திங்கள், 5 டிசம்பர், 2016

சுய ஜாதகத்தின் படி மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமா ?


 "நிச்சயமாக" இதில் மாற்று கருத்து இல்லை எனலாம், ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் வல்லமை அவருக்கு வரும் யோகம் நிறைந்த மனைவி மூலம் சாத்தியப்படும் என்பதிற்கு நிறைய உதாரணங்கள் உண்டு, தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர், வாழ்க்கை துணையின் ஜாதக வலிமையை கருத்தில் கொண்டு தேர்வு செய்யும் பொழுது தனது ஜாதகம் வலிமையற்று இருப்பினும், தனது வாழ்க்கை துணையின் ஜாதக வலிமைக்கு ஏற்ற நன்மைகளையும், யோகங்களையும் நிச்சயம் பெற இயலும், மாறாக வாழ்க்கை துணையின் ஜாதகம் வலிமை அற்று இருப்பின் ஜாதகருக்கு எவ்வித யோக பலன்கள் சுய ஜாதகத்தில் இருப்பினும் அதன் பலாபலன்கள் ஜாதகருக்கு பரிபூர்ணமாக நடைமுறைக்கு வாராது என்பதே முற்றிலும் உண்மை, இதை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!


லக்கினம் : மேஷம் 
ராசி : சிம்மம் 
நட்ஷத்திரம் : மகம் 2ம் பாதம் 

ஜாதகிக்கு 1,3,5,9ம் வீடுகள் உயிர் உடல் என்று வர்ணிக்கப்படும் முதல் பாவகமான லக்கினத்துடன் சம்பந்தம் பெறுவது சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், அடுத்து 2ம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படும் 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஆனால் 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் மிகுந்த இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஜாதக 8,12ம் பாவக வழியில் இருந்து 80% விகித இன்னல்களையும், 11ம் பாவக வழியில் இருந்து 200% சதவிகித இன்னல்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும்.

அடிப்படையில் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய சுய ஜாதகத்தில் குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2ம் வீடு, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் வீடு, களத்திர ஸ்தானமான 7ம் வீடு, ஆயுள் ஸ்தானமான 8ம் வீடு, விரைய ஸ்தானமான 12ம் வீடு ஆகியவை மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியம், மேலும் லாபம் மற்றும் அதிர்ஷ்டம் என்று அழைக்கப்படும் 11ம் வீடு மிக மிக வலிமையுடன் இருப்பது அவசியமாகிறது, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுவது குடும்பத்தில் ஒற்றுமையையும், நல்ல வருமான வாய்ப்பையும், பூர்வ புண்ணியம் வலிமை பெறுவது நல்ல வாரிசையும், சிறந்த அறிவு திறனையும், களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது கணவருடன் அன்பு நிறைந்த ஒற்றுமை, கருத்து வேறுபாடு அற்ற யோக வாழ்க்கை, இணை பிரியா நிலை, பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளும் மன நிலை மற்றும் மனஒற்றுமை, தாம்பத்திய வாழ்க்கையில் வெற்றியையும், ஆயுள் ஸ்தானம் வலிமை பெறுவது தனக்கு நல்ல ஆயுளையும் பூர்ண சுமங்கலி யோகத்தையும், தன கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையையும், திருமணதிற்கு பிறகு வாழ்க்கையில்  பெரும் திடீர் முன்னேற்றத்தையும், விரைய ஸ்தானம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் குறையில்லாத நிலையையும், திருப்தியான வாழ்க்கை மற்றும் மனநிறைவையும், மனநிம்மதியையும், குழப்பம் அற்ற மனநிலை மற்றும் நிம்மதியான இல்லற வாழ்க்கையையும் சிறப்பாக வழங்கும்.

லாப ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகியின் அதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் தன்மையை உறுதி படுத்தும், மேலும் ஜாதகி கொண்டுள்ள தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, வரும் எதிர்ப்புகளை கையாளும் தன்மை, மற்றவர்களுடன் உண்டான நன்னடத்தை, அனுசரித்து செல்லும் குணம், குடும்பம் மற்றும் வாழ்க்கை துணையின் நிலையறிந்து செயல்படும் சமோயோசித புத்திசாலித்தனம், எந்த ஒரு சூழ்நிலையையும் சிறப்பாக கையாளும் வல்லமை, ஒரு திறமைமிக்க நிர்வாகியாக செயல்படும் யோகம் என்ற வகையில் யோக பலன்களை தரும்.

