திங்கள், 19 டிசம்பர், 2016

ஏழரை சனியின் தாக்கமா? சுய ஜாதக வலிமை இன்மையா ?



 பொதுவாக நாம் அதிக அளவில் இன்னலுறும் நேரங்களில் ஜோதிட ஆலோசனை பெரும் பொழுது பெரும்பாலும் சந்திரனுக்கு 12,1,2ல் சனி பகவான் சஞ்சாரம் செய்துகொண்டு இருப்பின், ஏழரை சனி காலம் இதன் காரணமாகவே தாங்கள் அதிகம் இன்னல்களை சந்திக்க வேண்டி  உள்ளது, எனவே சனி ப்ரீத்தி பரிகாரங்களை மேற்கொள்ளுங்கள் என்ற வழிகாட்டுதல்களை "ஜோதிடர்கள்" வழங்குவது உண்டு, இந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, ஒருவர் இன்னல்களை சந்திப்பதற்கும், சனி ராசிக்கு 12,1,2ல் சஞ்சாரம் செய்வதற்கும் யாதொரு சம்பந்தம் இல்லை என்பதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு படுத்த விரும்புகின்றோம், ராசிக்கு நவகிரகங்களின் சஞ்சார நிலையை கருத்தில் கொண்டு பலன் நிர்ணயம் செய்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பான பலாபலன்களை கூறுவதற்கு வழிவகுத்துவிடும், லக்கினத்தை அடிப்படையாக கொண்டும், 12 பாவகங்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் அறிய முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகரின் வாழ்க்கையில் நன்மைகளையும், சரியான திட்டமிடுதல்கள் மூலம் முன்னேற்றங்களையும் பெறுவதற்கு வழிவகுக்கும்.


லக்கினம் : ரிஷபம்
ராசி : தனுசு
நட்ஷத்திரம் : மூலம்

ஒருவருக்கு கடுமையான நெருக்கடிகளையும், இன்னல்களையும் வழங்குவது, ராசிக்கு சில இடங்களில் இருந்து சஞ்சாரம் செய்யும் கிரகங்களின் தாக்கம் என்பது உண்மையல்ல, ஒருவருக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் ஜாதகரின் நிலை வெகு பரிதாபத்திற்க்கு உரியதாக மாறிவிடும், கிரகங்களின் கோட்சார வழங்கும் இன்னல்களை விட ( ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு ) பல நூறு மடங்கு இன்னல்களை தந்து விடும், மேற்கண்ட ஜாதகருக்கு  தற்போழுது நடைபெறுவது சந்திரன் திசை, இவர் தரும் பலன்களை கருத்தில் கொண்டு இந்த ஜாதகத்தை ஆய்வு செய்வோம்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகருக்கும், சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற கூடாது, அப்படியே சம்பந்தம் பெற்றாலும், நவ கிரகங்களின் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாமல் இருப்பின் ஜாதகர் யோகம் பெற்றவரே, மாறாக நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் பாதக ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், ஜாதகரின் கத்தி அதோ கதிதான், சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவார், எவராலும் மேற்கண்ட பாதிப்பில் இருந்து காப்பாற்ற இயலாது என்பதே உண்மை நிலை.

மேற்கண்ட ஜாதகருக்கு சந்திரன் திசை ( 24/07/2011 முதல் 23/07/2021 வரை ) நடைமுறையில் உள்ளது, நடைபெறும் சந்திரன் திசை ஜாதகருக்கு 3,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றும், முறையே விரையம், பாதக ஸ்தான பலனை நடத்திக்கொண்டு இருக்கின்றது, எனவே ஜாதகர் மூன்றாம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் தோல்விகளையும், வீரியமிக்க செயல்திறன் அற்ற சூழ்நிலைகளையும் வழங்குகிறது, மேலும் சுய முயற்சி தடை பெரும், நிம்மதி அற்ற சூழ்நிலையை உருவாக்கும், 12ம் பாவக வழியில் இருந்து மனநிம்மதி இழப்பு, வீண் விரையம், அதிக மன போராட்டம், தெளிவற்ற வாழ்க்கை முறை, அதிக அளவிலான தொல்லைகள், பொருள் இழப்பு, சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியின்மையை தரும், மேற்கண்ட இன்னல்கள் ஜாதகருக்கு 100% விகிதம் நடைமுறைக்கு வரும், அடுத்து பாதக ஸ்தான தொடர்பை பெரும் லாப ஸ்தான வழியில் இருந்து ஜாதகரின் ஆசை மற்றும் எண்ணங்கள் யாவும் நிராசையாக மாறிவிடும், தன்னம்பிக்கை வெகுவாக கெடும், மூட நம்பிக்கை மற்றும் பிற்போக்கு தனமான எண்ணங்களால் ஜாதகர் சூழப்பட்டு தனது வாழ்க்கையே தானே பாதிப்பிற்கு உள்ளாக்குவார், ஜாதகருக்கு  வரும் இன்னல்களின் தாக்கம் பெரிய அளவிலான அமைப்பில் இருக்கும், துன்பத்தில் ஜாதகர் அனலில் இட்ட புழு போல் தவிக்க நேரும், சுய ஜாதகத்தில் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை குறிக்கும் 11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது, ஜாதகர் அதிர்ஷ்டமற்ற வாழ்க்கையை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், மேலும் இதன் பாதிப்பு ஜாதகருக்கு 11ம் பாவக வழியில் இருந்து  200% விகிதம் இருக்கும் என்பது வருந்தத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர்கள் ஜாதகருக்கு ஏழரை சனியின் தாக்கத்தினாலே பெரும் இன்னல்களை சந்தித்து கொண்டு இருக்கின்றார் என்பதாக கூறியிருக்கின்றனர், நடைபெறும் சந்திரன் திசை தரும்  விரையம் மற்றும் பாதக ஸ்தான பலனை பற்றி யாதொரு விஷயமும் கூறவில்லை என்பது கவனிக்க தக்கது, உண்மையில் மேற்கண்ட ஜாதகருக்கு விரைய ஸ்தானம் மற்றும் பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் சந்திரன் திசையே 200% சதவிகித இன்னல்களை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றார், எனவே  ராசியை அடிப்படையாக கொண்டும் நவ கிரகங்களின் கோட்சர நிலையை கொண்டும் பலன் காண்பதை தவிர்த்து, சுய ஜாதக பாவக வலிமையை கருத்தில் கொண்டும், நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக வலிமையை கருத்தில் கொண்டும், அந்த பாவகங்களுக்கு நவகிரகங்களின் கோட்சாரம் வழங்கும் பலாபலன்களை கருத்தில் கொண்டும் சுய ஜாதக பலன் காண முற்படுவதே சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு துல்லியமான பலாபலன்களை கூற உதவி புரியும்.


வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக