பின்தொடர...

Friday, December 16, 2016

வாழ்க்கையின் முன்னேற்றங்களை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தின் பங்கு !


"ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின்"

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

அந்த கால நேரத்தை துல்லியமாக அறிந்துணர்ந்து செயல்பட உதவுவதே, ஜோதிட சாஸ்த்திரம் என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தை கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறக்கூடிய நன்மை தீமை, யோக அவயோகங்களின் தன்மையை பற்றி ஜோதிடகணிதம் கொண்டு தெளிவுற கூற இயலும், குறிப்பாக ஒரு ஜாதகரின், உடல் நலம், மனநலம், கல்வி, தொழில், திருமணம், பொருளாதர முன்னேற்றம், புத்திரபாக்கியம், சொத்துசுகம், வண்டி வாகன  யோகம், புகழ் அந்தஸ்து, மனநிம்மதி மற்றும் ஆன்மீக வெற்றி என ஜாதகர் ஜாதகர் வினவும் ஒவ்வொரு கேள்விக்கும் துல்லியமான பதில்களை நல்குவதே, ஜோதிடசாஸ்த்திரம், சுய ஜாதக ஆலோசனையின் அடிப்படையில் மேற்கொள்ளும் காரியங்கள் நிச்சயம் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தன்னிறைவான யோக வாழ்க்கையை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, கீழ்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில், வழங்கும் ஆலோசனை பற்றியும், அவரது கேள்விகளுக்கு உண்டான பதில் பற்றியும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


ஜாதகரின் கேள்வி :

தனது ஜாதகத்தில் உள்ள பாவகங்களின் வலிமை ?

1,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பாக்கிய ஸ்தான வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும்.

2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களையும்.

3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து மிகுந்த யோக பலன்களையும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஆயுள் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் ( ஆயுள் பாவகம் சர நெருப்பு தத்துவ ராசி என்பதால் ஜாதகருக்கு பூர்ண ஆயுள் என்றபோதிலும் பித்தம் சார்ந்த உடல் தொந்தரவுகளை ஜாதகர் வாழ்நாள் முழுவதும் சந்திப்பார் )

11ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாப ஸ்தானம் எனும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிதம் மிஞ்சிய யோக பலன்களை அளவில்லாமல் வாரி வழங்கும்.

எனவே ஜாதகர் 3,5,7,11ம் வீடுகள் வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளையும்,

2,4,6,8,10,12ம் வீடுகள் வழியில் இருந்து இன்னல்களையும், 1,9ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களையும் அனுபவிக்கும் சூழ்நிலையை தரும்.


தற்பொழுது நடைபெறும் திசா புத்தி வழங்கும் பலன்கள் ?

தற்போழுது நடைபெறும் குரு திசை ( 14/11/2003 முதல் 14/11/2019 வரை ) ஜாதகருக்கு 2,4,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது ஜாதகரின் வாழ்க்கையில் குடும்பம்,சுகம்,சத்ரு,ஜீவனம் மற்றும் விரைய ஸ்தான அமைப்பில் இருந்து ஸ்திரமான இன்னல்களை தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கின்றது இதனால் ஜாதகரின் கல்வி பாதிக்கப்படும், வண்டி வாகனங்கள் மூலம் விரைய செலவு, உடல் உபாதை, விபத்து, தொழில் வேலை வாய்ப்பு இன்மை, மனஅழுத்தம் மற்றும் அதிக மன போராட்டங்களை வழங்கும்.

தற்போழுது நடைபெறும் செவ்வாய் புத்தி( 14/07/2016 முதல் 20/06/2017 வரை ) 3,5,7ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது, வீரியம், பூர்வபுண்ணியம், களத்திர ஸ்தான வழியில் இருந்து எடுக்கும் முயற்ச்சி மற்றும் காரியங்களில் வெற்றி, குல தேவதை மற்றும் புத்திசாலித்தனம் மூலம் யோகம், நண்பர்கள் மற்றும் எதிர்ப்பால் இன அமைப்பினர் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டாகும், எதிர் வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது.

ஜாதகருக்கு உகந்த  தொழில்  

சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்களான பாக்கியம் மற்றும் லாப ஸ்தானம் தொடர்பான ஜீவன வாழ்க்கையை ஜாதகர் கூட்டாகவோ, அல்லது அடிமை தொழிலாகவோ ஏற்று ஜீவனம் முன்னேற்றம் பெறுவதே உகந்தது, குறிப்பாக ஜாதகர் ஆசிரிய பணி அல்லது வாக்கு வன்மையை தொழிலாக ஏற்று ஜீவனம் செய்யலாம், உணவு பொருட்கள் சார்ந்த தொழிலை தேர்வு செய்து கூட்டு முயற்சியில் நலம் பெறலாம், நீர் தத்துவம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு பன்மடங்கு லாபம் தரும் இருப்பினும் தனிப்பட்ட முறையில் தொழில் செய்வது உகந்தது அல்ல கூட்டு முயற்ச்சியே நல்ல பலன் தரும், தானிய வியாபாரம் ஜாதகரின் வாழ்க்கையில் சகல நலன்களையும், மிதமிஞ்சிய முன்னேற்றங்களை வாரி வழங்கும்.

குறிப்பு :

எதிர்வரும் சனி திசை ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்த்துவது உகந்தது அல்ல என்பதை ஜாதகர் உணர்வது அவசியமாகிறது, மேலும் தனது குடும்பத்தில் உள்ள பெரியோர் சொல்லும் வார்த்தைகளை மதித்து நடந்து வாழ்க்கையில் நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

No comments:

Post a Comment