ஆனால் மேற்கண்ட ஜாதகியை திருமணம் செய்த அன்பரின் சுய ஜாதகம் சற்று வலிமையுடன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை பல பிரச்சனைகளுக்கு இடையில் ஓடிக்கொண்டு இருக்கின்றது, இருப்பினும் ஜாதகியின் கணவர் பல பொருளாதார சிக்கல்களை திருமணம் ஆன சில வருடங்களிலேயே அனுபவித்து கொண்டு இருப்பது கண்கூடான உண்மை, ஜாதகிக்கு சுக ஸ்தான பாதிப்பு நல்ல குணமற்ற தன்மையையும், சுக போகங்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலையையும், சத்ரு ஸ்தான பாதிப்பு கடன், எதிரி, உடல்நல பாதிப்பையும், களத்திர ஸ்தான பாதிப்பு வாழ்க்கை துணையுடன் உண்டான புரிதல் மற்றும் இணக்கம் அற்ற தன்மையையும், தாம்பத்திய வாழ்க்கையில் இன்னல்களையும், ஆயுள் ஸ்தான பாதிப்பு கணவனுக்கு பேரிழப்புகள், மருத்துவ செலவினம் மற்றும் பொருளாதார சிக்கல்களையும், ஜீவன ஸ்தான பாதிப்பு கௌரவம்,அந்தஸ்து, சுயமரியாதை அற்ற சூழ்நிலைகளையும், சிறப்பான தொழில் முன்னேற்றம் இன்மையையும், விறைய ஸ்தான பாதிப்பு தாம்பத்திய வாழ்க்கையில் நிம்மதி இன்மையையும், அதிக அளவிலான மன போராட்டம், மன உளைச்சல், மன நோய் மற்றும் மனபிரழ்ச்சியை வழங்கி கொண்டு இருக்கின்றது, இதற்க்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல் தற்பொழுது நடைபெறும் சூரியன் திசையும் ( 06/05/2012 முதல் 07/05/2018 வரை ) எதிர் வரும் சந்திரன் திசையும் ( 07/05/2018 முதல் 06/05/2018 வரை ) 4,6,7,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தானமான 12ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, ஜாதகியின் இல்லற வாழ்க்கைக்கு உகந்தது அல்ல என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.

மேலும் ஜாதகியின் லாப ஸ்தான பாதிப்பு ( பாதக ஸ்தான தொடர்பை பெறுவதால் ) ஜாதகியின் வாழ்க்கையையே மிகப்பெரிய கேள்விக்குறியாக மாற்றும், முரண்பட்ட சிந்தனை, பிற்போக்குத்தனமான செய்கைகள், முட்டாள்தனம், தன்னுடன் உள்ளவர்களை அனுசரித்து செல்லும் பக்குவம் இன்மை, அனைத்திற்கும் கோவம் கொள்ளும் குணம், சிறு விஷயத்தையும் பெரிதாக்கும் தன்மை, குற்ற உணர்ச்சி, குற்றம் கண்டுபிடிக்கும் தன்மை என ஜாதகியே தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உண்டு, எனவே சுக்கிரன் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷம காலங்களில் நடைபெறும் பாதக ஸ்தான பலனில் இருந்து விடுபட சரியான தீர்வுகளை தேடவில்லை எனில், இல்லறவாழ்க்கை ஜாதகிக்கு கடுமையாக பாதிக்கும், ஜாதகியின் கணவனையும் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்பதுமட்டும் உண்மை.

குறிப்பு :

திருமணம் செய்துகொள்ளும் முன் வரன் வது இருவரும், தனது ஜாதக வலிமையையும், தனது வாழ்க்கை துணையாக வர இருக்கும் ஜீவனின் ஜாதகத்தையும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைவது சாலச்சிறந்தது, மாறாக 10 பொருத்தத்தை மட்டும் கருத்தில் கொண்டு இல்லற வாழ்க்கையை தேர்வு செய்யும் பொழுது சுய ஜாதகம் வலிமை பெற்று இருப்பின் யாதொரு இன்னல்களும் இல்லை, சுய ஜாதகம் வலிமை இழப்பின், தாம்பத்திய வாழ்க்கை சில நாட்களிலேயே மனக்கசப்பை ஏற்படுத்தி, மணவாழ்க்கையில் பிரிவைத்தந்துவிடும். ( மேற்கண்ட ஜாதகி தனது ஜாதக நிலையை உணர்ந்து தனது கணவனுக்கும் உறவுகளுக்கும் பணிந்து நடந்து சிறப்பாக இல்லற வாழ்க்கையை நடத்த வேண்டும், அதற்க்கு ஜாதகி முறையான பிரீதி பரிகாரங்களை நாடுவதே நலம் தரும் )

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக