Wednesday, September 28, 2016

மங்களங்கள் நல்கும் சர்வ மஹாளய அமாவாசை வழிபாடு !

 

ஒருவர் மேற்கொள்ளும்  எந்த ஒரு நல்ல காரியங்களிலும் வெற்றி பெற அவருக்கு சுய அறிவு திறனின் வல்லமையும், இறைஅருளின் கருணையும், பித்ருக்களின் ஆசியும் சரி விகிதத்தில் அமைந்து இருப்பின், நிச்சயம் 100 சதவிகித வெற்றிகளை பெற்று தரும், இதை சுய ஜாதக ரீதியாக லக்கினம் எனும் முதல் பாவகமும், பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமும், பாக்கிய ஸ்தானம் எனும் ஒன்பதாம் பாவகமும் நிர்ணயம் செய்கின்றது, ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் சுபயோகங்களை நல்கும் "கோண" வீடுகளாக வர்ணிக்க படுகிறது, மேற்கண்ட பாவகங்கள் ஒருவரது சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருப்பின் சம்பந்த பட்ட ஜாதகருக்கு வரும் இன்னல்கள் துன்பங்கள் நீங்குவதற்கு, ஜாதகரின் அறிவு, குல தேவதையின் கருணை, பித்ருக்களின் ஆசி, ஆகியவை முழு வீச்சில் செயல்பட்டு ஜாதகருக்கு சரியான, அவருக்கு உகந்த நன்மையான பலன்களை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடும், தீமைகளின் தாக்கம் ஜாதகருக்கு யாதொரு பாதிப்பையும் தாராது என்பது கவனிக்க தக்க விஷயம் ஆகும்.

ஜெனன ஜாதகத்தில் மேற்கண்ட பாவகங்கள் பாதிக்கபட்டோ, அல்லது பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றோ இருப்பின், சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் வரும் இன்னல்களின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கும், குறிப்பாக ஜாதகர் மேற்கொள்ளும் எந்த ஒரு முயர்ச்சியும் பலன் தாராது, உதவி செய்ய யாரும் அற்ற சூழ்நிலையை உருவாக்கும், அனைவராலும் தொல்லை துன்பங்களை சந்திக்கும் நிலை, எதிர்பாராத இன்னல்கள், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளை தரும், உடல் மனம் இரண்டும் கடுமையாக பாதிக்கும், வீண் விரையங்களை தவிர்க்க இயலாது, தொழில் முடக்கம், திடீர் நஷ்டம், முன்னேற்ற தடைகள், நல்ல வாழ்க்கை துணை அமையாதது, குழந்தை பாக்கியம் இன்மை, நல்ல ஆண் வாரிசு அமையாத நிலை, குடும்பத்தில் நிம்மதி அற்ற சூழ்நிலை, தீய பழக்கத்திற்கு ஆர்படுதல், மற்றவர்களுக்கு கட்டுப்பட்டு சுய தன்மையை இழத்தல், எந்த ஒரு காரியத்திலும் முன்னேற்றம் இன்மை, தோல்வி மற்றும் அதிக மன கவலை, மன அழுத்தம் போன்ற இன்னல்களுக்கு ஆளாகி தனது வாழ்க்கையை தானே பாதிக்க செய்துகொள்ளும் சூழ்நிலையை தந்து விடும், குறிப்பாக ஜாதகரின் வாழ்க்கையில் சுப நிகழ்வுகளுக்காக மிகப்பெரிய போராட்டங்களையும், மிகுந்த இன்னல்களையும் ஜாதகர் எதிர்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும்.

மேற்கண்ட இன்னல்களை தவிர்க்க எதிர்வரும் "சர்வ மஹாளய அமாவாசை வழிபாடு" அனைவருக்கும் நன்மைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் நல்கும், குறிப்பாக சுய ஜாதகத்தில் லக்கினம், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும், 1,5,9ம் வீடுகள் பாதிக்கப்பட்ட அன்பர்கள், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசை தினத்தில் குல தேவதை வழிபாட்டினை முறையாக செய்வதும், பித்ரு வழிபாட்டினை முறையாக செய்வதும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சகல நன்மைகளையும் வாரி வழங்கும், இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் தமது குல தெய்வ கோவில்களிலும், இஷ்ட தெய்வ கோவில்களிலும் செய்வது சால சிறந்தது, இதனால் சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நல்ல உடல் ஆரோக்கியம், மனதில் தைரியம் மற்றும் மனஉறுதி கிட்டும், சுய ஜாதகத்தில் உள்ள அவயோகங்கள் வெகுவாக தனது தாக்கத்தை குறைத்துகொள்ளும், சிந்தனையும் செயல்பாடும் எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனை, வருமுன் உணரும் அறிவு திறன், நல்லவர் சேர்க்கை என  சகல அமைப்புகளில் இருந்தும் முன்னேற்றங்கள் வந்து சேரும்.

 ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படையில் இருந்து அமைய வேண்டிய, உடல் நலம், கல்வி அறிவு,நல்ல வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், பொருத்தமான வாழ்க்கை துணை, சிறந்த வாரிசு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, சொத்து சுகம், வண்டி வாகன சேர்க்கை, உயர் பதவி, சமூக அந்தஸ்து, செல்வாக்கு, எதிர்ப்புகள் அற்ற யோக வாழ்க்கை, செய்யும் காரியங்களில் வெற்றி வாய்ப்புகள் என சகல நலன்களையும் வாரி வழங்கும் வல்லமை "மஹாளய அமாவாசையில்" செய்யும் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாடு இரண்டிற்கும் நிச்சயம் உண்டு எனலாம், எந்த ஒரு வேலை இருப்பினும் முறையாக மேற்கண்ட வழிபாட்டினை கடைபிடிப்பது அவசியமாகிறது என்பதை கருத்தில் கொள்க அன்பர்களே, ஏனெனில் மேற்கண்ட வழிபாடுகள் வருடம் தோறும் செய்து வரும் அன்பர்களுக்கு வரும் இன்னல்கள் யாவும் நிச்சயம் சூரியனை கண்ட பனித்துளி போல் காணாமல் போக அதிக வாய்ப்புகள் உண்டு, மேலும் நமது வாழ்க்கையில் நல்ல ஜீவன முன்னேற்றத்தையும், சரளமான வசதி வாய்ப்பினையும், நல்ல குழந்தை பாக்கியத்தையும் நல்கும், எதிர்பாராமல் நடைபெறும் இன்னல்களில் இருந்து உடனடி தீர்வுகள் கிடைக்கும், உறவுகள் மற்றும் அனைவரின் ஆதரவும் கிடைக்க பெறுவீர்கள், இல்லற வாழ்க்கையில் பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூட வாய்ப்பை ஏற்படுத்தி தரும், பொதுமக்கள் ஆதரவும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் உண்டாகும்.

தொழில் ரீதியான இன்னல்களில் உள்ள அன்பர்களுக்கு மேற்கண்ட வழிபாடுகள் சிறப்பான வெற்றி வாய்ப்பினை நல்கும், எதிர்பாராத முன்னேறமும் செல்வ சேர்க்கையும் கிடைக்க பெறலாம், புதிய முயற்ச்சிகள், புதுவித அணுகு முறைகளை கடைபிடித்து ஜீவன ரீதியான வெற்றிகளை 100 சதவிகிதம் பெற வாய்ப்பை ஏற்படுத்தி தரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும், நல்லோர் ஆதரவு பரிபூர்ணமாக கிடைக்கும், முன்னோர்கள் ஆசியும் வழிகாட்டுதல்களும் தங்களின் வாழ்க்கையில் சகல யோகத்தையும் வாரி வழங்கும், இதுவரை தடைபட்ட எந்த ஒரு காரியங்களும், சிறப்பான வெற்றிகளை நல்கும், குடும்பத்தில் கஷ்டம் நீங்கும், திடீர் இழப்புகள் மற்றும் வீண் விரையங்கள் தவிர்க்கப்படும், விபத்து மருத்துவ செலவினங்கள் வெகுவாக குறையும், அனைத்து அமைப்புகளில் இருந்தும் முன்னேற்றமும் நன்மைகளும் நடைமுறைக்கு வரும் என்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் அமாவாசை தினத்தில் குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ரு வழிபாட்டினை முறையாக செய்து சகல நலன்களையும் பெருக.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

No comments:

Post a Comment