரே சிறப்பாக நிர்ணயம் செய்வது, போன்றவை கவனிக்கத்தக்க சிறப்பு அம்சங்களாகும்.

கடந்த ராகு கேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 9ல் ராகுவும், 3ல் கேதுவும் சஞ்சாரம் செய்து பாக்கிய ஸ்தான வழியில் இருந்து சிறு சிறு இன்னல்களையும் மன போராட்டங்களையும், வீர்ய ஸ்தான அமைப்பில் இருந்து சீரிய வெற்றிகளையும் தந்து கொண்டு இருந்தது ஆனால் தற்பொழுது பெயர்ச்சி அடைந்துள்ள ராகு கேது, குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தில் கேது பகவானின் சஞ்சாரம், தங்களுக்கு சிறப்பான வாக்கு வன்மையையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் வாரி வழங்கும், கை நிறைவான வருமானம் ஸ்திரமாக வந்தவண்ணம் இருக்கும், தங்களின் எண்ணங்கள் மற்றும் லட்சியங்கள் யாவும் தங்கு தடையின்றி நிறைவேறும், எதிர்ப்புகள் அகலும், தங்களின் பேச்சுக்கு அனைத்து இடங்களிலும், மதிப்பு மரியாதை உண்டாகும், வாத திறமையால் செய்யும் தொழிலில் நிகரற்ற வருமானங்களை பெரும் யோகம் உண்டாகும், வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினர் மூலம் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை சந்திக்கும் யோகம் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் கூட்டு தொழில் முயற்ச்சிகள் தங்களுக்கு அபரிவிதமான யோகங்களை தங்கு தடையின்றி வாரி வழங்கும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு இது ஒரு பொற்க்காலம் என்றே சொல்லாம், அரசியலில் வெற்றி பதவி உயர்வு, கௌரவ பதவிகள் தேடிவரும் வாய்ப்பு என தங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும், புதிய நம்பிக்கையையும் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் வாரி வழங்குவார், மேலும் இதுவரை திருமண தடைகளை சந்தித்து கொண்டு இருந்த அன்பர்களுக்கு சிறப்பான இல்லற வாழ்க்கை அமையும், வருமானம் பல வழிகளில் இருந்து வரும்.

8ல் சஞ்சாரம் செய்யும் ராகுவினால் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து குவியும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை உண்டாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டங்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும், கூட்டாளிகள் மற்றும் நண்பர்களின் உதவியும், ஆதரவும் தங்களுக்கு மிகப்பெரிய அளவிலான வெற்றிகளை  வாரி வழங்கும், புதிய சொத்துகள் அல்லது புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், அதிரடியான முன்னேற்றங்களையும் தவிர்க்க இயலாது, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் தங்களின் வாழ்க்கையில் மிக பெரிய அந்தஸ்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், இன்சூரன்ஸ் துறையில் உள்ள அன்பர்களுக்கு, எதிர்பாராத வருமானங்களும், தன்னிறைவான பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும், அதிகபடியான உடல் உழைப்பை தவிர்க்க இயலாது  இருப்பினும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும், புதிய சூழ்நிலைகளும் புதிய மனிதர்களின் அறிமுகமும் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய யோகத்தை வாரி வழங்கும், பங்கு சந்தையில் முதலீடு செய்த அன்பர்களுக்கு திடீர் வரவு உண்டாகும், இதுவரையில் நிலுவையில் இருந்த கடன் அடைபடும், உயில் மூலம் லாபமும் அதிர்ஷ்டமும் உண்டாகும், புதிய தொழில் வாய்ப்புகள் அறிமுகமாகும், 8ல் ராகுவின் சஞ்சாரம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்கும்.

மொத்தத்தில் எதிர்வரும் ராகுகேது பெயர்ச்சி மகர இலக்கின அன்பர்களுக்கு 100% விகிதம் வருமான வாய்ப்பினையும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டத்தையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மகர இலக்கின அன்பர்கள் அனைவரும் ராகுகேது பெயர்ச்சியால் குடும்ப ஸ்தானம் மற்றும் ஆயுள் ஸ்தான வழியில் இருந்து மிகுந்த நன்மைகளை பெறுகின்றனர் என்பது  கவனிக்க தக்க அம்சமாகும்.

குறிப்பு :

மேற்கண்ட பலாபலன்கள் மகர இலக்கின அன்பர்களுக்கு, தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02 மற்றும் 08ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே 100% சதவிகிதம் நடைபெறும், எனவே மகர இலக்கின அன்பர்கள் சுய ஜாதகத்தில் தற்பொழுது நடைபெறும் திசாபுத்திகள் 02,08ம் பாவக பலனை ஏற்று நடத்துகிறதா? என்பதில் தெளிவு பெறுவது அவசியமானதாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

6 கருத்துகள்:

  1. ஐயா.ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் பலன்களை தான் தருமா?

    பதிலளிநீக்கு
  2. கோச்சாரப் பலன்களை ராசிக்குத் தானே பார்க்கவேண்டும்
    லக்னத்திற்க்கு பார்ப்பது சரியாக வருமா??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவருக்கு சுய ஜாதக பலன் காண வேண்டுமெனில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலாபலன்கள் காண முற்படுவதே சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகவும் துல்லியமான, சரியான ஜாதக பலன்களை எடுத்துரைக்க இயலும், மாறாக ராசியை அடிப்படையாக பலன் காண்பது சம்பந்த பட்ட அன்பரின் மனதிற்கு இசைவான பலன்களையே கூற இயலும். சுய ஜாதக பலன்கான லக்கினமே அடிப்படையாக அமையும்.

      வாழ்த்துகள்.

      நீக்கு
  3. வணக்கம் Redfort Sir edtion யை முழுமையாக. படியுங்கள் Edition. முடிவில் லக்னத்ற்க்கு தற்போழுது நடக்கும் தசா புத்தியோடு தொடர்பு பு பெரும் பொழுது பலன் மா றுபடும்

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி அய்யா. தாங்கள் சூக்சுமமாக காட்டிய வழியை அறிந்து கொண்டேன். கட்டாயம் அதன்படி முயற்சிக்கிறேன்.

    மிக பிரபலமான டென்னிஸ் வீரரான பெடெரெர் சாதக குறிப்பை கீழே கொடுத்துள்ளேன். பழைய மரபு வழி சாதகத்தின் மூலமாக கட்டாயம் இந்த சாதகம் ஏன் இவ்வளவு உயர் நிலை பெற்றது என விளக்கவே முடியாது. நமது உயர் வழி சார சோதிடத்தில் இந்த சாதகம் ஏன் இந்த அளவு உச்ச நிலையை அடைந்தது என தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது ஒரு பதிவு இட இயலுமா? கட்டாயம் இது ஒரு ஆர்வத்தை தூண்டக்கூடிய சாதகம்.

    வாழ்க்கையில் இவர் எட்டாத இடம் இல்லை. ஆனால் சாதகமோ ஒரு சாதரணமான ஒன்று (மரபு வழியில் பார்க்கும் போது).
    Roger federer:
    Born: August 8, 1981, 8:40 AM
    In: Basel (Switzerland)

    பதிலளிநீக்கு